Wednesday, May 30, 2012

திருவாசகம் - அழுதால் உன்னைப் பெறலாமே


திருவாசகம் - அழுதால் உன்னைப் பெறலாமே

"நான் உண்மையானவன் அல்ல.

என் மனமும் சுத்தமானது அல்ல

என் அன்பு போலி அன்பு

இருந்தாலும், உன்னை நினைத்து மனம் உருகி அழுதால் நான் உன்னை அடைய முடியும், 

அதற்கும் நீ தான் அருள் புரிய வேண்டும்" என்று உருகுகிறார் மணி வாசகர்



யானே பொய்என் நெஞ்சும் பொய்என் அன்பும்பொய்
ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே
தேனே அமுதே கரும்பின் தெளிவே தித்திக்கும்
மானே அருளாய் அடியேன் உனைவந் துறுமாறே

யானே பொய் = நானே பொய்

என் நெஞ்சும் பொய் = என் மனமும் பொய்

என் அன்பும்பொய் = என் அன்பும் பொய்

ஆனால் = ஆனால்

வினையேன் = முன்வினைப் பயனை உடைய நான்

அழுதால் உன்னைப் பெறலாமே = அழுதால் உன்னைப் பெறலாமே

தேனே = தேனே

அமுதே = அமுதே

கரும்பின் தெளிவே = தெளிந்த கரும்பின் சாறே

தித்திக்கும் = அடியார் உள்ளத்தில் தித்திக்கும்

மானே = நிலை பெற்று இருப்பவனே

அருளாய் = எனக்கு அருள் செய்வாய்

அடியேன் = நான்

உனை = உன்னை

வந் துறுமாறே = வந்து + உறுமாறே = வந்து அடையும் வண்ணம்

மாணிக்க வாசகரின் அன்பு பொய் என்றால், நாம் எல்லாம் எம்மாத்திரம் !




15 comments:

  1. கடவுள் மேலே இப்படி ஒரு அன்பா? ஆகா!

    "அழுதால் உன்னைப் பெறலாமே" என்று கேட்டிருக்கிறேன். அதன் முழுப் பாடலையும் இப்போதுதான் படிக்கிறேன்.

    நன்றி.

    ReplyDelete
  2. ஆனால் யாரும் அழத் தயாராக இல்லையே.

    ReplyDelete
  3. ஓம் நமசிவாய 🙏🙏

    ReplyDelete
  4. வீ.சுந்தரபாண்டியன்October 8, 2023 at 4:30 AM

    சிவாயநம

    ReplyDelete
  5. மாணிக்க வாசகரின் அன்பு பொய் என்றால், நாம் எல்லாம் எம்மாத்திரம் !

    ReplyDelete
  6. ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் உலகெல்லாம் உணர்ந்து ஓதற் கரியவன் நில உலாவிய நீர் வலி வேணியன் அழகில் சோதியன் அம்பலத்து ஆடுவான் மலர் சிலம்பொலி வாழ்த்தி வணங்குவோம்

    ReplyDelete
  7. நமச்சிவாய

    ReplyDelete
  8. அருமை சிவாய நம

    ReplyDelete
  9. ஓம் நமசிவாய

    ReplyDelete
  10. ஓம் நமசிவாய

    ReplyDelete
  11. இந்த பதிகம் உண்மையான பக்தி கேட்டால்... அது ஆனந்த கண்ணீர் தானகவே வரும்

    ReplyDelete
  12. இந்த பதிகத்தை KP சுந்தரம்பாள் குரலில் உச்சஸ்தாயில்பாடுவதைகேட்டுப்பாருங்கள். உள்ளம், உடம்பு எல்லாமே உருகி விடும். பா.சிதம்பரம் திண்டல்ஈரோடு

    ReplyDelete