Friday, May 31, 2013

சிலப்பதிகாரம் - கொலைகாரக் குடும்பம்

சிலப்பதிகாரம் - கொலைகாரக் குடும்பம் 


(வயது வந்தவர்களுக்கு மட்டும்).

இந்த பாடலை படிக்குமுன் இரண்டு விஷயங்களை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஒன்று, இந்த பாடல் எழுதப்பட்டது முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டில். அதாவது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்.

இரண்டாவது, இதை எழுதியது இளங்கோவடிகள் என்ற துறவி.

காதலன், அவனுடைய காதலியிடம் செல்லமாக கோவிக்கிறான்....நீயும் உன் குடும்பமும் கொலைகார குடும்பம்.


பாடல் 


கடல்புக்கு உயிர்க்கொன்று வாழ்வர்நின் ஐயர்
உடல்புக்கு உயிர்க்கொன்று வாழ்வைமன் நீயும்
மிடல்புக்கு அடங்காத வெம்முலையோ பாரம்
இடர்புக்கு இடுகும் இடைஇழவல் கண்டாய். 

பொருள் 

உன் சகோதரர்கள்  கடலில் சென்று மீன்களை பிடித்து (கொன்று) வாழ்கிறார்கள் . நீயோ என் உடலின் உள் சென்று என் உயிரை எடுத்து (கொன்று) வாழ்கிறாய். உன் வலிமையான மார்புகளின் பாரத்தில் உன் சின்ன இடை துன்பப் படுவதை பார்.  


(மிடல் = வலிமை, திண்மை ; இடுகும் = சிறுக்கும்; இழவல் = வருந்துதல், நட்டப்படுதல். இழவு என்றால் உயிரை இழத்தல்)


பாடல் 


கொடுங்கண் வலையால் உயிர்க்கொல்வான் நுந்தை
நெடுங்கண் வலையால் உயிர்க்கொல்வை மன்நீயும்
வடம்கொள் முலையால் மழைமின்னுப் போல
நுடங்கி உகுமென் நுசுப்புஇழவல் காண்டாய். 


பொருள் 

உன் தந்தை மீன் பிடிக்கும் கொடுமையான வலையால் உயிர்களை கொல்லுகிறான். நீயோ, உன் கண் என்ற வலையால் உயிர்களை கொல்லுகிறாய் . மாலை அணிந்த உன் மார்பால் மழை நேர மின்னலைப் போன்ற உன் இடை எவ்வளவு சங்கடப் படுகிறது பார்.



பாடல் 

ஓடும் திமில்கொண்டு உயிர்க்கொள்வர் நின்ஐயர்
கோடும் புருவத்து உயிர்க்கொல்வை மன்நீயும்
பீடும் பிறர்எவ்வம் பாராய் முலைசுமந்து
வாடும் சிறுமென் மருங்குஇழவல் கண்டாய்." 

பொருள் 

மீன் பிடிக்கும் படகில்   சென்று உயிர்களை  உன் தந்தை. நீயோ வளைந்த உன் புருவத்தால் உயிர்களை கொல்லுகிறாய் . மத்தவங்க பெருமையையும் துன்பத்தையும் நீ எங்க பார்க்கிறாய் ? உன் மார்புகளை சுமந்து வாடும் உன் இடையின் கஷ்டத்தையாவது நீ பார். 

இளங்கோ அடிகளுக்குத்தான் என்ன கரிசனம் ! 


இரணியன் வதம் - ஒவ்வொருவருக்கும் ஒரு முகம்

இரணியன் வதம் - ஒவ்வொருவருக்கும் ஒரு முகம்



நரசிங்கத்தின் உருத்திர உருவத்தை கண்டு சேனைகள் சிதறி ஓடின.

இரணியனின் சேனை  பெரியது ? ஆயிரக்கணக்கான வீரர்கள்.

இங்கே கம்பனின் கற்பனை எல்லாவற்றையும் விஞ்சி நிற்கிறது.

ஓடும் ஒவ்வொரு வீரர் முன்னாலும் ஒரு நரசிங்கம் நின்றதாம் ? எப்படி ?

அவ்வளவு வேகமாக அது வீரர்களிடையே புகுந்து புறப்பட்டது. ஒவ்வொரு வீரரும் அந்த நரசிங்கம் தன் முன்னால் நிற்பது மாதிரி தெரிந்து அலறுகிறார்கள்.

சிங்க முகம் எப்படி இருக்கும் ? கோரை பற்களுடன், பிடரி மயிர் சிலிர்க்க பயங்கரமாக இருக்கும்தானே ?

கம்பன் சொல்கிறான் - திருமுகம் என்று. அவனுக்கு அந்த ஆக்ரோஷமான முகம் கூட அருள் வழியும் முகமாக தெரிகிறது.

நரசிங்கத்தின் தோள்கள் பொன்னை போல ஒளி வீசுகின்றன.

கண்கள் தீயை போலசிவந்து  ஜ்வாலை விடுகின்றன.


பாடல்

'ஆயிரங்கோடி வெள்ளத்து அயில் எயிற்று அவுணர்க்கு, அங்கு அங்கு,
ஏயின ஒருவர்க்கு ஓர் ஓர் திருமுகம், இரட்டிப் பொன் தோள்,
தீ எனக் கனலும் செங் கண் சிரம்தொறும் மூன்றும், தெய்வ
வாயினில் கடல்கள் ஏழும், மலைகளும், மற்றும், முற்றும்.

