Monday, August 20, 2012

இராமானுஜர் நூற்றந்தாதி - பன்னப் பணித்த இராமானுசன்


இராமானுஜர் நூற்றந்தாதி - பன்னப் பணித்த இராமானுசன்


திருவரங்கத்து அமுதனார் எழுதியது இராமனுசர் நூற்று அந்தாதி.

பாடல்களை படிக்கும் போது, ஒரு மனிதனுக்கு இன்னொரு மனிதன் மேல் இத்தனை மதிப்பும் மரியாதையும் தோன்றுமா என்று வியப்பு தோன்றுகிறது. 
இன்னோர் ஆச்சரியம் சில வரிகள் திருவாசகத்தில் இருந்து நேரே வந்த மாதிரி இருப்பது.



என்னைப்புவியில் ஒரு பொருளாக்கி, மருள்சுரந்த
முன்னைப்பழவினைவேறறுத்து, 
ஊழிமுதல்வனையே பன்னப்பணித்த இராமானுசன், 
பரன்பாதமுமென் சென்னித்தரிக்கவைத்தான், 
எனக்கேதும் சிதைவில்லையே.


என்னைப்புவியில் ஒரு பொருளாக்கி = என்னை இந்த பூமியில் ஒரு பொருளாக்கி. 'நம்மையும் ஓர் பொருளாக்கி, நாய் சிவிகை ஏற்றுவித்து' என்பார் மணிவாசகர்.

மருள்சுரந்த = அருள் சுரந்த

முன்னைப்பழவினைவேறறுத்து = என்னுடைய பழைய வினைகளை வேரோடு அறுத்து ('முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான்' என்பது மணிவாசகம்.'பழவினைகள் பாறும்வண்ணஞ்' என்னுடைய பழைய வினைகள் கெட்டுப் போகும்படி என்பதும் மணிவாசகம்)

ஊழிமுதல்வனையே = அனைத்து காலங்களுக்கும் முதல்வனை

பன்னப்பணித்த = தொண்டு செய்ய என்னை பணித்த

இராமானுசன் = இராமானுசன், 

பரன் = உயர்ந்தவன், சிறந்தவன்

பாதமுமென் சென்னித் = அவன் பாதங்களை என் தலையில்

தரிக்கவைத்தான்,= பதியும் படி வைத்தான் ('உன் பாதம் எனும் வாசக் கமலம் 
தலை மேல் வலிய வைத்து ஆண்டு கொண்ட' என்பது அபிராமி அந்தாதி.  

எனக்கேதும் சிதைவில்லையே. = அதனால் எனக்கு ஒரு சிதைவும் இல்லையே






3 comments:

  1. இவருக்கும் ராமானுசருக்கும் என்ன தொடர்பு?

    ReplyDelete
  2. அவரின் சிஷ்யர் இவர்.

    amas32

    ReplyDelete
  3. அவரின் சிஷ்யர் இவர்.

    amas32

    ReplyDelete