பட்டினத்தார் - பகலை இரவென்பார்
படித்தால் புரிகிறது. ஆனால் உணர முடிவதில்லை.
வேதங்கள், ஆகமங்கள், புராணங்கள், தேவாரம், திருவாசகம், பிரபந்தம் என்று பெரிது பெரிதாய் புத்தகங்கள். கக்கத்தில் வைத்து தூக்கிக் கொண்டு போகலாம். மனம் அதை வாங்கி உண்மையை அறிந்து கொள்ள முடிவதில்லை.
அது மட்டும் அல்ல, ஒரு சில புத்தகங்களை படித்துவிட்டு ஏதோ எல்லா உண்மையும் அறிந்தவர்கள் போல் அடித்துப் பேசும் ஆட்களைப் பார்த்து சொல்கிறார் பட்டினத்துப் பிள்ளை...பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் தெரியாத பாதகர்கள் என்று.....
அந்த திருவருட் பிரகாசம் அங்கு இங்கு எனாதபடி எங்கும் நிறைந்திருக்கிறது...பார்த்தால்தானே?...கவனம் எல்லாம் புத்தகத்திற்குள்....
பாடல்
எட்டுத் திசையும் பதினாறு கோணமும் எங்கும் ஒன்றாய்
முட்டித் ததும்பி முளைத்தோங்கு சோதியை மூட ரெல்லாம்
கட்டிச் சுருட்டித்தம் கக்கத்தில் வைப்பர், கருத்தில் வையார்
பட்டப் பகலை இரவென்று கூறிடும் பாதகரே.
இங்கு "சோதி" என்பது கடவுள் என்ற பொருளிலா, அல்லது உண்மை/சத்தியம் என்ற பொருளிலா?
ReplyDeleteகடவுள்
Deleteதிலீப் லூசா
Delete