பொருள்


Thursday, May 30, 2013

இரணியன் வதம் - நரசிங்கம் வளருதல்

இரணியன் வதம் - நரசிங்கம் வளருதல் 



நரசிங்க சிங்கம் வளர்ந்து கொண்டே போகிறது .  அதன் வயறு சத்ய லோகம் வரி போயிற்று. சத்ய லோகத்தில் பிரம்மா அமர்ந்து இருக்கிறார். உட்கார்ந்து இருக்கும் அவரை அப்படியே அந்த வயறு தூக்குகிறது. பிரம்மாவுக்கு தோன்றுகிறது, நாம் உண்டான போது திருமாலின் வயிற்றில் இருந்துதான் வந்தோம்....அது மீண்டும் நடக்கிறதா என்று சந்தேகம் வந்ததாம்...

பாடல்

'மன்றல் அம் துளப மாலை மானுட மடங்கல் வானில்
சென்றது தெரிதல் தேற்றாம்; சேவடி படியில் தீண்ட
நின்றது ஓர் பொழுதின், அண்ட நெடு முகட்டு இருந்த முன்னோன்
அன்று அவன் உந்தி வந்தானாம் எனத்  தோன்றினானால். 


பொருள் 

திருக்குறள் - இல்லாமையிலும் பெரிய இல்லாமை

திருக்குறள் - இல்லாமையிலும் பெரிய இல்லாமை 


எல்லோரிடமும் எல்லாமுமா இருக்கிறது ?

வீடு, நகை, சொந்த உல்லாச படகு, ஒரு கப்பல், சொந்த விமானம், நமக்கென்று ஒரு தீவு, இராஜா மாதிரி அதிகாரம், அழியாத புகழ் இப்படி பட்டியல் போட்டுக் கொண்டே போனால் அந்த பட்டியல் முடியாது.

அப்ப எவ்வளவு இருந்தால் போதும் ?

எவ்வளவுதான் இருந்தாலும், இல்லாததின் அளவு மிகப் பெரியதாய் இருக்கிறதே ? என்ன செய்யலாம் ?

சில விஷயங்கள் இல்லாவிட்டால் ஒன்றும் ஆகி விடாது.

வள்ளுவர் கூறுகிறார், அறிவு இல்லாததுதான் இந்த இல்லாததிலேயே பெரிய இல்லாதது. மத்தது எல்லாம் இல்லாவிட்டாலும், இந்த உலகம் அதை பெரிதாய் நினைக்காது.

பாடல்

அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை
இன்மையா வையா துலகு.

பொருள்


இரணியன் வதம் - இரணியன் போருக்கு புறப்படுதல்

இரணியன் வதம்  - இரணியன் போருக்கு புறப்படுதல் 


அவ்வளவு பெரிய நரசிங்கத்தை கண்டு இரணியன் கொஞ்சம் கூட பயப்படவில்லை.

காரணம் - அவன் பெற்ற வரங்கள். அவன் வலிமை.

நரசிங்கத்தை சண்டைக்கு அழைக்கிறான். அதுவும் ஏக வசனத்தில்....

பிரகலாதன் சொன்ன அரி நீதானா ? கடலில் ஒழிந்தது போதாது என்று இந்த தூணிலும் வந்து ஒளிந்து கொண்டாயா ? சண்டைக்கு வருகிறாயா ? வா...வா...என்று கிளம்பினான் தன் புகழ் எங்கும் தடையின்றி செல்லும் தன்மை கொண்ட இரணியன்...அவன் எழுந்து புறப்பட்ட போது இந்த உலகம் எல்லாம் பெயர்ந்தது....

கற்பனை பண்ணிக் கொள்ளுங்கள்....ஒரு புறம் ககன முட்டை கிழிய சிவந்த கண்களை கொண்ட சிங்கம்.....வானுக்கும் மண்ணுக்கும் நிற்கிறது....இன்னொரு புறம் மிக வலிமை வாய்ந்த இரணியன்....சண்டை ஆரம்பாகப்  போகிறது....


பாடல்

 "ஆர் அடா சிரித்தாய் ? சொன்ன அரிகொலோ ? அஞ்சிப் புக்க
நீர், அடா ? போதாது என்று, நெடுந் தறி நேடினாயோ ?
போர் அடா ? பொருதிஆயின், புறப்படு ! புறப்படு !" என்றான் -
பேர் அடாநின்ற தாளோடு உலகு எலாம் பெயரப் பேர்வான்.


பொருள் 

இராமாயணம் - மனைவியின் மகத்துவம்

இராமாயணம் - மனைவியின் மகத்துவம் 


தசரதன் அரசை இராமனிடம் தருவது என்று முடிவு செய்துவிட்டான். அதற்கு பல காரணங்களை சொல்கிறான். அது பற்றி பின்னால் பார்ப்போம்.

முடிவு செய்தவுடன், தன் மந்திரிகளிடம் ஆலோசனை கேட்கிறான்.

இராமன் அரசை ஏற்று நடத்த தகுதியானவன் என்று சொல்ல வந்த வசிட்டர் முதலியோர் ஒரு முக்கியமான விஷயத்தை சொல்கிறார்கள்.

இராமனின் மனைவி நல்லவள் , எனவே இந்த அரசை அவனிடம் கொடுக்கலாம் என்கிறார்கள்.

ஒரு பெரிய பதவியை எடுத்து வெற்றிகரமாக நடத்த வேண்டும் என்றால்  ஒருவனின் மனைவி சிறந்தவளாக இருக்க வேண்டும்.

கணவனின் வெற்றி மனைவியின் கையில் இருக்கிறது.

எவ்வளவு பெரிய விஷயம் ?

இராமன் நல்லவந்தான் என்பதை பின்னால் சொல்லி அவன் மனைவி நல்லவள் என்பதை முதலில் சொல்கிறார்கள்.

