Tuesday, February 12, 2013

இராமானுஜர் நூற்றந்தாதி - அன்று ஏற்றிய விளக்கு


இராமானுஜர் நூற்றந்தாதி - அன்று ஏற்றிய விளக்கு  


சமய பெரியவர்களுக்கு ஏதோ ஒரு உண்மை கிடைத்திருக்கிறது. அதை வைத்துக் கொண்டு அவர்கள் சும்மா இருந்திருக்கலாம். இல்லை அதை வைத்து நாலு காசு பண்ணி இருக்கலாம். காசு  பண்ணிய மாதிரி தெரியவில்லை. காலம் காலத்திருக்கு பின் வரும் சந்ததிகளுக்கு எல்லாம் பயன் பட வேண்டும் என்று எழுதி வைத்து விட்டு போய் இருக்கிறார்கள்.

அவர்கள் ஏற்றி வைத்த விளக்கு இன்றும் ஒளி  வீசி , இருள் அகற்றி நம் வாழ்க்கைக்கு வழி காட்டி கொண்டிருக்கிறது 

பாடல் 


வருத்தும் புறவிருள் மாற்ற, எம் பொய்கைப்பி ரான்மறையின்
குருத்தின் பொருளையும் செந்தமிழ் தன்னையும் கூட்டி ஒன்றத்
திரித்தன் றெரித்த திருவிளக் கைத்தன் திருவுள்ளத்தே
இருத்தும் பரமன் இராமா னுசனெம் இறையவனே.

பொருள் 

வருத்தும் = வருத்தம் தரும் 

புறவிருள் மாற்ற = புற இருளை மாற்ற 

எம் பொய்கைப்பி ரான் = எம்முடைய பொய்கை ஆழ்வார் 

மறையின் = வேதங்களின் 

குருத்தின் = முளை விடும் , தோன்றும், முளைக்கும்

பொருளையும் = பொருளையும் 

செந்தமிழ் தன்னையும் = செந்தமிழையும் 

கூட்டி = ஒன்றாகக் கூட்டி 

ஒன்றத் திரித்து  = ஒன்றாகத் திரித்து 

அன்று எரித்த = அன்று ஏற்றி வைத்த 
 
திருவிளக்கைத் = அறிவொளி வீசும் விளக்கை 

தன் திருவுள்ளத்தே = தன்னுடைய திருவுள்ளத்தே 

இருத்தும் = மனதில் வைக்கும் 

பரமன் = மிக உயர்ந்த 

இராமானுசன் = இராமானுசன் 
  
எம் இறையவனே  = எம்முடைய இறைவனே 

பிரபந்தம் தமிழ் வேதம். 

வேதத்தின் சாரம் எல்லோருக்கும் பயன்பட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் எழுதப் பட்டது பிரபந்தம் 

2 comments:

  1. Good interpretation.The Pasuram is 'வையன் தகளியா'.Thanks.

    ReplyDelete
  2. Here is that pasuram -

    வையம் தகளியா வார் கடலே நெய்யாக
    வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய
    சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல் -மாலை
    இடர் - ஆழி நீங்குவே என்று.

    just writing only the meaning not word by word meaning.

    பூமியை அகலாகவும் அதை சுற்றயுல்ல கடலே நெய்யாகவும் சூரியன் விளக்காகவும் சுடர் வீசும் சக்கரத்தை ஏந்திய பெருமானது திருவடிகளில் இப்பாமாலை ஆகிய பூமாலையை சாத்தினேன்,எதற்காக என்றால் பாகவத் கைகர்யததிற்கு(இடையூராக உள்ள) துன்பக் கடல் நீங்குவதர்க்காக.

    ReplyDelete