Tuesday, March 30, 2021

திருக்குறள் - அகர முதல - பாகம் 5

திருக்குறள் -  அகர முதல - பாகம் 5 


அகர முதல எழுத்து எல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு.


பகவன் என்றால் என்ன?


பகவன் என்றால் பகுத்துத் தருபவன் என்று பொருள். எதை பகுத்துத் தருபவன்?

அதைத் தெரிந்து கொள்வதற்கு முன்னால், இந்து சமயத்தின் ஆணி வேரானா கர்மா கொள்கையை பற்றி அறிந்து கொள்ள வேண்டும். 


https://interestingtamilpoems.blogspot.com/2021/03/5.html


(click the above link to continue reading)


ஒருவன் தான் செய்த வினைக்கு ஏற்ற பலன் அவனை வந்து சேரும். ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர் வினை உண்டு என்பது அடிப்படைத் தத்துவம். ஆனால், வினையும் எதிர் வினையும் உடனே நிகழுமா? அப்படி நிகழ்வது இல்லை. 


நாம் செய்யும் நல்லன தீயன என்பவை 

பாவ புண்ணியங்களாக மாறி 

இன்ப துன்பங்களாக நமக்கு வந்து சேர்கின்றன 


(நல்லன தீயன ), (பாவம் புண்ணியம்), (இன்பம் துன்பம்) 


இதை புரிந்து கொள்ள வேண்டும். 


நாம் செய்யும் வினைகளுக்கு ஏற்ப நம் பாவ புண்ணியங்கள் கூடுகின்றன.


முடிந்தவரை இந்தப் பிறவியிலேயே அவற்றை நாம் அனுபவித்து விடுகிறோம். அனுபவித்து முடிக்காத வினைப் பயன்கள் அடுத்த பிறவியில் தொடரும். 


இப்படி சேமித்து வைத்த வினைகளை சஞ்சித வினை என்பார்கள். இந்த வினையின் தொகுதி பின் வரும் பிறவிகளில் நம்மைத் தொடரும். 


இந்த சஞ்சித வினையின் ஒரு பகுதியை இந்தப் பிறவியில் நாம் அனுபவிக்கிறோம். அதற்கு பிராரப்த  கர்மம் என்று பெயர். 

அப்படி அனுபவிக்கும் போது மேலும் பாவ புண்ணியங்களை சேர்த்துக் கொள்கிறோம். அதற்கு ஆகாமிய கர்மம் என்று பெயர். 


சஞ்சிதம் - பிரார்பதம்  -  ஆகாமியம் 


கொண்டுவந்தது, அனுபவிப்பது, அனுபவிக்கும் போது மேலும் உண்டாக்குவது. 


நம் சஞ்சித வினை குவிந்து கிடக்கிறது. நிறைய பாவங்களும் உண்டு, நிறைய புண்ணியங்களும் உண்டு. 


சரி, முதலில் இவனின் பாவங்களை தீர்த்து விடுவோம் என்று அடுத்து வரும் பிறவிகளில் துன்பம் மட்டுமே தந்தால் எப்படி இருக்கும்? பிறந்தது முதல் இறக்கும் வரை துன்பம் மட்டும் தான். இன்பமே கிடையாது என்றால் எப்படி இருக்கும். தாங்க முடியாது அல்லவா?


சரி, முதலில் புண்ணியம் மட்டும் தருவோம், என்று இன்பம் மட்டுமே தந்து கொண்டிருந்தால், நன்றாகத்தான் இருக்கும்.ஆனால், பின்னாளில் வெறும் துன்பம் மட்டுமே வரும். சகிக்க முடியாது. 


எனவே, இறைவன் , கருணையோடு நாம் சேர்த்து வைத்த பாவ புண்ணியங்களை  "பகுத்து",  இந்தப் பிறவியில் இவ்வளவு இன்பம், இவ்வளவு துன்பம் என்று தருகிறான்.  கொஞ்சம் துன்பம் வரும், பின் கொஞ்சம் இன்பம் வரும். இரண்டும் மாறி மாறி வரும்படி இறைவன் பகுத்துத் தருகிறான். 


கொஞ்சம் வெயில், கொஞ்சம் மழை, கொஞ்சம் குளிர், என்று வரும்போது நம் உடல் அதற்குப் பழக்கிக் கொள்கிறது. 


இப்படி, உயிர்கள் செய்த நல் வினை, தீ வினைகளை அவற்றிற்கு பகுத்துத் தருவதால் அவன் "பகவன்"  என்று அழைக்கப் படுகிறான். 


சரி, அது "முதற்றே உலகு" ?

6 comments:

  1. Is this kural or gita. Sounds like bagavad gita..

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் குறள் இந்து தர்மத்தின் விளக்கமே .. கீதை நினைவு வரத்தான் செய்யுமே ...

      Delete
  2. நல்ல விளக்கம் ஐயா ...வணக்கம்.

    ReplyDelete
  3. ஒவ்வொரு வார்த்தையையும் யோசித்துதான் போட்டிருக்கிறார் என்பதற்கு இந்த பகவன் ஒன்றே போதுமே .குறளாலானால் அல்லது கீதையானால் என்ன? சந்தானத்தின் அடிப்படை தத்துவம் ஒன்றுதான்.

    ReplyDelete
  4. Excuse the typo.Should be சநாதன தர்மத்தின்

    ReplyDelete
  5. 1. பகவன் என்றால் "பகுத்துத் தருபவன்" என்று பொருள் அல்ல. கீழே Wikipedia வில் இருந்து எடுத்து ஒட்டி இருக்கிறேன்:

    Bhagavān, nominative singular of the adjective Bhagavat, literally means "fortunate", "blessed" (from the noun bhaga, meaning "fortune", "wealth", cognate to Slavic bog "god", Polish bogaty Serbo-Croatian bogat, Russian богатый (bogatyj) "wealthy"), and hence "illustrious", "divine", "venerable", "holy", etc.

    (https://en.wikipedia.org/wiki/Bhagavan)

    2. வள்ளுவர் வேண்டுமானால் எழுதி விட்டுப் போகட்டும், ஆனால் முன் பிறப்பு என்ற தத்துவத்தை நம்பாதவர் இதை எல்லாம் பேத்தல் என்ற கருதுவர்.

    ReplyDelete