பாடல்

மண்ணினும் நல்லள்; மலர்மகள், கலைமகள், கலையூர்
பெண்ணினும் நல்லள்; பெரும்புகழ்ச் சனகியோ நல்லள்-
கண்ணினும் நல்லன்; கற்றவர், கற்றிலா தவரும்,
உண்ணும் நீரினும், உயிரினும், அவனையே உவப்பார்.

பொருள்


Wednesday, May 29, 2013

இரணிய வதம் - நரசிங்கம் வளருதல்

இரணிய வதம்  - நரசிங்கம் வளருதல் 


தூணில் இருந்து வெளிப்பட்ட நரசிங்கம் வளர்ந்து பேருரு கொள்கிறது.

மிகப் பெரிய உருவம் கொள்கிறது. பெரியது என்றால் இப்படி அப்படி அல்ல....கம்பன் வருணிக்கிறான்....மிக பிரமாண்டமான வடிவம்....கற்பனைக்கு  எட்டாத வடிவம்...

பாடல்

'பிளந்தது தூணும்; ஆங்கே பிறந்தது, சீயம்; பின்னை 
வளர்ந்தது, திசைகள் எட்டும்; பகிரண்டம் முதல மற்றும்
அளந்தது; அப் புறத்துச் செய்கை யார் அறிந்துஅறையகிற்பார் ?
கிளர்ந்தது; ககன முட்டை கிழிந்தது, கீழும் மேலும்.



பொருள் 

திருக்குறள் - இனிய சொல்லின் மகத்துவம்

திருக்குறள் - இனிய சொல்லின் மகத்துவம் 



நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று 
பண்பின் தலைப்பிரியாச் சொல்.

இனிமையான சொல் என்ன செய்யும் தெரியுமா ?

நாம் ஒருவருக்கு ஒரு  சொல்லை சொல்கிறோம் என்றால் அது அவர்களுக்கு நல்ல பயனைத் தரவேண்டும். பயன் தருகிறது என்று பண்பில்லாத சொற்களை பேசக் கூடாது...."எருமை, நீ படிகாட்டா நாசமாத்தான் போவ ..." என்பது பயன் தரும் பேச்சாக இருக்கலாம் ஆனால் பண்பில்லாத பேச்சு.

பண்புடனும் இருக்க வேண்டும். பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும்.

அப்படி பேசினால், நமக்கு என்ன கிடைக்கும் ?

அப்படி பேசுபவர்களுக்கு நல்லதும், அப்படி உங்கள் பேச்சை கேட்டவர்களின் நன்றியும் உங்களுக்கு கிடைக்கும்.

எனவே, இனிய சொல் தருபவருக்கும் பெறுபவருக்கும் நல்லது செய்யும்.

இன்னும் கொஞ்சம் விரித்து பொருள் பார்க்காலாம்.

இனிய சொற்களை கூறுவோருக்கு இரண்டு பலன் என்று பார்த்தோம்

நயன் ஈன்று நன்றி பயக்கும்.

நயன் என்றால் இலாபத்துக்கு உரியவன் (benefactor ) என்று பொருள். அவனுக்கு நன்மை கிடைக்கும். நன்மை என்றால் இப்பிறப்பிலும் மறு பிறப்பிலும் கிடக்கும் நன்மை என்று சொல்லுவார் பரிமேல் அழகர்.

நன்றி பயக்கும் = நன்றி என்றால் என்ன என்று தெரியும். அது என்ன பயத்தல் ? பயத்தல் என்றால் விளைதல், உருவாதல். விதை விதைத்தால் கனி கிடைக்கும் அல்லவா அதற்கு பயத்தல் என்று பொருள்.   ( பயந்து நமைப் புரந்தாள் மதியின் பிழை அன்று என்பது கம்ப இராமாயணம். நம்மை பெற்று, காப்பாற்றி வளர்த்தாள் (கைகேயி) அவள் பிழை அன்று.  )

இனிய சொல்லை சொன்னவர்களுக்கு நன்மையையும் (இம்மைக்கும் மறுமைக்கும்), சொல் கேட்டவர்களின் நன்றியும் கிடைக்கும்.

 எந்த மாதிரி சொல் தெரியுமா இதைத் தரும் ?

கேட்பவர்களுக்கு பயன் தரவேண்டும் - பொருள் பயன் என்பது பொதுவாகச் சொல்லப் பட்டாலும், வேறு எந்த விதத்திலாவது பயன் தர வேண்டும். (பயனில் சொல் பாராட்டுவானை மகன் எனல் என்பார் வள்ளுவர் )

பயன் தரும் சொல்லும் பண்போடு பிரியாமல் இருக்க வேண்டும். இந்த பண்பும் பயனும் பிரியாமல் இருக்க வேண்டும்.

அது என்ன பிரியாமல் ?

"நல்ல படிடா....இல்லைனா நாசமாத்தான் போவ " இதில் முதல் பகுதி பயன் தருவது. பண்பு உள்ளது. இரண்டாவது பகுதி பண்பு இல்லாதது, முதலாவதோடு  சேர்ந்து படிக்கும் போது பயன் தரலாம். அது சரி இல்லை என்கிறார் வள்ளுவர்.

ஒவ்வவொரு சொல்லும் பயனும், பண்பும் உள்ளதாய் இருக்க வேண்டும்.

பண்பில்லாத சொற்களை சொல்லி அதன் மூலம் பயன் வந்தால் கூட, பயன் பெற்றவர்கள் அதை  பெரிதாக நினைக்க மாட்டார்கள். "என்னை எப்ப பாரு கரிச்சு கொட்டி கொண்டே இருந்தான் " என்று பண்பில்லாத சொற்கள் தான் ஞாபகம் இருக்கும். பயன் உள்ள சொற்கள் மறந்து போகும்.

