Sunday, April 28, 2013

திருக்குறள் - நோயும் மருந்தும்


திருக்குறள் - நோயும் மருந்தும் 


தலைவியை பார்த்து, அவள் அழகில் மயங்கி , அவளை அன்போடு நோக்குகிறான் தலைவன்.

அவளும், அவனை நோக்குகிறாள்.

அவளின் பார்வைக்கு அவனுக்கு அர்த்தம் தெரியவில்லை. ஒரு சமயம் அன்பாக பார்ப்பது மாதிரி இருக்கிறது. இன்னொரு சமயம் கோபமாய், வெறுப்பாய் பார்ப்பது மாதிரி இருக்கிறது.

அவனால் அறிய முடியவில்லை.

துன்பம் தருவதும் அவள் கண்கள் தான்.. அந்த துன்பத்திற்கு மருந்து தருவதும் அவள் பார்வைதான்...

பாடல்

இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு 
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.

பொருள்






இருநோக்கு = இரண்டு பார்வை

இவளுண்கண் = இவள் + உண் + கண் = மையை உண்ட கண்.

உள்ளது = உள்ளது

ஒருநோக்கு = ஒரு நோக்கு

நோய் நோக்கு = நோய் தரும் நோக்கு. நோய் என்றால் துன்பம். (நோயெல்லாம் நோய் செய்தார் மேலவாம்)

கொன்றந் = ஒன்று (அதாவது மற்றொன்று) அந்

நோய் மருந்து = அந்த நோய்க்கு மருந்து

அவள் தந்த நோய்க்கு மருந்தும் அவள் தான் தர வேண்டும். அவள் பார்வை தான் மருந்து. இன்னொரு பார்வை அல்ல.




2 comments:

  1. வெறுப்பாகப் பார்க்கிறாளோ என்பதை விட, அவள் பார்த்தாலே காதல் நோய் உண்டாகிறது என்று பொருள் கொள்ளலாமே!

    ReplyDelete
    Replies
    1. ஆஹா...தாளரமாய் ஜொள்ளலாமே...அப்படி ஜொள்ளுவதில் ஒரு தப்பும் இல்லை...

      Delete