Saturday, September 21, 2013

இராமாயணம் - பரதன் கங்கை கரை அடைதல்

இராமாயணம் - பரதன் கங்கை கரை அடைதல்



இராமனை மீண்டும் அழைத்து வந்து அரியணையில்  அமர்த்த வேண்டும் என்ற எண்ணத்தோடு பரதன் கங்கைக் கரையை  அடைந்தான்.

முதல் பாடலிலேயே கம்பன்  உருகுகிறான்.

பூ விரிந்தது போன்ற அழகிய பாதங்களைக் கொண்ட பரதன், ஒப்பிட்டு கூற முடியாத அளவிற்கு உயர்ந்த சேனைகளை கொண்டவன்,  காவிரி நாடு போல உயர்ந்த அயோத்தியை விட்டு எல்லா உயிர்களும் பார்த்து இரக்கப் படும்படி கங்கைக் கரையை அடைந்தான்.

பாடல்

பூ விரி பொலன் கழல், பொரு இல் தானையான்,
காவிரி நாடு அன்ன கழனி நாடு ஒரீஇ,
தாவர சங்கமம் என்னும் தன்மைய
யாவையும் இரங்கிட, கங்கை எய்தினான்.


பொருள்





பூ விரி =  மலர்ந்த மலரைப் போன்று உள்ள

பொலன் = அழகான

கழல் = பாதங்கள் . பாதங்கள் விரிந்த மலர் போல இருந்தால் முகம் எப்படி இருக்கும் ? பரதனின் அழகை சொல்ல வருகிறார் கம்பன். அவன் பாதங்கள் அழகாய் இருந்தன  சொல்லி நிறுத்துகிறார்.

பொரு இல் தானையான் = சிறந்த படைகள் அல்லது சண்டையே    படைகள்.

காவிரி நாடு அன்ன =  காவிரி நாடு போல

கழனி நாடு ஒரீஇ = கழனிகளைக் கொண்ட நாடான அயோத்தியை விட்டு

தாவர  = தாவரங்கள் (அசையாமல் ஒரு இடத்தில் இருப்பன)

சங்கமம் = அதில் சங்கமிக்கும்  உயிர்கள் -  அசைவன

என்னும் தன்மைய = என்ற தன்மைகளைக் கொண்ட

யாவையும் இரங்கிட = எல்லாம் அவனைப் பார்த்து இரக்கம் கொள்ள

கங்கை எய்தினான் = கங்கைக் கரையை அடைந்தான்

சரி, ஏன் எல்லா உயிர்களும் அவன் மேல் இரக்கப்பட்டன ?

1 comment:

  1. ஏன் எல்லா உயிர்களும் அவன் மேல் இரக்கப்பட்டன ? பதில் எழுதவும்.

    ReplyDelete