திருவாசகம் - அதிசயப் பத்து - எண்ணி லேன்திரு நாமஅஞ் செழுத்தும்
https://interestingtamilpoems.blogspot.com/2025/03/blog-post_17.html
"நன்றாகப் படிக்காததால் தேர்வில் வெற்றி பெறவில்லை" என்று ஒருவன் கூறினால் நாம் என்ன அறிந்து கொள்கிறோம்?
சரியா படிக்கல, அதனால் வெற்றி பெறவில்லை என்று அறிகிறோம்.
அது மட்டும் அல்ல.
தேர்ச்சி பெறவேண்டும் என்றால் நன்றாக படிக்க வேண்டும் என்ற அர்த்தமும் அதில் அடங்கி இருக்கிறது.
மணிவாசகர் சொல்கிறார்,
"தனக்காவது சொந்த அறிவு வேண்டும். அது இல்லை என்றால் தெரிந்தவர்களிடம் கேட்க வேண்டும். இந்த பூமியில் பிறந்து என்ன பலனைக் கண்டேன்? ஏதோ பிறந்தேன், வளர்ந்தேன், இறந்தேன், மறுபடி பிறப்பேன் என்று என் வாழ்க்கை இப்படியே போய்க் கொண்டு இருக்கிறது. நல்ல வேளை சிவன் என்ன ஆட்கொண்டு, தன் அடியார் கூட்டத்தில் என்னையும் சேர்த்துக் கொண்டான். என்ன ஒரு அதியசம்" என்கிறார்.
பாடல்
எண்ணி லேன்திரு நாமஅஞ் செழுத்தும்என் ஏழைமை யதனாலே
நண்ணி லேன்கலை ஞானிகள் தம்மொடும் நல்வினை நயவாதே
மண்ணி லேபிறந் திறந்துமண் ணாவதற் கொருப்படு கின்றேனை
அண்ணல் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே.
பொருள்
எண்ணி லேன் = மனதால் நினைத்துக் கூட பார்க்க மாட்டேன்
திரு நாம = உன் திருநாமமாகிய
அஞ் செழுத்தும் = அஞ்சு எழுத்தை
என் ஏழைமை யதனாலே = என்னுடைய அறிவீனத்தினாலே
நண்ணி லேன் = உடன் சேர மாட்டேன்
கலை ஞானிகள் தம்மொடும் = வேத ஆகமங்களில் கற்றுயர்ந்த ஞானிகளுடன்
நல்வினை நயவாதே = நல்ல செயல்களை செய்யாமல்
மண்ணி லேபிறந் திறந்து = மண்ணிலே பிறந்து இறந்து
மண் ணாவதற் = மண்ணோடு மண்ணாகப் போவதற்கு
கொருப்படு கின்றேனை = முற்படுகின்ற என்னை
அண்ணல் ஆண்டு = அண்ணலாகிய சிவன் என்னை ஆட்கொண்டு
தன் அடியரிற் = தன் அடியவர் கூட்டத்தில்
கூட்டிய = சேர்த்துக் கொண்ட
அதிசயங் கண்டாமே. = அதிசயத்தைப் பாருங்கள்
அஞ்செழுத்தை நினைக்க மாட்டேன்.
அடியவர்களோடு சேர மாட்டேன்
நல்ல காரியங்களை செய்ய மாட்டேன்
No comments:
Post a Comment