Monday, October 26, 2026

என்ன சொல்லி பாடுவதோ?

 என்ன சொல்லி பாடுவதோ?



காதல் ! 


சோப்புக் குமிழிக்குள் ஒரு சுவர்க்கம். 


மனம் கொள்ளாத ஆனந்தத் தவிப்பு. 


பசி தூக்கம் மறக்கச் செய்யும் பரவச நிலை.


உலகையே ஒரு நொடியில் அழகாக மாற்றும் மந்திரக் கோல்.


சொல்லுவதற்கு ஆயிரம் இருக்கும். நேரில் பார்த்தால் ஒரு வார்த்தை வராது. எல்லாம் மறந்து போகும். 


அவளை நினைத்து ஏதாவது கவிதை எழுத வேண்டும் ஒரே ஆர்வமாக இருக்கும். முதல் வரி வராமல், இடுப்பை விட்டு இறங்க மறுக்கும் குழந்தை போல்,  அடம் பிடிக்கும். 


சரி, ஏதாவது ஒரு வார்த்தையில் தொடங்கலாம் என்றால், எதில் தொடங்குவது?  எப்படித்தான் இந்த கம்பன், கண்ணதாசன் போன்றோர் இவ்வளவு கவிதை எழுதினார்களோ என்று ஆச்சரியமாக இருக்கும். 



பெண் : என்ன சொல்லி பாடுவதோ

என்ன வார்த்தை தேடுவதோ


கையில் பென்சிலை வைத்துக் கொண்டு யோசித்து யோசித்து மண்டை காய்ந்ததுதான் மிச்சம். சரி, ஏதாவது அழகான படம் வரையலாம் என்று நினைத்தால், எதை வரைவது. பூ படம், அருவி, குருவி என்று மனம் கிடந்து அலையும். 


கலர் கலராக அள்ளித் தெளிக்கலாம். என்ன செய்தாலும், மனதில் உள்ள காதலை வண்ணமாக தீட்ட முடியவில்லையே. இது என்ன பெரிய அவஸ்தையாக இருக்கிறது. 


சரி அவளோடு சேர்ந்து எடுத்த போட்டோ இருக்கிறது. அதை வைத்து அவளை வரையலாமா? 


வண்ணம் தரும்... தூரிகையே….

எண்ணங்களை சொல்லிடாதோ

என் ஓவியமே


ம்ஹும்...ஒண்ணும் சரியா வர மாட்டேங்குதே...அவளை நினைத்தால் மனதில் அவ்வளவு சந்தோஷம். பாட்டு பொங்கி வருகிறது. 


ஒரு குயில் கூவினாலே அவ்வளவு இனிமையாக இருக்கும். கோடி குயில் மனதுக்குள் குக்கூ என்று கூவினால் எப்படி இருக்கும். 




பெண் : கோடி குயில் கூவி

எந்தன் நெஞ்சில் கூடி

மௌனம் ஏனோ

என்று கேட்குதே.. ஹேஹே ஹேய்…


நீயும் பாடு, ஏன் மெளனமாக இருக்கிறாய் என்று அந்தக் குயில்கள் எல்லாம் என்னைக் கேட்க்கின்றன.  


ஐயோ, ஏண்டி இந்தப் பாடு படுத்துற. நான் பாட்டுக்கு என் வேலைய பாத்துகிட்டு போய் கிட்டு இருந்தேன். என்னையும் உக்கார வைத்து, இந்த மனதுக்குள்ளும் ஒரு இராகம், ஒரு பாடல் இருக்கிறது என்று அதை மீட்டி வெளியே கொண்டு வருகிறாய். இதெல்லாம் எனக்கு என்னனே புரியல. நல்லாத்தான் இருக்கு, இருந்தாலும், இது என்னவோ போல இருக்கே....


அமைதியாக இருந்த மனதுக்குள், ஹே என்று பெரிய கலக்கம். நீர் சுழல் மாதிரி சுத்தி சுத்தி வருகிறது உன் எண்ணம். சுழலின் நடுவில் நான். எந்தப் பக்கம் பார்த்தாலும் உன் முகம். 


என் மூச்சுக் காற்றே புல்லாங்குழல் இசை மாதிரி இருக்கிறதே. இது நானா ? இது நானா?


ஆண் : ராகம் தொடும் நேரம்

வானம் தொடும் மேகம்

என்னில் உந்தன் எண்ணம் மீட்டுதே…


பெண் : நெஞ்சுக்குள் காதல் சுழல்....

ஓஓ…ஓ

மூச்சுக்குள் புல்லாங்குழல்.. ல்ல்


சும்மா எப்போதும் வாங்கி விடும் மூச்சுதான். ஆனால் இன்று ஏனோ அதுவே இசையாகத் தெரிகிறது. 


பெண் : வெறும் காற்று இசையாக

மாறுகின்ற மாயங்களை


எத்தனையோ முறை இந்த நிலவைப் பார்த்து இருக்கிறேன். இப்போதுதான் தெரிகிறது அது ஏன் வருகிறது என்று. ஒவ்வொரு நாளும் அது வருவதே, அவளின் அழகைச் சொல்லவே. 



ஆண் : அந்திப்பிறை வந்து

மஞ்சள் வானில் நின்று

உன்னழகின் வண்ணம் சொல்லுதே...

ஓஓஹோ….


