Monday, November 26, 2012

நல்வழி - இட்டு, உண்டு, இரும்


நல்வழி - இட்டு, உண்டு, இரும் 


அவ்வையார் எழுதிய இன்னொரு நூல் "நல் வழி". அதில் உள்ள பாடல்கள் பொதுவாக எல்லாம் விதிப்படி நடக்கும், நம்மால் ஆவது ஒன்றும் இல்லை, நடப்பது நடக்கட்டும் என்ற ரீதியில் இருக்கும். அதிலிருந்து சற்று வேறுபட்ட பாடல்களைப் பார்ப்போம்....

நாம் மிகுந்த அன்பு வைத்தவர்கள் யாரவது இறந்து விட்டால் நாம் மிக வருந்தி அழுவோம். எத்தனை வருடம் அழுது புரண்டாலும், இறந்தவர் திரும்பி வரப் போவது இல்லை. அது மட்டும் அல்ல, நாமும் ஒரு நாள் அந்த வழியே போகத்தான் போகிறோம். அந்த நாள் வரும் வரை, வேண்டியவர்களுக்கு உணவளித்து, நீங்களும் உண்டு, அமைதியாய் இருங்கள்.....

பாடல் 


ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவரோ மாநிலத்தீர் – வேண்டா!
நமக்கும் அதுவழியே! நாம்போம் அளவும்
எமக்கென்? என்(று) இட்டு உண்டு இரும். 

பொருள் 

வேண்டுமா ? மிக மிக எளிமையான பாடல்...படித்தாலே புரியும் ... 

1 comment:

  1. சின்ன வயதில் படித்த இந்தப் பாடல் இப்போது நினைவுக்கு வருகிறது.

    ReplyDelete