Friday, April 26, 2013

இராமாயணம் - அவன் பின்னால் போன மனம்


இராமாயணம் - அவன் பின்னால் போன மனம்

இராமனை முதன் முதலாகப் பார்த்த பின், சீதையின் மனம் அவளிடமே இல்லை. அவன் பின்னாலேயே போய் விட்டது.

சீதைக்கு ஆதங்கம் தாங்கவில்லை. இத்தனை நாள் என்கூடவே இருந்தது என் மனம். இன்னைக்குத் தான் அவனை பார்த்தது. நாளைக்கு திருமணம். அதுவரை கூட பொறுக்க  முடியாதா ? அதுக்குள்ள, அவன் பின்னாலேயே போய் விட்டது. இனிமேல் நாளை அவன் வரும்போது அவன் கூடத் தான் வரும்.

இப்படி கூட நடக்குமா ? வரட்டும் என் மனம், அது கிட்ட பேசிக்கிறேன்

பாடல்

கரு நாயிறு போல்பவர் காலொடு போய்,
வரு நாள், அயலே வருவாய்; -மனனே! -
பெரு நாள், உடனே, பிரியாது உழல்வாய்;
ஒரு நாள் தரியாது ஒழிவார் உளரோ?

பொருள்







கரு நாயிறு = கருமையான சூரியனைப்


போல்பவர் = போன்றவர் (இராமன்)

 காலொடு போய் = அவன் காலை கட்டிக் கொண்டு, திருவடியை பற்றிக் கொண்டு போய் 

வரு நாள் = நாளை திருமணத்திற்கு வரும் நாள்

அயலே வருவாய் = அவன் கூடவே வருவாய்

மனனே = என் மனமே

பெரு நாள் = இத்தனை நாள்


உடனே = என் கூடவே இருந்து

பிரியாது = பிரியாமல்

 உழல்வாய் = சுத்திக் கொண்டிருந்தாய்

ஒரு நாள் தரியாது = ஒரு நாள் கூட தாங்க முடியாமல்


ஒழிவார் உளரோ = இப்படி ஓடி ஒளிந்து கொள்பவர்களும் இருக்கிறார்களா ?


1 comment:

  1. சில நாள் முன்பு நீ எழுதிய அகநானூறு கவிதை நினைவுக்கு வருகிறது. அதிலும், ஒரு தலை தனது மனம் தலைவனிடம் போய் விட்டதாகச் சொல்கிறாள்.

    அருமையான கற்பனை. படித்ததும் மனதில் ஒரு தென்றல்.

    ReplyDelete