எனவே எப்போது சொன்னாலும்,பயனையும் பண்பையும் சேர்த்து சொல்லுங்கள்

பாடல்


நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று 
பண்பின் தலைப்பிரியாச் சொல்.

பொருள்


இரணியன் வதம் - நரசிங்கம் தோன்றுதல்

இரணியன் வதம்  - நரசிங்கம் தோன்றுதல் 


சற்றே இந்த பாடலை உரத்துப் படித்துப் பாருங்கள்...மெய் சிலிர்க்கும்.....

இந்த தூணில் இருக்கிறானா உன் நாராயணன் என்று கேட்டான் இரணியன்.

ஆம், இந்த தூணில் மட்டும் அல்ல, சாணிலும், அணுவை சத கூறிட்ட கோணிலும், நீ சொன்ன சொல்லிலும் உள்ளான் என்று  கூறினான் பிரகலாதன்

ஆஹா அப்படியா சங்கதி, அதையும் பார்க்காலாம் என்று தன் பெரிய கைகளால் அந்த தூணை ஓங்கி அறைந்தான் இரணியன்.

தூண் வெடித்து சிதறியது. திசைகளை கிழித்துக் கொண்டு, இந்த அண்டமே அதிரும்படி சிரித்துக் கொண்டு வெளி வந்தது சிவந்த கண்களை கொண்ட ஒரு சிங்கம்

சற்றே இந்த பாடலை உரத்துப் படித்துப் பாருங்கள்...மெய் சிலிர்க்கும்.....குறிப்பாக அந்த கடைசி வரி....


பாடல்


நசை  திறந்து இலங்கப் பொங்கி, "நன்று, நன்று !" என்ன நக்கு,
விசை திறந்து உருமு வீழ்ந்ததென்ன ஓர் தூணின், வென்றி
இசை திறந்து உயர்ந்த கையால் எற்றினான்; எற்றலோடும்,
திசை திறந்து, அண்டம் கீறச் சிரித்தது, அச் செங் கண் சீயம்.

பொருள் 

Tuesday, May 28, 2013

திருவெம்பாவை - ஓத உலவா ஒரு தோழன்

திருவெம்பாவை - ஓத உலவா ஒரு தோழன் 


நட்பு என்பது மிக உயர்ந்த உறவு.

நம் குற்றங்கள் எல்லாம் தெரிந்தும் நம்  அன்பு செலுத்துபவன் நண்பன் / நண்பி.

இறைவனும் அப்படித்தானே ? நம் குறைகள் எல்லாம் தெரிந்தும் நம் மேல் அன்பு செலுத்துபவன் அவன்.

இறைவனை தோழா என்று உரிமையோடு அழைக்கிறார் மாணிக்கவாசகர்.

பாடல்

பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்
    போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
    வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்
    கோதில் குலத்தரன்றன் கோயிற் பிணாப்பிள்ளைகாள்
ஏதவன்ஊர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்
    ஏதவனைப் பாடும் பரிசேலோ ரெம்பாவாய்.  



பொருள்


இரணியன் வதம் - இறைவன் இருக்கும் இடங்கள்

இரணியன் வதம் - இறைவன் இருக்கும் இடங்கள் 



இப்படியும் கூட ஒருவனால் பாடல் எழுத முடியுமா என்று எண்ணி எண்ணி வியக்கவைக்கும் பாடல்களை கொண்டது இரணியன் வத படலத்தில் உள்ள பாடல்கள்.

உங்கள் வாழ்வில் கொஞ்ச நேரம்தான் படிக்க கிடைக்கும் என்றால் முதலில் இரணிய வதை படலத்தை படித்துவிடுங்கள். மற்றவற்றை அப்புறம் படிக்கலாம்.

இரணியன் கேட்கிறான் அவன் மகன் பிரகலாதனிடம், "நீ சொன்ன அந்த நாராயணன் இந்த தூணில் இருக்கிறானா" என்று

கம்பன் ஏதோ அருள் வந்தவன் போல ஆக்ரோஷமாக எழுதுகிறான். தூண் என்னடா தூண், நீ சொன்ன சொல்லிலும் இருக்கிறான் அவன் என்று பிரகலதான் வாயிலாக சொல்கிறான்.

பிரகலாதன் : ஒரு சாண் அளவிலும் இருக்கிறான். அணுவை நூறாக பிளந்தால் அந்த தூளிலும் அவன் குணம் இருக்கும். மேரு மலையிலும் அவன் இருக்கிறான். இந்த தூணிலும் இருக்கிறான். நீ சொன்ன சொல்லிலும் இருக்கிறான். நீ இதை விரைவில் காண்பாய்.

பாடல்

' "சாணினும் உளன்; ஓர் தன்மை, அணுவினைச் சத கூறு இட்ட
கோணினும் உளன்; மா மேருக் குன்றினும் உளன் ; இந் நின்ற
தூணினும் உளன்; நீ சொன்ன சொல்லினும் உளன் ; இத் தன்மை
காணுதி விரைவின்" என்றான்; "நன்று" எனக் கனகன் சொன்னான்.


பொருள் 

Monday, May 27, 2013

இரணியன் வதம் - கற்கும் கல்வியின் பிரை


இரணியன் வதம் - கற்கும் கல்வியின் பிரை 


இரணியன் வதை படலம் படிக்கும் போது , எதை  சொல்வது, எதை விடுவது என்றே புரியவில்லை. அத்தனையும் அருமையான பாடல்கள். கம்பனின் கவித்திறம் முழு  வீச்சில் வெளிப்பட்டு நிற்பது இங்குதான் என்று சொல்லத்  தோன்றுகிறது.

வேகமாக முன் சென்று இந்த பாடலை தருகிறேன்.

