Sunday, September 4, 2022

கந்தரனுபூதி - மெய்யியல்

        

 கந்தரனுபூதி -  மெய்யியல்


பக்தி இலக்கியம் என்றால் பொதுவாக இறை நம்பிக்கை, இறைவன் எப்படி இருப்பான், அவனுடைய தோற்றம் எப்படி இருக்கும், அவனுடைய ஆற்றல், அவன் செயல்பாடுகள், அவனை துதிப்பது, அவன் பக்தர்களோடு சேர்ந்து இருப்பது என்றுதான் பெரும்பாலும் அறியப் படுகிறது. 

இவற்றால் என்ன பயன்? கடவுள் என்ன மாதிரி உடை உடுப்பார், என்ன ஆயுதம் வைத்து இருப்பார், எதன் மேல் ஏறிப் போவார், அவரின் குடும்ப நிலை இதெல்லாம் தெரிந்து நமக்கு என்ன ஆகப் போகிறது? அவை எல்லாம் முதலில் உண்மையா என்றே கூடத் தெரியாது. 


அது ஒரு புறம் இருக்கட்டும். 


இதைத் தவிர சமயத்தில், பக்தி இலக்கியத்தில் வேறு ஏதாவது இருக்கிறதா என்று கேட்டால் இருக்கிறது. 



மெய்யியல் என்ற மிகப் பெரிய பிரிவு இருக்கிறது. 



நாம் இன்று படிக்கும் அறிவியலுக்கு முந்தைய நிலை அது. 



மெய்யியல் என்பது உண்மைகள் கண்டு அது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளும்படி விளக்கி , அதை நிரூபணம் செய்வது. 



இறைவன் யார், உயிர்கள் எப்படி வந்தன, இறைவனுக்கும் உயிர்களுக்கும் என்ன சம்பந்தம், இந்த உலகம் எப்படி வந்தது, அது எதனால் ஆனது, அதை யார் உருவாக்கினார்கள், எப்படி உருவாக்கினார்கள், ஏன் இத்தனை கடவுள்கள், இதில் யார் உயர்ந்தவர், வாழ்வின் நோக்கம் என்ன, அறிவு என்றால் என்ன, நாம் எப்படி சிந்திக்கிறோம், நான் என்றால் என்ன, என்பது பற்றி மிக மிக ஆழமாக விவரிக்கும் இயல், மெய்யியல்.



(Pl click the above link to continue reading) 





மெய்யியலின் வெளிப்பாடு தத்துவங்கள் எனப்படும். தத்துவங்கள்  எல்லோருக்கும் பொதுவானவை. எல்லா காலத்துக்கும் பொதுவானது. 


நம் பக்தி இலக்கியத்தின் அடிப்படை இந்த மெய்யியல். மெய்யியலைப் படித்தால் அதன் வெளிப்பாடு நம் பக்தி இலக்கியத்தில் இருப்பதைக் காணலாம். 


பாவம், புண்ணியம், மறு பிறவி, வீடு பேறு, முக்தி என்பதெல்லாம் இந்த மெய்யியலில் இருந்து வருபவை. 


சரி, அதற்கும், கந்தரனுபூதிக்கும் என்ன சம்பந்தம்? 


இருக்கிறதே. 


அடுத்த பாடலில், அருணகிரிநாதர் போகிற போக்கில் இரண்டு வார்த்தைகளை சொல்லி விட்டுப் போய் விட்டார். அது புரிய வேண்டும் என்றால், அடிப்படை மெய்யியல் தெரிந்து கொள்ள வேண்டும். 


இனி வரும் பாடல்களிலும் இந்த மெய்யியல் தத்துவங்கள் அடிக்கடி வரும். 


எனவே, இந்த இடத்தில் நிறுத்தி அதைப் புரிந்து கொள்வோம். 


மொத்தம் 36 தத்துவங்கள் இருக்கின்றன. 


எனக்கு என்ன சங்கடம் என்றால், இதை சொல்ல நினைத்தால் மிக நீண்டு விடுமோ என்ற பயம். யாரும் படிக்க மாட்டார்களோ என்ற  ஐயம் உண்டு. 


சும்மா, அப்படியே மேலோட்டமாக சொல்லுக்கு அர்த்தம் சொல்லிவிட்டுப் போய் விடலாமா என்றும் தோன்றுகிறது. 


இன்னொரு பக்கம், மெய்யியல் பற்றி ஒரு முன்னுரை தந்தால் ஆர்வம் உள்ளவர்கள் மேலும் தேடி படித்து பயன் பெறுவார்கள் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. 


என்ன செய்யலாம்?



(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம்: 


முன்னுரை: 

https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_30.html


1. பணியாய் அருள்வாய் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_5.html


2. எல்லாமற என்னை இழந்த நலம் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_10.html


)


 

3. எனை ஆண்ட இடம் தானோ? பாகம் 1 & 2


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/1_14.html

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/2_17.html


4. வளை பட்ட கை - பாகம் 1, 2, & 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_23.html

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/2_24.html

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/3.html



)


No comments:

Post a Comment