Wednesday, April 2, 2014

திருக்குறள் - அறிவும் நட்பும்

திருக்குறள் - அறிவும் நட்பும் 


அறிவு என்ன செய்யும் ?

கணக்குப் போடுமா ? கவிதை எழுதுமா ?  பெரிய பெரிய காரியங்களைச் செய்யுமா ? ஒருவன் அறிவுடையவன் என்றால் அவன் என்னென்ன காரியங்கள் செய்வான் ?

அது தெரிந்தால் நாமும் அதுபோல செய்யலாம் ....

வள்ளுவர் சொல்லுகிறார் - நல்லவர்களை , உயர்ந்தவர்களை ஒன்றி இருக்கும் அறிவு. அப்படி சிறந்தவர்களை நட்பாகக் கொண்ட பின் , அதை விட்டு விலகாமல் இருக்கும்.

பாடல்

உலகந் தழீஇய தொட்ப மலர்தலுங் 
கூம்பலு மில்ல தறிவு.

 சீர் பிரித்த பின்

உலகம் தழுவியது ஒட்பம் மலர்தலும் 
கூம்பலும் அல்ல அறிவு 


பொருள்

உலகம் = உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டு என்பது நிகண்டு. உலகத்தில் உள்ள உயர்ந்தவர்களை, சிறந்தவர்களை, அறிவுள்ளவர்களை

தழுவியது = அவர்களோடு ஒன்றாக இருப்பது

ஒட்பம் = கூரிய அறிவு

மலர்தலும் = அப்படி நட்பு கொண்ட பின்

கூம்பலும் = அந்த  நட்பை விட்டு வில்குதலும்

அல்ல = செய்யாதது

அறிவு = அறிவு

அறிவுள்ளவன் எப்போதும் உயர்ந்தவர்களை சேர்ந்து இருப்பான். அப்படி சேர்ந்த பின் அவர்களை விட்டு விலக மாட்டான்.

நீரில் பூக்கும் தாமரை, அல்லி மலர்கள் ஒரு சமயம் பூக்கும், மறு சமயம் கூம்பும். மீண்டும் மலரும், பின்  வாடும்.

நல்ல நட்பு என்பது எப்போதும் மலர்ந்து இருக்கும்.

நீங்கள் யாரைச் சார்ந்து இருக்கிறீர்கள் என்று ஒரு பட்டியல் இடுங்கள்.

அவர்களோடு உங்கள் உறவு எப்படி இருக்கிறது ?  சில சமயம் நன்றாக இருக்கிறது...மற்ற சமயங்களில் கொஞ்சம் இழு பரியாக இருக்கிறதா ?

அப்படி என்றால் அது அறிவின்பாற்பட்ட செயல் அல்ல.

தேர்ந்தெடுங்கள்....யாரைச் சார்ந்து இருக்க வேண்டும் என்று.


அது அறிவின் முதற்படி.


5 comments:

  1. அம்மா, அப்பா, அண்ணன் , தம்பி, மனைவி, கணவன், பிள்ளைகள் இவர்கள் யாரையும் நாம் தேர்ந்து எடுப்பது இல்லை. ஆனாலும் இவர்களை சார்ந்துதான் வாழ்க்கையை ஓட்ட வேண்டி இருக்கிறது. இதற்க்கு வள்ளுவர் என்ன சொல்கிறார்?

    ReplyDelete
    Replies
    1. கணவன் , மனைவி - இவர்களை நாம் தேர்ந்தெடுக்கலாமே ? மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி, தந்தை மகற்கு ஆற்றும் உதவி, ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும் தாய், ஈன்றாள் பசி கண்டாலும் செய்யத் தகாத வினை என்று பல சொல்லி இருக்கிறார்.

      உயர்ந்தவர்களை சார்ந்து வாழ வேண்டும் என்று சொன்னால், வள்ளுவர் மற்றவர்களைப் பற்றி என்ன சொன்னார் என்ற கேள்வி எனக்குப் புரியவில்லை.

      Delete
  2. இவ்வுலகம் இது தான் உயர்ந்தது என்று கொஞ்சிப்பேசி உரைத்தாலும் அல்லது கடுமையாக சொன்னாலும் அதற்கெல்லாம் மலராமலும் கூம்பாமலும் சலனமில்லாமல் இருப்பதே அறிவு. ஒரு முழு அதிகாரம் பெரியோர் இடத்தில் இருப்பதைபற்றி கூறுகிறது. பிறகு ஏன் அதை மறுபடியும் வந்து அறிவுடைமையில் கூற வேண்டும் ?

    உலகம் தழீஇயது ஒட்பம்
    → உலகம் அரவணைத்தாலும் (புகழ்ந்தாலும்), அச்சுருத்தினாலும் (கூச்சல் போட்டாலும்), அதனால் “இது தான் மேன்மை” என்று சொல்லப்பட்டால் கூட — அந்த ஒட்பம் (merit) சோதனைக்குட்பட்டது. அது trial stage-இல் தான் நிற்கிறது.