இரணியன் கேட்கிறான், "நீ சொன்ன அந்த நாராயணா என்ற நாமத்தில் அப்படி என்ன மகிமை " என்று.

பிரகலாதன் சொல்லுகிறான்...அவன் சொல்லும் அத்தனை பாடல்களும் அருமையிலும் அருமை ... எல்லாவற்றையும் எழுத எனக்கு ஆசைதான் .... படிக்க உங்களுக்கு ?

பிரகலாதன் சொல்லுகிறான்...நான் உனக்கு உணர்த்த வேண்டியது ஒன்று உள்ளது. நாராயணா என்ற நாமம் வேதங்களுக்கும் வேள்விகளுக்கும் எல்லை போன்றது, எல்லோரும் கற்கும் பால் என்ற கல்விக்கு பிரை போன்றது என்கிறான்.

கல்வி என்பது பால் போன்றது. கெட்டிப் படாதது. சலனம் உள்ளது. கல்வியோடு இறை உணர்வு சேரும்போது அந்த கல்வி உரை விடப்பட்ட பால் போல கட்டிப் படுகிறது. சலனம் போய் விடுகிறது.

கெட்டிப்பட்ட அறிவை சித்தம் என்பார்கள்.

கற்றதனால் ஆய பயன் என் கொல் வாலறிவன் நற்றாள் தொழார் எனின் என்பார் வள்ளுவர்.

பாடல்

' "உரை உளது உணர்த்துவது; உணர்ந்து கோடியேல்,- 
விரை உள அலங்கலாய் ! - வேத வேள்வியின்
கரை உளது; யாவரும் கற்கும் கல்வியின்
பிரை உளது" என்பது மைந்தன் பேசினான்:

பொருள் 

திருக்குறள் - இன்சொல் கூறல்


திருக்குறள் - இன்சொல் கூறல் 


மனதிற்கு உவகையும் மகிழ்ச்சியும் தரக்கூடிய சொற்களை கூறுவது. விருந்தோம்பலில், இனிய சொற்கள் கூறுவது இன்றியமையாதது. எனவே, இன்சொல் கூறல் என்ற இந்த அதிகாரத்தை விருந்தோம்பல் என்ற அதிகாரத்திற்கு அடுத்து வைத்திருக்கிறார் வள்ளுவர்.

இன் சொல் என்றால் என்ன ? சிரிக்க சிரிக்க பேசுவதா ? ஜோக் அடித்துக்கொண்டே இருப்பதா ? ஒருவரை புகழ்வதா ?

இன் சொல் என்பதற்கு மூன்று முக்கிய விதிகளை கூறுகிறார் வள்ளுவர்:

முதலாவது - அது அன்பு கலந்து இருக்க வேண்டும். வள்ளுவர் ஈரமான சொற்கள் என்கிறார். அன்பு, கருணை, வாஞ்சை இப்படி அத்தனையும் சேர்த்துக் கொள்ளலாம். கேட்பவர்கள் மனம் குளிர வேண்டும். அது ஈரமான சொற்கள்.

இரண்டாவது, உண்மையாக இருக்கவேண்டும். மனம் குளிர வேண்டும் என்பதற்காக இல்லாதையும் பொல்லாததையும் எடுத்து விடக் கூடாது. உண்மை அறிந்து பேச வேண்டும்.

மூன்றாவது, செம்மையான பொருள்களை பேச வேண்டும். செம்மையான பொருள்கள் என்றால் என்ன என்று பரிமேலழகரை கேட்டால் அறம் என்பார். அதுக்காக எப்ப பார்த்தாலும் அறம் பற்றியே பேசிக் கொண்டு இருக்க முடியுமா ? சிறப்பானவை, நன்மை பயப்பவை, உபயோகமானவை என்று வைத்துக் கொள்ளலாம்.

இந்த மூன்றும் இணைந்தது இனிய சொல்.

இதைத்தான் பேச வேண்டும் என்கிறார் வள்ளுவர்.

பாடல்


இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் 
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்


பொருள்


இரணியன் வதம் - இரணியன் சிறப்பு

இரணியன் வதம்  - இரணியன் சிறப்பு 


இரணியன் எப்பேர்ப்பட்டவன் என்று சொல்ல வேண்டும். கம்பன் கவி விளையாடுகிறது. நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவிற்கு கம்பனின் கற்பனை விரிகிறது.

ஒருவன் மிக பல சாலி என்று சொல்ல வேண்டும்.

எப்படி சொல்லுவீர்கள் ? யோசித்து பாருங்கள் ? நீங்கள் எவ்வளவு தான் அதீதமாக யோசித்தாலும், கம்பன் உங்கள் கற்பனையை பூ என்று ஊதி தள்ளி விடுவான்.


ஒரே ஒரு பாடலை மாதிரிக்கு தருகிறேன்.

திசைகளை காக்கும் யானைகளில் இரண்டை தன் இரண்டு கைகளால் எடுத்து ஒன்றோடொன்று மோதுவான். ஆழம் காண முடியாத ஏழு கடல்களும் அவன் கணுக்கால் அளவு தான் இருக்கும். ஏதோ தரையில் நடந்து போவதைப் போல இந்த கடல்களின் நடுவில் நடந்து போவான்.

பாடல்

'பாழி வன் தடந் திசை சுமந்து ஓங்கிய பணைக் கைப்
பூழை வன் கரி இரண்டு இரு கைக்கொடு பொருத்தும்;
ஆழம் காணுதற்கு அரியவாய், அகன்ற பேர் ஆழி
ஏழும் தன் இரு தாள் அளவு எனக் கடந்து ஏறும்.

