Saturday, June 30, 2012

தனிப் பாடல் - கம்பனின் சுய சோகம்


தனிப் பாடல் - கம்பனின் சுய சோகம்

கம்பனின் மகன் அம்பிகாபதி இறந்து போனான்.

கம்பனுக்கு சோகம் தாளவில்லை.

தன் நண்பன் ஓட்டகூத்தனிடம் சொல்வான்....

"மகன் கானகம் போன துக்கம் கூடத் தாளாமல் தசரதன் உயிர் விட்டான். நான் என் மகன் இறந்த பின் கூட இன்னும் உயிரோடு இருக்கிறேனே...நான் எவ்வளவு கல் நெஞ்சக்காரன்" என்று தன்னை தானே நொந்து கொள்கிறான்.


பரப்போத ஞாலம் ஒருதம்பி ஆளப் பனிமதியம்
துரப்போன் ஒருதம்பி பின் தொடரத் தானும் துணைவியுடன்
வரப்போன மைந்தர்க்குத் தாதை பொறாது உயிர்மாய்ந்தனன் நெஞ்சு
உரப்போ எனக்கு இங்கு இனி யாருவமை உரைப்பதற்கே?



பரப்போத = பரந்து விரிந்த ;போத (விரிந்த, கிளைத்த)

ஞாலம் = இந்த உலகம் எல்லாம்

ஒருதம்பி ஆளப் = ஒரு தம்பி ஆள (பரதன் ஆள)

பனிமதியம் = வெண் கொற்றக் குடை

துரப்போன் = துறந்தவன்

ஒருதம்பி = மற்றொரு தம்பி (இலக்குவன்)

பின் தொடரத் = பின் தொடர்ந்து வர

தானும் = தானும்

துணைவியுடன் = துணைவியான சீதையுடன்

வரப்போன = கானகம் போன

மைந்தர்க்குத் = பிள்ளைகளுக்காக

தாதை பொறாது = தந்தை (மனம் பொறுக்காமல்)

உயிர்மாய்ந்தனன் = உயிர் விட்டான்

நெஞ்சு = என் மனம்

உரப்போ = கடினமோ?

எனக்கு இங்கு = எனக்கு இங்கு

இனி = இனி

யாருவமை = யார் உவமை (உதாரணம்)

உரைப்பதற்கே? = சொல்வதற்கு 




2 comments:

  1. I heard that otta koothan was kamban's enemy. WAs he his friend?

    ReplyDelete
  2. There are two versions of the story. I took the version which is more pleasant...:)

    ReplyDelete