கம்ப இராமாயணம் - அவலச் சுவை - புலம்பல்கள்
இன்பமான நிகழ்வுகளை எளிதில் சொல்லி விடலாம் . பெரிய, ஆழ்ந்த வார்த்தைகள் தேவை இல்லை . எல்லோரும் புரிந்து கொள்ள முடியும் .
சோகத்தை , துன்பத்தை எழுத்தில் வடிப்பது அவ்வளவு எளிது அல்ல . துன்பத்தில் என்ன இருக்கிறது விவரிக்க ? வர்ணிக்க ?
மேலும் அதை மெருகு செய்யப் போனால் சில சமயம் அருவெறுப்பாகி விடும் . "இறந்த அவன் முகம் அழுகிய வாழைப் பழம் போல் இருந்தது " என்று சொன்னால் நல்லாவா இருக்கும் .
ஆனால் கம்பன் சோகத்தையும் மிக அழகாக படம் பிடிக்கிறான் .
பாத்திரங்களின் சோகம் நம்மை தாக்க வேண்டும் . அதே சமயம் அடடா என்ன அழகாக சொல்லி இருக்கிறான் என்ற நயமும் வேண்டும் . வார்த்தைகளில் ஆழம் வேண்டும் , சோகத்தை பிரதிபலிக்க வேண்டும் , அதே சமயம் சொல்லப் பட்ட விதமும் நேர்த்தியாக இருக்க வேண்டும் .
"இறந்தார் , மண்டைய போட்டார் , டிக்கெட் வாங்கி விட்டார்" என்றெல்லாம் சொல்லாமல் "இறைவன் திருவடியை அடைந்தார் , காலமானார் " என்றெல்லாம் சொல்லுவது போல .
இராமாயணத்தில் பல இடங்களில் கம்பன் சோகத்தைப் பிழிகிறான் . அது நம் நெஞ்சை அறுக்கும் படி இருக்கும் . வலிக்கும் . அவன் சொன்ன விதம் , நம்மை வியப்பில் ஆழ்த்தும் . இப்படி கூட இதைச் சொல்ல முடியுமா என்று நினைக்க வைக்கும் .
சோக இரசம்.
முதல் புலம்பல் ஜடாயு புலம்பல் . தயரதன் இறந்த சேதி கேட்டு ஜடாயு புலம்புகிறான் .
நினைத்துப் பார்ப்போம். நெருங்கிய நண்பர் இறந்து விட்டதாக அவருடைய மகன் நம்மிடம் கூறுகிறான் . அந்த மகனிடம் நாம் என்ன சொல்லுவோம் ?
ஜடாயு என்ன சொன்னார் என்று பார்ப்போம் .
No comments:
Post a Comment