Saturday, August 17, 2013

பெரிய புராணம் - மை பொதி விளக்கு

பெரிய புராணம் - மை பொதி விளக்கு 


முடிவுகள் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கிறதா ?

கொள்கைக்காக உயிர் துறப்பது வெற்றியா, தோல்வியா ?

நாட்டுக்காக ஒருவன் போராடி உயிர் துறக்கிறான். அவன் வென்றவனா ? தோற்றவனா ?

ஒரு மாணவன் மிகுந்த கவனத்தோடு, இரவும் பகலும் கண் விழித்து படிக்கிறான்.  ஏதோ ஒரு காரணத்தால் தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற முடியவில்லை.ஓரிரு மதிப்பெண்கள் குறைந்து  போகிறது. அவன் வெற்றி பெற்றவனா ? தோல்வி அடைந்தவனா ?

I I t , cut off mark  கிடைக்கவில்லை என்று பிள்ளைகளை நாம்  கோபித்து கொள்கிறோம். பிள்ளைகள் எவ்வளவு கஷ்டப்பட்டு படித்து இருந்தாலும் மதிப்பெண்கள் வராவிட்டால் எல்லாம் போய் விட்டது என்று கவலைப்  படுகிறோம்.பிள்ளகைளை திட்டுகிறோம்.

 படிப்பு, விளையாட்டு, உத்தியோக உயர்வு என்று  எங்கு பார்த்தாலும் வெற்றி ஒன்றே குறிக்கோள் என்று உலகம் மாறி விட்டது.

அது சரிதானா ?

புராணங்கள் நமக்கு வழி  காட்டுகின்றன.

பெரிய புராணத்தில் ஒரு  கதை. மெய் பொருள் நாயனார் என்பவரின் கதை.

மெய் பொருள் நாயனார் என்று  அரசன்  இருந்தார். சிறந்த சிவ பக்தர்.

அடியார்கள் சேவையே தன் சேவை என்று வாழுந்து வந்தவர்

சிவனடியார்களை காண்பதுதான் மெய் பொருள் என்று எண்ணி வாழ்ந்த உத்தமர்.

அவருக்கு ஒரு எதிரி இருந்தான். முத்தநாதன் என்பது அவன்  பெயர். அவன் மெய்பொருள் நாயனாரோடு பல முறை சண்டையிட்டு தோற்றவன்.

அவரை, நேரடி சண்டையில் வெல்ல முடியாது என்று எண்ணி, ஒரு சூழ்ச்சி  செய்தான்.

சிவனடியார் போல் வேடமிட்டு அவருடைய அரண்மனையை அடைந்தான்.

பாடல்

மெய்எலாம் நீறு பூசி
     வேணிகள் முடித்துக் கட்டிக்
கையினில் படைக ரந்த
     புத்தகக் கவளி ஏந்தி
மைபொதி விளக்கே என்ன
     மனத்தின்உள் கறுப்பு வைத்துப் 
பொய்த்தவ வேடம் கொண்டு
     புகுந்தனன் முத்த நாதன்


பொருள்





மெய்எலாம் நீறு பூசி = உடம்பு எல்லாம்  திரு நீறு பூசி

வேணிகள் முடித்துக் கட்டிக் = முடியை சடையாகக் கட்டி

கையினில் படைக ரந்த = கையினில் படை கரந்த  (கரத்தல் = மறைத்தல்
   
புத்தகக் கவளி ஏந்தி = புத்தக சுவடிகளை ஏந்தி. புத்தகத்திற்குள் கத்தி.

மைபொதி விளக்கே என்ன = இருளை தனக்குள் மறைத்து வைத்து இருக்கும் விளக்கு  போல.அதாவது சுடர் அணைந்தால் இருள் உடனே கவிழ்ந்து கொள்ளும்  அல்லவா. தெய்வப் புலவர் சேக்கிழார் சொல்கிறார், விளக்கு இருளை ஒளித்து வைத்து இருந்ததாம். சுடர் போன பின் இருள் வருவது போல, அடியார் உடை சுடர் போல பிரகாசமாய் இருந்தாலும் உள்ளுக்குள் இருள் கவிழ்ந்து  கிடக்கிறது.


மனத்தின்உள் கறுப்பு வைத்துப் = மனதின் உள் வஞ்சனை வைத்து

பொய்த்தவ வேடம் கொண்டு = பொய்யான தவ வேடம் கொண்டு

புகுந்தனன் முத்த நாதன் = புகுந்தனன் முத்த நாதன்

 சரி,இதில்   எங்கே வெற்றி தோல்வி வருகிறது என்று கேட்கிறீர்களா ?

வருகிறது, அடுத்த ப்ளாகில்...


2 comments:

  1. இருளை தனக்குள் மறைத்து வைத்து இருக்கும் விளக்கு போல.
    beautiful.

    ReplyDelete
  2. மிகவும் நன்று

    ReplyDelete