Sunday, May 27, 2012

ஐங்குறுநூறு - காலையில் வந்த மாலைப் பொழுது.



ஐங்குறுநூறு - காலையில் வந்த மாலைப் பொழுது.


காதலனை பிரிந்து இருக்கிறாள்.

பிரிவு அவளை வாட்டுகிறது.

மாலை வருகிறது.

ரொம்ப கஷ்டப் பட்டு மாலை பொழுது சென்றது.

பின் இரவு.

மறு நாள் காலை வந்தது.

மதியம் வரவேண்டும்.

மதியம் வரவில்லை , மாலை வந்து விட்டது.

அவள் அந்த மாலைப் பொழுதிடம் கோவிக்கிறாள்.

"என்ன, அதுக்குள்ள வந்துட்ட. இப்ப தான போன...அதுக்குள்ள வந்துட்ட...
ஹும்ம்..உன்னை யார் கேக்குறது..." 


கணங்கொள் அருவிக் கான்கெழு நாடன்
குறும்பொறை நாடன் நல்வயல் ஊரன்
தண்கடற் சேர்ப்பன் பிரிந்தெனப் பண்டையிற்
கடும்பகல் வருதி கையறு மாலை,
கொடுங்கழி நெய்தலுங் கூம்பக்
காலை வரினும் களைஞரோ இலரே.

கணங்கொள் = தொகுதி தொகுதியாக உள்ள

அருவிக் = அருவிகளை

கான்கெழு நாடன் = கொண்ட கானகங்களை கொண்டவன்

குறும்பொறை நாடன் = குறும்பொறை (முல்லை நிலம்) நாடன்

நல்வயல் ஊரன் = நல்ல வயல்களை கொண்ட ஊரில் உள்ளவன்

தண் = குளிர்ந்த

கடற் = கடற் கரையை

சேர்ப்பன் = சேர்த்துக் கொண்டவன்

பிரிந்தெனப் = பிரிந்த பின்

பண்டையிற் = முன்பு எல்லாம்

கடும்பகல் வருதி = மதியம் கழிந்து வரும் 

கையறு = கையாலாகாத

மாலை, = மாலை

கொடுங்கழி = வளைந்த உப்பளம்

நெய்தலுங் = நெய்தல் மலர்

கூம்பக் = கூம்பிய பின் (= அதாவது இரவு வந்த பின்)

காலை வரினும் =காலையில் வந்தாலும்

களைஞரோ இலரே. = கேட்பவர் இல்லையே (களைபவர் இல்லை)

கையில் உள்ள நீரைப் போல் காலம் கசனிது கொண்டே தான் இருக்கிறது.




(Request to the reader: If you like this blog , please click the "G+1" button above to express your liking. Thanks)


2 comments:

  1. நல்ல பாடல். "கையாலாகாத மாலையே, நீ இரவு முடிந்தவுடனேயே வந்துவிட்டாலும், உன்னைத் தட்டிக்கேட்க யாரும் இல்லையே". மிக இனிய பொருள்.

    ஒரு கேள்வி: இந்தப் பாடலில் காடு உடைய முல்லை நாடு, கடற்கரை, உப்பளம் என்று மூன்று குற்ப்புகள் நிலத்தைப்ப்ற்றி உள்ளன. இவற்றினுள்ளே உள் முரண்பாடு இருக்கிறதா? இந்தப் பாடல் எந்த நிலத்தைச் சேர்ந்ததாகும்?

    ReplyDelete
    Replies
    1. Good question. When I read that I also felt that way. The way to reconcile is that the hero holds a land which covers all these land pieces...which means he holds a large land mass...

      Delete