அந்த நிலவு அவளின் அழகைச் சொல்லுகிறது. அது எல்லோருக்கும் புரியாது. பூவின் மடியில் படுத்து, அதன் வாசனையை ஏற்று, தென்றல் பேசும் மொழியில், ஒரு ஊமை சொன்ன கவிதை போல் மனதுக்குள் சொல்லி மகிழ்கிறது. 




பெண் : பூவின் மடி தூங்கி

தென்றல் மொழி வாங்கி

ஊமை நெஞ்சின் ஓசை சொல்லுதே…..



இது என்ன காதல், அவளை இதற்கு முன் பார்த்ததே இல்லை. எதோ ஜன்ம ஜென்மமாய் ஒன்றாய் இருந்தது போல ஒரு பிரமை. இது எப்படி சாத்தியம் ? அவள் இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும். ? முடிவில்லாத கேள்விகள். தீராத தேடல். எல்லாவற்றிற்கும் அவள் தான் விடை. 

 



ஆண் : தீராத தேடல் ஒன்று...

ஓஓ…ஓ

தேடட்டும்..நெஞ்.சம் ரெண்டு


பெண் : தீராத தேடல் ஒன்று

ஓஓ…ஓ...

தேடட்டும் நெஞ்சம் ரெண்டு


மனம், ஒரு இடத்தில் நிற்க மாட்டேன் என்கிறது. தவித்துப் போகிறது. எப்போது அவளைப் பார்ப்போம், அவளோடு பேசுவோம் என்று கிடந்து தவிக்கிறது. இது இன்பமா? துன்பமா? இன்பமாகிப் போன துன்பமா?  




ஆண் : சொல்லாமல் நில்லாமல்

மனம் கொள்ளும் 

இன்ப துன்பம் தனை


பாடல் - பழனி பாரதி 

இசை - இளையராஜா 

பாடியவர்கள் - ஹரிஹரன், சாதனா சர்கம் .... வெல்வெட்டு போன்ற இதமான ஹரிஹரன் குரல், குயிலினும் இனிய கொஞ்சு மொழியாய் சாதனா...


கேட்டுப் பாருங்கள்...அது வேறு உலகம் 




🎙️ : ஹரிஹரன்

🎙️: சாதனா சர்கம்

🎶: இளையராஜா

✍🏻:பழனி பாரதி

🎥:என் மன வானில்




பெண் : என்ன சொல்லி பாடுவதோ

என்ன வார்த்தை தேடுவதோ


பெண் : என்ன சொல்லி பாடுவதோ

என்ன வார்த்தை... தேடுவதோ.

வண்ணம் தரும்... தூரிகையே….

எண்ணங்களை சொல்லிடாதோ

என் ஓவியமே


பெண் : என்ன சொல்லி... பாடுவதோ


ஆண் : என்ன சொல்லி பாடுவதோ

என்ன வார்த்தை தேடுவதோ

என்ன சொல்லி பாடுவதோ

என்ன வார்த்தை தேடுவதோ

வண்ணம் தரும் தூரிகையே..

எண்ணங்களை சொல்லிடாதோ

என் ஓவியமே


ஆண் : என்ன சொல்லி பாடுவதோ...



பெண் : கோடி குயில் கூவி

எந்தன் நெஞ்சில் கூடி

மௌனம் ஏனோ

என்று கேட்குதே.. ஹேஹே ஹேய்…


ஆண் : ராகம் தொடும் நேரம்

வானம் தொடும் மேகம்

என்னில் உந்தன் எண்ணம் மீட்டுதே…


பெண் : நெஞ்சுக்குள் காதல் சுழல்....

ஓஓ…ஓ

மூச்சுக்குள் புல்லாங்குழல்.. ல்ல்


ஆண் : நெஞ்சுக்குள் காதல் சுழல்

ஓஓ…ஓ

மூச்சுக்குள் புல்லாங்குழல். ல்..ல்..ல்


பெண் : வெறும் காற்று இசையாக

மாறுகின்ற மாயங்களை



பெண் : என்ன சொல்லி பாடுவதோ

என்ன வார்த்தை தேடுவதோ


ஆண் : என்ன சொல்லி.. பாடுவதோ..




ஆண் : அந்திப்பிறை வந்து

மஞ்சள் வானில் நின்று

உன்னழகின் வண்ணம் சொல்லுதே...

ஓஓஹோ….


பெண் : பூவின் மடி தூங்கி

தென்றல் மொழி வாங்கி

ஊமை நெஞ்சின் ஓசை சொல்லுதே…..


ஆண் : தீராத தேடல் ஒன்று...

ஓஓ…ஓ

தேடட்டும்..நெஞ்.சம் ரெண்டு


பெண் : தீராத தேடல் ஒன்று

ஓஓ…ஓ...

தேடட்டும் நெஞ்சம் ரெண்டு



ஆண் : சொல்லாமல் நில்லாமல்

மனம் கொல்லும்

இன்ப துன்பம் தனை


ஆண் : என்ன சொல்லி பாடுவதோ

என்ன வார்த்தை தேடுவதோ


பெண் : என்ன சொல்லி பாடுவதோ...

என்ன வார்....த்தை தேடுவதோ



ஆண் : வண்ணம் தரும் தூரிகையே

எண்ணங்களை சொல்லிடாதோ

என் ஓவியமே


பெண் : என்ன சொல்லி... பாடுவதோ

என்ன வா....ர்த்தை தேடுவதோ



No comments:

Post a Comment