சிலப்பதிகாரம் - நடந்தானை ஏத்தாத நா என்ன நாவே ?
கண்ணன் தான் எவ்வளவு கஷ்டப் பட்டு இருக்கிறான்.
பிறந்து பெரியவானாகும் வரை மாமன் கம்சன் மூலம் பிறந்த சிக்கல்களை சமாளிக்க வேண்டி இருந்தது.
பின் பாண்டவரக்ளுகாக படாத பட்டு பட்டான்.
துரியோதனன் போன்ற மூடனிடம் தூது போனான்.
அறம் அல்ல என்று தெரிந்தும் பாண்டவர்களுக்காக சிலவற்றை செய்தான்.
தன்னை நம்பிய பக்தர்களுக்காக பகவான் தான் என்ன பாடு படுகிறான்.
அவனைப் போற்றாத நா என்ன நாவே....
பாடல்
மடந்தாழு நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
கடந்தானை நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்றப்
படர்ந்தா ரணமுழங்கப் பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே
நாராயணா வென்னா நாவென்ன நாவே;
பொருள்
மடந்தாழு நெஞ்சத்துக் = மடமையால் தாழ்ந்த நெஞ்சைக் கொண்ட
கஞ்சனார் = கம்சனின்
வஞ்சம் கடந்தானை = வஞ்சக திட்டங்களை முறியடித்து வந்தவனை
நூற்றுவர்பால் = கௌரவர்களிடம்
நாற்றிசையும் போற்றப் = நான்கு திசைகளும் போற்ற, நான்கு திசைகளில் உள்ளவர்களும் போற்ற
படர்ந்தா ரணமுழங்கப் = படர்ந்து + ஆரணம் + முழங்க = சென்று, வேதங்கள் முழங்க
பஞ்சவர்க்குத் தூது நடந்தானை = பஞ்ச பாண்டவர்களுக்கு தூது சென்றவனை
ஏத்தாத நாவென்ன நாவே = புகழாத நாக்கு என்ன நாக்கே
நாராயணா வென்னா நாவென்ன நாவே = நாராயணா என்று சொல்லாத நாக்கு என்ன நாக்கே
சிலப்பதிகாரத்தில் கண்ணனை வாழ்த்திபாடும் இனிய பாடல். திவ்விய பிரபந்த பாடலுக்கு இணையான அற்புதமான பாடல். இதை எனக்கு வெளிபடுத்திய தினமலர்க்கு (10/11/2024) நன்றி.. சிதம்பரம் ஈரோடு 8825559326
ReplyDelete