மலர்ந்த தாமரை
https://interestingtamilpoems.blogspot.com/2024/12/blog-post_20.html
சூரிய ஒளி பட்டு தாமரை மலர்வதாகத் தான் அனைத்து இலக்கியங்களும் பேசுகின்றன. அது எவ்வளவு பெரிய தவறு !
அவள் சொல்கிறாள்...தாமரை எப்போது மலரும் தெரியுமா? அதன் அருகில் வண்டு வந்து ரீங்காரம் இடும் போது...வண்டு வந்து விட்டால் தாமரை தானே மலர்ந்து விடும். அது தாமரைக்கும் வண்டுக்கும் உள்ள உறவு.
"பெண்: விம்மியது தாமரை
வண்டு தொடும் நாளிலோ?"
அன்பு மேலிடும் போது பற்றிக் கொள்ள ஒரு கை வேண்டும், சாய்ந்து கொள்ள ஒரு தோள் வேண்டும்.
அவனுக்கோ பரந்த மார்பு. அவளோ மயில் போல் மென்மையானவள். அவனுடைய பரந்த் மார்பில் அவள் சாய்ந்து கொள்கிறாள். ஈருடல், ஓருயிர்.
" பாவை மயில் சாயுதே மன்னவனின் மார்பிலோ"
No comments:
Post a Comment