Wednesday, August 14, 2013

திருக்குறள் - இனத்தால் உண்டாகும் இன்னான் என்ற சொல்

திருக்குறள் - இனத்தால் உண்டாகும் இன்னான் என்ற சொல் 


மனத்தானா மாந்தர்க் குணர்ச்சி யினத்தானா 
மின்னா னெனப்படுஞ் சொல்.

சீர் பிரித்த பின்

மனத்தானாகும் மாந்தர்க்கு உணர்ச்சி இனத்தானாகும்
இன்னான் எனப்படும் சொல்

பொருள்

மனிதர்களுக்கு உணர்ச்சி மனத்தால் உண்டாகும்.

ஒருவன் இன்னவன் என்ற சொல் அவன் சேரும் இனத்தால் வரும்.

நல்லவர்களோடு சேர்ந்து இருந்தால், நல்லவன் என்ற பெயர் கிடைக்கும்.

கெட்டவர்களோடு சேர்ந்து இருந்தால், அவர்களை திருத்துகிறேன் பேர்வழி என்று கூட, கெட்டவன் என்ற பெயர் கிடைக்கும்.

மனிதனின் உணர்சிகள் அவன் மனதில் இருந்து பிறக்கிறது. மனம் நல்லது கெட்டது அறியாதது. சுத்தமான நீர் போன்றது.

நீர் சேரும் இடத்திற்கு தகுந்த மாதிரி மாறுவது போல மனிதர்கள் சேரும் இடத்தை  பொறுத்து மாறுகிறார்கள்.

நல்லவர்களோடு சேரும்போது நல்லவர்களாகவும்
தீயவர்களோடு சேரும்போது தீயவர்களாகவும் மாறி விடுவார்கள்.


இன்னும் சொல்லப் போனால், மனிதர்கள் மாறுவது இல்லை, அவர்கள் மாறிவிட்டதாக  இந்த உலகம் சொல்லும்.

இன்னான் எனப்படும் சொல்

என்கிறார்  வள்ளுவர்.

கெட்டவர்கள் மத்தியில் நல்லவர்கள் இருந்தால் அவர்களையும் உலகம் கெட்டவன் என்றே  "சொல்லும்"

(இந்த குறள் பற்றி மேலும் எழுத ஆசை....)

No comments:

Post a Comment