பொருள் 


Sunday, May 26, 2013

இரணியன் வதம் - மேதாவிகட்கு எல்லாம் மேதாவி


இரணியன் வதம்  - மேதாவிகட்கு எல்லாம் மேதாவி  


இராம இராவண யுத்தம் நிகழப் போகிறது.

இராவணன் மந்திர ஆலோசனை செய்கிறான்.

அதில் விபீடணன் இராவணனிடம் சொல்கிறான்....எவ்வளவு வர பலம், ஆள் பலம், உடல் பலம் இருந்தாலும் அறத்தின் பலம் இல்லாவிட்டால் அழிந்து போவாய் என்று. ஆணவம், இறைவனை பணியாத குணம் இருந்தால் அழிவு வரும் என்று சொல்கிறான்.

அப்படி இருந்த இரணியன் எப்படி அழிந்தான் என்று விபீடணன் விளக்குகிறான்.

இரணியன் வதையை படிக்கும் போது, கம்பன் கம்ப இராமாயணத்தை இதற்காகவே எழுதினான் போல இருக்கும்.

அத்தனை கவி நயம் அத்தனை ஆழ்ந்த தத்துவங்கள். பக்தி பிரவாகம் பொங்கி வழியும் பாடல்கள்.

மொத்தம் 175 பாடல்கள்.

அத்தனையும் தேன் சொட்டும் பாடல்கள்.

வீரம். பக்தி. ஆக்ரோஷம். பிரமாண்டம். எல்லாம் கலந்த பாடல்கள்.

அதிலிருந்து சில பாடல்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசை.

பாடல்


'ஈது ஆகும், முன் நிகழ்ந்தது; எம்பெருமான் ! என்
மாற்றம் யாதானும் ஆக நினையாது, இகழ்தியேல்,
தீது ஆய் விளைதல் நனி திண்ணம்' எனச்
செப்பினான் - மேதாவிகட்கு எல்லாம் மேலான மேன்மையான்.

பொருள் 

Saturday, May 25, 2013

வாலி வதம் - கால் தரை தோய நின்று


வாலி வதம் - கால் தரை தோய நின்று 


சில விஷயங்களை சொல்லி புரிய வைக்க முடியாது. நேரடியாக ஒவ்வொருவரும் உணர முடியும்.

தெரியாமல் விரலை சுட்டுக் கொண்டால், ஹா என்று உதறுகிறோம். அந்த சூடு எப்படி இருந்தது என்று சொல் என்றால் எப்படி சொல்லுவது ?

லட்டை வாயில் போட்டால் இனிக்கிறது. இனிப்பை உணரலாம். சொல்லிக் காட்ட முடியாது.

கந்தர் அனுபூதியில் அருணகிரிநாதர் சொல்லுவார்

செவ்வா னுருவிற் றிகழ்வே லவனன்
றொவ்வா ததென வுணர்வித் ததுதான்
அவ்வா றறிவா ரறிகின் றதலால்
எவ்வா றொருவர்க் கிசைவிப் பதுவே

என்ன, படிச்சு நாக்கு சுளுக்கிக் கொண்டதா ?....:)

சந்தக் கவி அரசு அருனைகிரியின் பாடல் என்றால் சும்மாவா. பதம் பிரிப்போம்.

செவ் வான் உருவில் திகழ் வேலவன் அன்று 
ஒவ்வாதது என உணர்வித்ததுதான் 
அவ்வாறு அறிவார் அறிகின்றதலால் 
எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவே 

முருகனை கண்டார் அருணகிரி. அந்த அனுபவம் என்ன என்று சொல்ல முடியவில்லை. அதற்கு இணையான (ஒப்புமை ) ஒன்று இல்லை.

உணர்ந்தார், ஆனால் உரைக்க முடியவில்லை.

நீங்களும் அவ்வாறே அறிந்து கொள்ளுங்கள். வேறு எப்படி சொல்லுவது (இசைவிப்பது ?) என்கிறார்.

இறை அனுபவம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி.

அருணகிரி கோபுரத்தின் மேல் இருந்து குதித்து விட்டார். முருகன் அவரை கையில் ஏந்தி ஆட்கொண்டார்.

மாணிக்க வாசகருக்கு குரு வடிவில் வந்து திருபெருந்துறையில் காட்சி தந்தார். பின் திருக்கழுகுன்றிலே "கணக்கிலா வடிவம் நீ காட்டி வந்து என்ன ஆண்டு கொண்டாய் கழுக் குன்றிலே" என்றார்

அப்பருக்கு உலகம் எல்லாம் அம்மை அப்பனாக தெரிந்தது. கண்டேன் அவர் திரு பாதம், கண்டரியாதன கண்டேன் என்று உருகினார்.

இங்கே வாலி, இறைவனை காண்கிறான். உயிர் போகும் சமயம் உண்மை தெரிகிறது. மரண வாக்கு மூலம் என்று சொல்லுவார்களே அது சத்ய வாக்கு. அவன் பொய் சொல்ல   வேண்டிய அவசியம் இல்லை.

கோவம் கொண்டவன், மாறி இறை உணர்வு பெறுகிறான்.

அவன் உள்ளத்தில் நன்றி உணர்வு பொங்குகிறது.

தனக்கு மேல் ஒரு பொருள் இல்லாத அந்த மெய் பொருள், கையில் வில் ஏந்தி,
கால் தரை தோய நின்று, கண்ணின் பாரவைக்கு தெரியும்படி வந்தது. மயக்கம் தரும் இந்த பிறவி பிணிக்கு மருந்து அது, அதை நீ வணங்கு என்று தன்  மகன் அங்கதனிடம் சொல்கிறான்

பாடல்


'பாலமை தவிர் நீ; என்
      சொல் பற்றுதிஆயின், தன்னின்
மேல் ஒரு பொருளும் இல்லா
     மெய்ப்பொருள், வில்லும் தாங்கி,
கால் தரை தோய நின்று,
      கட்புலக்கு உற்றது அம்மா!
''மால் தரும் பிறவி நோய்க்கு
      மருந்து'' என, வணங்கு, மைந்த!


