Saturday, June 2, 2012

விவேக சிந்தாமணி - முன்னும் பின்னும்


விவேக சிந்தாமணி - முன்னும் பின்னும் 


விவேக சிந்தாமணி தமிழ் நீதி நூல்களில் சற்று வித்தியாசனமான நூல்.

பொதுவாகவே நீதி நூல்கள் அதை செய், இதை செய்யாதே என்று பெருசுக மாதிரி அட்வைஸ் பண்ணும். 

விவேக சிந்தாமணி அப்படி பட்ட நூல் அல்ல. ரொம்ப ப்ராக்டிகல். அதில் இருந்து ஒரு பாடல்:


பிள்ளைதான் வயதில் மூத்தால்
பிதாவின் சொற் புத்தி கேளான்
கள்ளின் நல் குழலாள் மூத்தால்
கணவனை கருதிப் பாராள்
தெள்ளற வித்தை கற்றாள்
சீடனும் குருவை தேடான்
உள்ள நோய் பிணிகள் தீர்ந்தால்
உலகோர் பண்டிதரை தேடார்

எப்படி இருக்கு? ச்சும்மா அதிருதுல....

வயசானா, பையன் அப்பா சொல்றத கேட்க மாட்டான்.
அதே மாதிரி, வயதான மனைவி கணவனை மதிக்க மாட்டாள்.
எல்லா வித்தையையும் கற்று கொண்ட பின், சீடன் குருவை மதிக்க மாட்டான்
நோய் குணமான பின், நோயாளி மருத்துவரை மதிக்க மாட்டான்.

இது தாங்க உலக இயற்கை. பையனோ, மனைவியோ நீங்கள் சொல்வதை கேட்காவிட்டால், ரொம்ப கவலைப் படாதீங்க....அது தான் உலக இயற்கை....

(Appeal: If you like this blog, please click g+1 button below to express your liking)




2 comments:

  1. இப்படி ஒரு நூல் இருப்பதாகக் கேட்டிருக்கிறேன், ஆனால் அதிலிருந்து ஒரு பாடல் படிப்பேன் என்று நினைத்ததே இல்லை. வித்தியாசமான பாடல்தான்.

    ReplyDelete
  2. எல்லோரும் படித்து இன்புற வேண்டிய தமிழ்ப் பாக்கள். அருமையான விளக்கம். தமிழின் இனிமையை என்னவென்பேன்?

    ReplyDelete