Saturday, April 23, 2022

திருக்குறள் - பெரிய செல்வம்

 திருக்குறள் - பெரிய செல்வம் 


நம்மிடம் ஒரு பெரிய சொத்து இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம், அதை நாம் எவ்வாறு காவல் செய்வோம்?


பெரிய வைரக் கல், தங்க நகை, விலை அதிகம் உள்ள கைக் கடிகாரம் என்று வைத்துக் கொள்வோம். அதை நாம் கவனக் குறைவாக எங்காவது போட்டு வைப்போமா? 


எப்போதும் பத்திரமாக வைத்து இருப்பேன், ஆனால் அப்பப்ப அந்த வைர நெக்கலசை பழைய காகிதங்களோடு போட்டு வைப்பேன் என்று சொல்வோமா? 


எது எல்லாம் உயர்ந்ததோ, அவற்றை அதிக கவனத்தோடு பாதுகாக்க வேண்டும்.


அடக்கம் உடைமை என்பது ஒரு உயர்ந்த குணம். அதையும் மிக கவனமாக விலை மதிப்பற்ற பொருளை பாதுகாப்பது போல பாதுகாக்க வேண்டும் என்கிறார் வள்ளுவர். 


பாடல் 



காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்

அதனினூங்கு இல்லை உயிர்க்கு



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/04/blog-post_23.html


(Please click the above link to continue reading)



காக்க பொருளா = பொருளாக காக்க. உயர்ந்த பொருளைப் போல காக்க. 


அடக்கத்தை = எதை காக்க வேண்டும்? அடக்கத்தை காக்க வேண்டும். 


ஆக்கம் = செல்வம் 


அதனினூங்கு இல்லை உயிர்க்கு = அதைவிட வேறு ஒன்று இல்லை உயிர்க்கு 


ஒருவனுக்கு பல மதிப்புள்ள செல்வங்கள் இருக்கலாம். பெரிய வீடு, நிலம், நீச்சு, நகை, நட்டு, பங்குகள், வங்கியின் இருப்புகள் என்று.


இவை எல்லாவற்றிலும் மிக உயர்ந்த செல்வம் அடக்கம் உடைமை என்ற செல்வமாகும். 


மற்ற எல்லா பொருள்களையும் எந்த அளவு ஒருவன் காப்பானோ  அதைவிட பொறுப்பாக அடக்கத்தை காக்க வேண்டும் 









No comments:

Post a Comment