பொருள்



Friday, May 24, 2013

திருக்குறள் - ஒப்புரவு அறிதல்


திருக்குறள் - ஒப்புரவு அறிதல்  


ஒப்புரவு என்றால் உலகுடன் ஒத்து வாழ்தல். உலகின் வழி அறிந்து அதன் படி வாழ்தல்.

நாம் வாழ்வில் பார்க்கலாம், நிறைய பேர் நிறைய படித்திருப்பார்கள், நிறைய நல்ல குணம் இருக்கும். இருந்தாலும் மற்றவர்கள் அவர்களோடு சேர்ந்து இருக்க சங்கடப் படுவார்கள்.

சரியாக பேசத் தெரியாது. எப்ப என்ன சொல்கிறோம் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் எதையாவது செய்து வைப்பார்கள்.

எல்லோரிடமும் சண்டை. ஏதாவது சச்சரவு.

யாருடனும் ஒத்து போக மாட்டார்கள். எதிலும் ஒரு அதீத எதிர்பார்ப்பு. அது நடக்காதபோது ஒரு கோபம், எரிச்சல்.

எதுக்கு எடுத்தாலும் ஒரு வாதம். பிடிவாதம்.

அதே சமயம் வேறு சில பேரை பார்த்தால், மிக இனிமையாக இருப்பார்கள். பேச்சில் ஒரு நளினம். பிறருக்கு உதவும் குணம். பிறர் துன்பங்களை அறிந்து உதவும் குணம். உலக இயல்போடு ஒத்து வாழ்வார்கள்.

இதை சொல்வதற்கு வள்ளுவர் ஒரு அதிகாரமே எழுதி இருக்கிறார் -  ஒப்புரவு  அறிதல்.

உலக அறிவு என்பது படிப்பு அறிவு கிடையாது. அனுபவ அறிவு. எப்படி பழக வேண்டும் , எப்படி பேச வேண்டும், எப்படி ஊரோடு ஒத்து போவது என்று சொல்கிறார் இந்த அதிகாரத்தில்.

உயிருள்ள மனிதனுக்கும், உயிரற்ற உடலுக்கும் என்ன வித்தியாசம். பிணம் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று  அறியாது. அது பாட்டுக்கு கிடக்கும். தன்னையும் பார்த்துக் கொள்ளாது, பிறரையும் பார்க்காது. தன்னால் பிறருக்கு வரும் துன்பங்களையும் (நாற்றம், சுகாதாரக் கேடு ) அது உணராது.

உலக அறிவு இல்லாதவன் அந்த பிணத்திற்கு ஒப்பானவன் என்கிறார் வள்ளுவர்.. விலங்கு கூட இல்லை, பிணம் என்கிறார்.

பாடல்

ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.


பொருள்


வாலி வதம் - அவதார நோக்கம்

வாலி வதம்  - அவதார நோக்கம் 


திருமால், இராமனாக அவதாரம் எடுத்தது எதற்காக ?

இரண்டு நோக்கம்.

ஒன்று , இராவணனை அழிப்பது.

இரண்டாவது, நல்ல வாழ்கை நெறி முறைகளை காட்டி, இங்குள்ளவர்களை வீடு பேறு பெற உதவுவது.

அவதாரம் என்றாலே அதுதான் அர்த்தம்.

அப்படி யாரை இராமன் வீடு பேறு பெற உதவினான் ?

ஒரு மனிதனைக் கூட அல்ல, ஒரு விலங்கை மனிதனாக மாற்றி, பின் அந்த மனிதனை தேவர்களுக்கும் உயர்வான இடத்திற்கு கொண்டு சென்றான்.

வாலி - குரங்காக இருந்து, மனிதனாக மாறி, தேவர்களுக்கும் எட்டாத இடத்திற்கு சென்றான்.

வாலி - தான் ஒரு குரங்கு என்று அவனே கூறுகிறான். தம்பியை கொல்வேன் என்று கிளம்புகிறான். பாசம் என்பது இல்லை. பரிவு இல்லை. மன்னிக்கும் குணம் இல்லை.



கொல்லல் உற்றனை, உம்பியை; கோது அவற்கு
இல்லை என்பது உணர்ந்தும், இரங்கலை;
"அல்லல் செய்யல்; உனக்கு அபயம்; பிழை
புல்லல்" என்னவும், புல்லலை, பொங்கினாய். 

என்கிறான் இராமன். கொல்லல் உற்றனை. தவறு அவன் மேல் இல்லை என்று அறிந்தும். அவனுக்கு நீ இரக்கம் காட்டவில்லை. உனக்கு அபயம் என்று வந்தவனை காப்பாற்றாமல் கோபித்தாய் என்று வாலி பற்றி இராமன் கூறுகிறான்.

அப்படிப்பட்ட வாலி, இராம நாமம், இராம பாணம் இந்த இரண்டின் சம்பந்தம் ஏற்பட்ட பின் மனிதனாக மாறுகிறான்.

அறம் பற்றி பேசுகிறான். நல்லது கெட்டது எது என்று அலசுகிறான். விலங்கில் இருந்து  மனிதனாக மாறுகிறான்.

பின், இராமனை கண்ட உடன், அவன் தரிசனம் கிடைத்தவுடன், அவன் குணங்கள்  மெல்ல மெல்ல மாறி அடையாளம் காண முடியாத அளவுக்கு மாறிப் போகிறான்.

