Saturday, June 16, 2012

நான்மணிக்கடிகை - அனுபவ ஞானம்


நான்மணிக்கடிகை - அனுபவ ஞானம்


எல்லாம் அறிந்தாரும் இல்லை.

ஏதும் அறியாதாரும் இல்லை

எல்லா நல்ல குணங்களும் உள்ளவரும் இல்லை

ஒரு நல்ல குணம் கூட இல்லாதவரும் இல்லை.

மனிதர்களுக்குள் அறிந்ததும், அறியாததும், நல்லதும், கெட்டதும் கொஞ்சம் கூட குறைய இருக்கும்...மத்தபடி எல்லாரும் ஒண்ணுதான்

ஒருவ னறிவானும் எல்லாம் யாதொன்றும்
ஒருவ னறியா தவனும் ஒருவன்
குணன் அடங்கக் குற்றமு ளானும் ஒருவன்
கணன் அடங்கக் கற்றானும் இல்.

கொஞ்சம் சிக்கலான பாடல் அமைப்பு. "இல்" என்ற கடைசி வார்த்தையை ஒவ்வொரு வாக்கியத்தின் இறுதியிலும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பாடலை கொஞ்சம் மாற்றி அமைப்போமா ?


ஒருவ னறிவானும் எல்லாம் - இல்
யாதொன்றும் ஒருவ னறியா தவனும் - இல்
ஒருவன் குணன் அடங்கக் குற்றமு ளானும் - இல்
ஒருவன் கணன் அடங்கக் கற்றானும் - இல்.

அர்த்தம் புரிய இன்னும் கொஞ்சம் திருப்பிப் போடணும்....

ஒருவ னறிவானும் எல்லாம் - இல் = எல்லாம் அறிவான் ஒருவனும் இல் = எல்லாம் தெரிந்தவர் யாரும் இல்லை.

யாதொன்றும் ஒருவ னறியா தவனும் - இல் = யாது ஒன்றும் அறியாதவனும் ஒருவனும் இல்லை = ஒண்ணுமே தெரியாதவன் யாரும் இல்லை

ஒருவன் குணன் அடங்கக் குற்றமு ளானும் - இல் = ஒரு நல்ல குணமும் இல்லாமல், குற்றமே நிறைந்தவன் யாரும் இல்லை

ஒருவன் கணன் அடங்கக் கற்றானும் - இல். = கணன் என்றால் தொகுப்பு, தொகுதி, முழுவதும் என்று அர்த்தம் கொள்ளலாம். ஒன்று விடாமல் எல்லாம் கற்றானும் இல்லை


மனிதர்களுக்குள் உயர்வு தாழ்வு என்பது எல்லாம் ரொம்ப ஒண்ணும் பெரிசா இல்லை



2 comments:

  1. ரொம்ப நல்ல பாட்டு.

    படிப்பாலும், பணத்தாலும், அழகாலும், பரம்பரையாலும் என்று எத்தனையோ பேர் தன்னை உயர்வாக நினைத்துக்கொள்கிறார்களே!

    ReplyDelete
  2. நல்ல பாட்டு.

    ReplyDelete