Thursday, July 25, 2013

தேவாரம் - நாத்திகம் பேசாதே

தேவாரம் - நாத்திகம் பேசாதே 



நடையை மெய்யென்று நாத்திகம் பேசாதே
படைகள் போல்வரும் பஞ்சமா பூதங்கள்
தடையொன் றின்றியே தன்னடைந் தார்க்கெலாம்
அடைய நின்றிடும் ஆனைக்கா வண்ணலே.

பெரிய சுனாமி வருகிறது - மனிதனால் ஏதாவது செய்ய முடியுமா ? அதை தடுத்த நிறுத்த முடியுமா ? வேண்டுமானால் ஓடி ஒளிந்து கொள்ளலாம்.

பெரிய நிலநடுக்கம் வருகிறது - கை கொண்டு தடுக்க முடியுமா ?

சூறாவளி, புயல் காற்று அடிக்கிறது - எதை கொண்டு அதை தடுக்க முடியும்.

இப்படி இயற்கையின் சீற்றங்களை மனிதன் ஒன்றும் செய்ய முடியாது.

இப்படி  கட்டுப் படுத்த முடியாத இயற்கையின் சக்தியைப் போல இன்னொரு சக்தியும் இருக்கிறது. நாம் அதை சரியாக  வில்லை.

அது தான், நமது ஐந்து புலன்களின் சக்தி.

அவை சீறி எழும் போது நாம் ஒன்றும் செய்ய முடியாது. அது இழுக்கும் பக்கம்  அடித்துச் செல்லப் பட வேண்டியதுதான். தடுத்து எல்லாம் நிறுத்த முடியாது.

இல்லை இல்லை ...கொஞ்சம் பொறுங்கள்...

ஆ...அவற்றை தடுத்து நிறுத்தும் சக்தி இருக்கிறது.

அவற்றை தடுத்து நிறுத்தி நம்மை காக்கும்  சக்தி இறை சக்தி.

அப்படி எல்லாம் இல்லை, கடவுள் இல்லை, பாவ புண்ணியம் இல்லை, மறு பிறப்பு இல்லை என்று நாத்திகம் பேசி புலன் வழி சென்று கஷ்டப் படாதீர்கள் என்று   நாவுக்கரசர்  சொல்கிறார்.

பொருள்





நடையை மெய்யென்று = உலக நடையை, உலக வழக்கை, வாழ்க்கையை உண்மை என்று நம்பி

நாத்திகம் பேசாதே = நாத்திகம் பேசாதே

படைகள் போல்வரும் = படைகள் போல சண்டைக்கு வரும்

பஞ்சமா பூதங்கள் = ஐந்து பெரிய பூதங்கள்

தடையொன் றின்றியே = அவற்றின் தடை ஒன்றும் இல்லாமல்

தன்னடைந் தார்க்கெலாம் = தன்னை அடைந்தவர்களுக்கு எல்லாம்

அடைய நின்றிடும் = தன்னை வந்து அடைய நின்றிடும் 

ஆனைக்கா வண்ணலே.= திருவானைக்காவில் இருக்கும் அண்ணலே

உங்கள் புலன்கள் உங்களை  நோக்கி செல்வதற்கு தடையாக இருந்தாலும், அவற்றை இல்லாமல் செய்து அவனை அடைய வைப்பார்.

அவரைப் போய் இல்லை என்று நாத்திகம் பேசாதே என்று கூறுகிறார் நாவுக்கரசர் .....

கேக்குதா ?



2 comments:

  1. பஞ்ச மா பூதங்கள் எவை? நீர், நிலம், நெருப்பு, ஆகாயம், காற்று - இவையா? அல்லது ஐந்து புலன்களா?!

    ReplyDelete
  2. இங்கு பஞ்சாமா பூதங்கள் என்பது ஐந்து புலன்கள்

    ReplyDelete