Monday, July 1, 2013

முறிந்த வில் - முன்னை ஊழ் வினையால் முடிக்கில் ஆம்

முறிந்த வில் - முன்னை ஊழ் வினையால் முடிக்கில் ஆம் 


ஜனகன், சிவ தனுசை கொண்டுவரும்படி சொன்னான். அது கேட்டு வீரர்களும் அந்த பெரிய சிவ தனுசை கொண்டு வந்தார்கள். அதைப் பார்த்ததும் அங்குள்ள மக்கள் எல்லாம் பெரு மூச்சு விடுகிறார்கள்.

எதுக்கு இந்த இராஜா இந்த வில்லை கொண்டு வா ன்னு சொன்னார். மூளையே இல்லை இந்த இராசாவுக்கு. இந்த வில்லை வளைக்க மனித சக்தியால் முடியாது. ஒரு வேளை இதற்கு முன் செய்த புண்ணியங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து வந்தால் அந்த புண்ணிய பலத்தில் வேண்டுமானால் முடியலாம். பாவம் அந்த பெண் சீதை இந்த வில்லை பார்த்தாளோ என்னவோ. பார்த்தால் எவ்வளவு வருத்தப் படுவாள் ? இந்த வில்லை யார் வளைத்து தன்னை மணந்து கொள்ளப் போகிறார்களோ என்று அவள் மனம் எவ்வளவு வேதனைப் படும்....

பாடல்



என். “இது கொணர்க” என     இயம்பினான்?’ என்பார்;
‘மன்னவர் உளர்கொலோ    மதி கெட்டார்?’ என்பார்;
‘முன்னை ஊழ் வினையினால்    முடிக்கில் ஆம்’ என்பார்;
கன்னியும் இச் சிலை    காணுமோ?’ என்பார்.


பொருள்





என். “இது கொணர்க” என     இயம்பினான்?’ = எதற்கு இதை கொண்டு வா ன்னு சொன்னான் ?

 என்பார் = என்று மக்கள் கேட்டார்கள்

‘மன்னவர் உளர்கொலோ    மதி கெட்டார்? ’ = இந்த இராஜா மாதிரி ஒரு முட்டாள் யாராவது இருக்கிறார்களா?

 என்பார் = என்று சொன்னவர்களும் இருந்தார்கள்

‘முன்னை ஊழ் வினையினால்    முடிக்கில் ஆம்’ = முன்பு செய்த நல்ல புண்ணியத்தால் ஒரு வேளை இந்த காரியத்தை முடிக்கலாம். முடியாததையும் முடிக்க வல்லது தான் முன் செய்த தவம் என்பது கருத்து. 

 என்பார் = என்று சொன்னவர்களும் இருந்தார்கள்

கன்னியும் இச் சிலை    காணுமோ?’ என்பார் = அந்த பெண் (சீதை) இந்த கொடுமையான காட்சியை காண சகிப்பாளா என்று கூறியவர்களும் இருந்தார்கள் 

No comments:

Post a Comment