Tuesday, May 8, 2012

வில்லி பாரதம் - ஜொள்ளு திலகம்


வில்லி பாரதம் - ஜொள்ளு திலகம்


பாண்டியன் மகள் சித்ராங்கதையயை பார்த்து அர்ஜுனன் விட்ட ஜொள்ளு....





பச்சென்றதிருநிறமுஞ்சேயிதழும் வெண்ணகையும் பார்வையென்னும்
நச்சம்புமமுதூற நவிற்றுகின்ற மடமொழியு நாணும்பூணும்
கச்சின்கணடங்காதகனதனமும் நுண்ணிடையுங்கண்டு சோர்ந்து
பிச்சன்போலாயினனப்பெண்கொடிமெய்ந் நலமுழுதும் பெறுவானின்றான்.


என்ன இது ஜப்பானிய மொழி மாதிரி இருக்கா...பொறுமை பொறுமை...

கொஞ்சம் சிக்கல் எடுக்கலாமா ?


பச் என்ற திரு நிறமும் சே இதழும் வெண் நகையும் பார்வை என்னும்
நச்சு அம்பும் அமுதூர நவிற்றுகின்ற மட மொழியும் நாணும் பூணும்
கச்சின் கண் அடங்காத தனமும் நுண்ணிடையும் கண்டு சோர்ந்து
பிச்சன் போல் ஆயினன் பெண் கொடி மெய் நலம் முழுதும் பெறுவா நின்றான்


புரியுதா இப்ப ?


பச் என்ற திரு நிறமும் = பசுமையான நிறம். பச்சை நிறம் அல்ல..சும்மா குளு
குளுன்னு கண்ணுக்கு குளிர்ச்சியான நிறம்

சே இதழும் = சிவந்த இதழும்

வெண் நகையும் = colgate மின்னலடிக்கும் புன்னகையும்

பார்வை என்னும் = பார்வை இருக்கிறதே அது

நச்சு அம்பும் = அம்பு போல கூர்மையானது, நெஞ்சில் பட்டால் ஆளை

மயக்கும் நஞ்சு போல

அமுதூர = அமுதம் ஊற

நவிற்றுகின்ற = பேசுகின்ற

மட மொழியும் = innocent பேச்சும்

நாணும் = நாணமும், வெட்கமும்

பூணும் = உடுத்தும்

கச்சின் = மார்பு கச்சை

கண் அடங்காத தனமும் = அதில் அடங்காத மார்பகமும்

நுண்ணிடையும் = சிறிய இடையும்

கண்டு சோர்ந்து = பார்த்து சோர்ந்து

பிச்சன் போல் ஆயினன் = பித்தன் போல ஆகி விட்டான் (அர்ஜுனன்)

பெண் கொடி = கொடி போன்ற பெண்ணின்

மெய் நலம் = உடலின் அழகை

முழுதும் பெறுவா நின்றான் = முழுவதும் பெற (காண) முடியாமல் நின்றான்

இதுல யார் பெரிய ஜொள்ளர் ?

அர்ஜுனனா ?

இந்த பாட்டை எழுதிய வில்லிபுத்தூர் ஆழ்வாரா ?

இதற்க்கு அருஞ்சொற்பொருள் எழுதிய நானா ?

இல்லை படித்து ஜொள்ளு விடும் நீங்களா ?


2 comments:

  1. சும்மா அதிருதில்லே! என்னா ஜொள்ளு, என்ன ஜொள்ளு!

    ஆமா, அது என்னா "மெய் நலம் முழுதும்" அப்படீன்னா என்னா?! அதையும் கொஞ்சம் விளக்கினா இன்னும் சும்மா ஜொள்ளு வழிஞ்சிருக்குமே!

    ReplyDelete
    Replies
    1. அப்புறம் இந்த blog க்கு A certificate தர வேண்டியிருக்கும் ...:)

      Delete