Thursday, August 1, 2013

நல்வழி - பிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை

நல்வழி - பிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை




பிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை பேசுங்கால்
இச்சைபல சொல்லி இடித்துண்கை - சிச்சீ
வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது
உயிர்விடுகை சால உறும்

யாருக்குப் பயம் வரும் ? யாரிடம் தேவை அதிகமாய் இருக்கிறதோ அவர்களுக்கு பயம் அதிகம் இருக்கும். 

தேவைகள் அதிகம் ஆகும்போது, அதற்கு நிறைய பணம் வேண்டும். பணம்  சம்பாதிக்க யார்  யாரை எல்லாமோ பார்த்து பல்லை காண்பிக்க வேண்டி இருக்கிறது, எல்லோரிடமும் பயப் பட வேண்டி இருக்கிறது, யார் என்ன செய்வானோ என்ற பயம் பிடித்து ஆட்டும். 

மனதிற்குள் வைத்தாலும் வெளியில் ஆசை ஆசையாகப் பேச வேண்டி இருக்கிறது. 

யாரிடம் என்ன உதவி கேட்கலாம் என்று மனம் கணக்கு போட்டுக் கொண்டே இருக்கிறது. 

அவ்வையார் சொன்னார்....

பிச்சை எடுப்பது கேவலம்.

அதை விட கேவலமான ஒன்று இருக்கிறது. 

அது தான், மற்றவர்களிடம் ஆசை வார்த்தை சொல்லி , அவர்களிடம் பலன் பெற்று உயிர் வாழ்வது.  அதை விட சாகலாம் என்கிறார் 

 பிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை பேசுங்கால்
இச்சைபல சொல்லி இடித்துண்கை - சிச்சீ
வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது
உயிர்விடுகை சால உறும்


பொருள் 


பிச்சைக்கு = பிச்சை எடுப்பதை விட 

மூத்த குடிவாழ்க்கை = பெரிய கேவலமான வாழ்கை 

பேசுங்கால் = எதுவென்று சொல்வது என்றால்

இச்சைபல சொல்லி = ஆசை வார்த்தை பல சொல்லி 

இடித்துண்கை = இடித்துரைகள் (வசவுகளை) கேட்டு வாழ்வது 

சிச்சீ = சிச்சீ
 
வயிறு வளர்க்கைக்கு = வயிறு வளர்பதற்கு 

மானம் அழியாது = மானத்தை அழிய விடுவதைக் காட்டிலும் 

உயிர்விடுகை சால உறும் = உயிரை விடுவது மிகச் சிறந்தது 

No comments:

Post a Comment