Friday, July 20, 2012

முத்தொள்ளாயிரம் - விழியில் விழுந்து இதயம் நுழைந்து


முத்தொள்ளாயிரம் - விழியில் விழுந்து இதயம் நுழைந்து


தோழி: "சரி, என்ன வெட்கம்...கொஞ்சம் நிமிந்து பாரு என்ன...அடடா...ரொம்ப தான் வெட்கப்படுறா"
அவள்: ம்ம்ம்ம் 
தோழி: சரி கண்ணை திற ... வெட்கப் படுற உன் கண்ண நான் பாக்கட்டும்
அவள்: ம்ம்ம்ம்
தோழி: அட இது என்ன புது ஸ்டைல்...முகத்த கையால மறைச்சிகிட்டு...சினிமா கதாநயாகி மாதிரி...
அவள்: கைய எடுக்க மாட்டேன்...எடுத்தா கண் வழியா என் நெஞ்சுக்குள் போன அவன் அதே மாதிரி வெளிய போயிருவான்...
தோழி: சரி தான் ... ரொம்ப தான் முத்தி போச்சு காதல் பைத்தியம்...இன்னைக்கே உங்க அம்மா கிட்ட சொல்லிற வேண்டியது தான்......

பாடல்: 

தளையவிழும் பூங்கோதைத் தாயரே! ஆவி
களையினும்என் கைதிறந்து காட்டேன் - வளைகொடுபோம்
வன்கண்ணன் வாள்மாறன் மால்யானை தன்னுடன்வந்து
என்கண் புகுந்தான் இரா!


தளையவிழும் = தளர்ந்து விழும்
பூங்கோதைத் தாயரே! = பூ மாலை போன்ற மென்மையான பெண்களே (செவிலித் தாய் அல்லது தோழி)
ஆவி களையினும் = என் உயிரே போனாலும்
என் கைதிறந்து காட்டேன் = என் கையை திறந்து என் முகத்தை காட்டமாட்டேன்
 வளைகொடுபோம் = என் வளையல்களை கொண்டு போகும் (அவன் பிரிவால் மெலிந்து, வலையகள் நெகிழ்ந்து விழுவது)
வன்கண்ணன் = சரியான போக்கிரி
வாள்மாறன் = வாள் சண்டையில் வல்லவன்
மால்யானை = பட்டத்து யானை
தன்னுடன்வந்து = மேல் வந்து
என்கண் புகுந்தான் இரா! = என் கண் வழி புகுந்தான். கண்ணை திறந்தால், இருக்காமல் ஓடி விடுவான்...எனவே உயிரே போனாலும் கையை திறக்க மாட்டேன்...



No comments:

Post a Comment