    மலர்தலும் கூம்பலும் இல்லது அறிவு
    → ஆனால் அறிவு அப்படிப்பட்ட விசாரணைக்கு உட்பட்டது அல்ல. அது உலகின் சத்தத்தால் மலராது, உலகின் கூச்சலால் வாடாது. அது சோதனைக்குப் புறம்பே நிற்கும் — untouched by trial.

    ReplyDelete
  3. part 1 of essay
    Wisdom Beyond Bloom and Wither – Kural 425 in the Arc of அறிவுடைமை
    The Arc of the Chapter அறிவுடைமை/wisdom
    The chapter on அறிவுடைமை (Possession of Wisdom) is one of the most unified in the Thirukkural. Each verse shows wisdom not as accumulation of facts, but as steadiness that endures beyond external change.
    421 – Wisdom as fortress, an impregnable shield.
    422 – Wisdom as leadership of the self, disciplining the mind.
    423 – Wisdom as discernment, seeing beneath words.
    424 – Wisdom as relational clarity, making the complex simple.
    425 –
    426 – Wisdom as abiding, attuned to reality.
    427 – Wisdom as becoming, a transformative journey.
    428 – Wisdom as right fear, assigning fear properly.
    429 – Wisdom as resilience, calm in storms.
    430 – Wisdom as true possession, sufficiency beyond wealth.
    The thread is unmistakable: wisdom is resilience, unshaken by circumstance, the fortress that remains when all else crumbles; wisdom is not momentary sparkle but resilient permanence. Against this arc, ஒட்பம் in 425 cannot mean true wisdom itself, because the chapter distinguishes between fragile surface qualities and enduring essence. It must refer to merit as judged and tested by the world—the kind that blooms with praise or withers with censure—still inside the arena of trial.

    Why ஒட்பம் Means “Merit Under Trial”
    Why does ஒட்பம் mean “merit under trial”? Because Valluvar himself uses it that way. In கல்லாதான் குறள் (கல்லாதான் ஒட்பம் கழிய நன்றாயினும் / கொள்ளார் அறிவுடையார்), ஒட்பம் is explicitly surface brilliance — gifts or appearances that may seem fine but are dismissed by the wise. In the arc of அறிவுடைமை, wisdom (421, 429) is fortress-like and unshaken, so 425 cannot suddenly redefine ஒட்பம் as wisdom itself. Rather, 425 contrasts them: உலகம் தழீஇயது ஒட்பம் = the kind of merit that rises and falls under the world’s embrace; மலர்தலும் கூம்பலும் இல்லது அறிவு = wisdom that neither swells with applause nor shrinks with blame. Thus, by Valluvar’s own vocabulary and the chapter’s coherence, ஒட்பம் is trial-bound merit, while அறிவு is transcendent stability.

    ReplyDelete
  4. Part2 of essay
    Refutation of the Alternate Reading
    Some interpret “உலகம் தழீஇ” as “one must embrace the world’s praise”, suggesting the wise should engage with the world and keep their wisdom steady in that process. But this is grammatically and contextually weaker. உலகம் தழீஇ is an absolutive with the world as subject, not the scholar. If Valluvar intended “you must embrace the world,” a different construction would have been required. Moreover, the அறிவுடைமை arc always shows wisdom being tested by external forces (praise, fear, crisis), not by voluntary self-embrace. And in கல்லாதான் ஒட்பம், ஒட்பம் is precisely what the world praises and rejects — confirming that the agent of trial is the world, not the scholar. Thus, wisdom here is not about embracing praise, but about being untouched when the world embraces or abandons you.

    Kundrakkudi Adigalaar’s Interpretation
    இவ்விணைப்பில் வாசிக்கலாம் 7. உலகம் தழீஇயது ஒட்பம்! - குன்றக்குடி அடிகளார்
    Kundrakkudi Adigalaar, in his commentary, expands the phrase “உலகம் தழீஇயது ஒட்பம்” to mean that one must embrace the whole of humanity, transcending caste, religion, and national boundaries, building friendships across languages and cultures. While this is a noble and timely call for universal humanism, it stretches beyond what குறள் 425 actually states. Grammatically, உலகம் தழீஇ has the world as the subject — it is the world that embraces or scrutinizes, not the scholar who embraces the world. Within the அறிவுடைமை chapter arc, ஒட்பம் consistently refers to merit or excellence under trial (as in கல்லாதான் ஒட்பம்), something praised or dismissed by others, still subject to the cycles of bloom and wither. The kural’s purpose is definitional: to contrast this fragile, stage-bound merit with the fortress-like quality of அறிவு, which does not swell with praise nor shrink with blame. Thus, while Kundrakkudi Adigalaar’s humanistic reading has ethical value in modern contexts, it does not align with the strict grammatical and thematic force of குறள் 425.

    Conclusion
    The அறிவுடைமை chapter portrays wisdom as unshaken permanence — fortress, discipline, discernment, abiding, resilience, and sufficiency. Kural 425 crystallizes this by contrast:
    ஒட்பம் is merit under trial, embraced and judged by the world, subject to bloom and wither.
    அறிவு is beyond trial, untouched by applause or blame, steady and enduring.
    In essence: Wisdom is not merit tested on the world’s stage, but an unwithering excellence, the fortress that neither swells in bloom nor shrinks in wither.

    ReplyDelete