Thursday, March 7, 2013

நந்திக் கலம்பகம் - குடமும் இடையும்


நந்திக் கலம்பகம் - குடமும் இடையும் 


இந்த ப்ளாக் வயது வந்தவர்களுக்கு மட்டும்.

உங்கள் வயது பதினெட்டுக் கீழே இருந்தால், உடனடியாக இந்த ப்ளாகை படிப்பதை நிறுத்தவும்.

அவள் இடை முறிந்து விழுந்து விட்டாள்.

முரியாதா பின்னே ... கையில் இரண்டு குடம், தலையில் ஒரு குடம், பத்தாதற்கு இந்த குடம் வேறு...இத்தனையும் கொண்டு சென்றால் ஈரக் காற்றுக்குத் தாங்காத இடை எப்படி தாங்கும்...முறிஞ்சு போச்சு....

பாடல்


கைக்குடம் இரண்டும், கனக கும்பக் குடமும்
இக்குடமும் கொண்டாள் முறியாதே? - மிக்க புகழ்
வெய்க் காற்றினால் விளங்கும் வீருநந்தி மா கிரியில்
ஈக்காற்றுக்கு ஆற்றா இடை?”


பொருள்






கைக்குடம் இரண்டும் = கையில் இரண்டு குடமும்

கனக கும்பக் குடமும் = தலையில் ஒரு தங்கக் குடமும்

இக்குடமும் = இந்தக் குடத்தையும்

கொண்டாள் முறியாதே? = கொண்டு சென்றாள் முரியாதோ

 மிக்க புகழ் = மிகுந்த புகழை உடைய

வெய்க் காற்றினால் =  மூங்கில் காற்றினால்

விளங்கும் வீருநந்தி மா கிரியில் = விளங்கும் வீரமான நந்தியின் மலையில்

ஈக்காற்றுக்கு ஆற்றா இடை? = ஈரமான (சிறிய ) காற்றுக் தாங்காத இடை.



1 comment: