ஆசாரக் கோவை - எப்படியெல்லாம் சாப்பிடக் கூடாது
எப்படி எல்லாம் சாப்பிடக் கூடாது என்று ஆசாரக் கோவை ஒரு பட்டியல் தருகிறது.
கேட்பார்கள் என்றால், நம் பிள்ளைகளுக்கு சொல்லலாம்....:)
கிடந்து உண்ணார்; நின்று உண்ணார்; வெள்ளிடையும் உண்ணார்;
சிறந்து மிக உண்ணார்; கட்டில்மேல் உண்ணார்;
இறந்து, ஒன்றும் தின்னற்க, நின்று!
கிடந்து உண்ணார்; = படுத்துக் கொண்டு சாப்பிடக் கூடாது
நின்று உண்ணார் = நின்று கொண்டு சாப்பிடக் கூடாது (generally, fast food center களில் சாப்பிடக் கூடாது)
வெள்ளிடையும் உண்ணார் = வெட்ட வெளியில் இருந்து சாப்பிடக் கூடாது
சிறந்து மிக உண்ணார்; = நல்லா இருக்கிறது என்பதற்காக, நிறைய சாப்பிடக் கூடாது
கட்டில்மேல் உண்ணார் = படுக்கை அறையில் சாப்பிடக் கூடாது
இறந்து = ஒரு முறை இல்லாமல் (நேரம் காலம் பார்க்காமல்)
ஒன்றும் தின்னற்க, நின்று! = ஒன்றும் சாப்பிடக் கூடாது
கொஞ்சம் மாத்தி சொல்லுவதாய் இருந்தால்,
உட்கார்ந்து சாப்பிடனும், அளவோட சாப்பிடனும், நேரம் காலம் அறிந்து சாப்பிடனும், சரியான இடத்தில இருந்த உணவு உண்ண வேண்டும்....
This comment has been removed by the author.
ReplyDeleteWe don't follow any of the said rules.
ReplyDeleteIs it good to follow ?
DeleteOf course yes.
Deleteஅருமை
Delete