- கொல்லுவேன் என்று வந்தவன் , சுக்ரீவன் தவறு செய்தால் அவனை தண்டிக்காதே என்று இராமனிடம் வரம் கேட்க்கிறான்.

- இராமனிடம் தான் தவறாக பேசியதற்காக மன்னிப்பு கேட்க்கிறான் - தருமமும், தகவும், சால்பும் நீ என்று இராமனை உணர்கிறான்

- ஆவி போகும் வேளையில் அறிவு தந்து அருளினாய் என்று நன்றியோடு கூறுகிறான்.

- நீயே தருமம் என்று புகழ்கிறான்

- அனுமனை புகழ்கிறான்

- அங்கதனை தேற்றுகிறான்

- சுக்ரீவனை மன்னிக்கிறான்

இப்படி விலங்காக இருந்து, மனிதனாக மாறி, "பின்   வானுக்கு அப் புறத்து உலகன் ஆனான் ". வானுலகையும் தாண்டி அதற்கு மேலும் உள்ள ஒரு  உலகத்துக்கு  போனான் என்கிறான் கம்பன்....ஒரு தெய்வ நிலை எய்தினான்.

விலங்காக, மனிதனாக, தெய்வமாக மாறினான் வாலி.

அவதார நோக்கம் அங்கே நிறைவேறியது. 

அவ்வளவு கோபம் கொண்ட வாலி எப்படி மாறினான் ? எது அவனை மாற்றியது ? வாலியின் கேள்விகளுக்கு இராமனும் இலக்குவனும் தந்த பதில்கள்  எதுவும் ஆழமானவை அல்ல. ஒத்துக் கொள்ள முடியாத பதில்கள்.

இருந்தும்  ஏதோ ஒன்று நிகழ்ந்திருக்கிறது. அது வாலியை மாற்றி இருக்கிறது.

என்னை கேட்டால் இராமனின் சாநித்தியம் - அருகாமை - ஏதோ    வேண்டும்.

 பேசாமல் நிகழ்ந்த ஏதோ ஒன்று.

அருகில் இருந்த சுக்ரீவனுக்கோ, இலக்குவனுக்கோ , அனுமனுக்கோ தெரியாமல்   இராமனுக்கும் வாலிக்கும் இடையில் நடந்த ஏதோ ஒன்று வாலியை மாற்றி இருக்க வேண்டும்.

உங்கள் வாழ்வில் அந்த மாதிரி நிகழ்ந்திருக்கிறதா ?

பேசாமலே பேசி இருக்கிறீர்களா ?

கண் அசைவில் ? விரல்களின் நெருக்கத்தில் ? அருகருகே அமர்ந்திருந்தும் ஒரு வார்த்தை கூட  பேசாமல் மணிகணக்காக அமர்ந்து இருந்து ஏதோ ரொம்ப நேரம்  பேசியது போல் உணர்ந்து இருகிறீர்களா ?

நான் உணர்ந்து இருக்கிறேன்.

"பொய் அடை உள்ளத்தார்க்குப் புலப்படாப் புலவ" என்கிறான் கம்பன் இராமனை பற்றி வாலியின்  வாயிலாக.

நமக்கு அங்கு நடந்தது என்ன என்று இன்றுவரை  புலப்படாமல் இருக்கிறது.

பொய் அடைத்துக் கொண்டு இருக்கிறது. அந்த அடைப்பு விலகும்போது புலப்படும்.




Thursday, May 23, 2013

வாலி வதம் - தவறுக்கு பிரயாசித்தம்

வாலி வதம் - தவறுக்கு பிரயாசித்தம் 


வாலியின் மேல் அம்பு எய்த பின், இராமன் வாலியின் முன் வந்து  நின்றான் என்று முந்தைய ப்ளாகில் பார்த்தோம்.

வாலிக்கும் இராமனுக்கும் வாக்கு வாதம் நிகழ்கிறது.

வாலி கேட்ட கேள்விக்கு எல்லாம் இராமன் பதில் சொல்கிறான் - கடைசி ஒரு கேள்வியைத் தவிர.

கடைசியில் வாலி கேட்க்கிறான் - ஏன் மறைந்து இருந்து அம்பு எய்தாய் ? என்று.

அந்த கேள்விக்கு இராமன் பதில் சொல்லவில்லை.

இலக்குவன் பதில் சொல்கிறான்.

உன் தம்பி சுக்ரீவன் அடைக்கலம் அடைந்து விட்டான்...நீயும் சரண் என்று வந்து விட்டால் என்ன செய்வது என்று நினைத்து மறைந்து இருந்து அம்பு எய்தான் என்று சொல்கிறான்.



முன்பு, நின் தம்பி வந்து சரண் புக, "முறை இலோயைத்
தென் புலத்து உய்ப்பென்" என்று செப்பினன்; செருவில், நீயும்,
அன்பினை உயிருக்கு ஆகி, "அடைக்கலம் யானும்" என்றி
என்பது கருதி, அண்ணல், மறைந்து நின்று எய்தது' என்றான். 



மறைந்து நின்று அம்பு எய்ததில் சந்தேகம் ஒன்றும் இல்லை. இலக்குவனே அதற்கு வாக்கு மூலம் அளிக்கிறான்.

நீயும் வந்து "அடைக்கலம் யானும்" என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது என்று கருதி  அண்ணல் மறைந்து நின்று அம்பு எய்தான் என்று கூறுகிறான்.

இது ஏற்புடையதா ?

சரணாகதியில் இவனை ஏற்ப்பேன், இவனை ஏற்க மாட்டேன் என்று சொல்லுவது  சரியா ?

இராவணனே வந்தாலும் அபயம் அளிப்பேன் என்று சொல்லியவன் இராமன். வாலிக்கு  அபயம் அளித்தால் என்ன ?

இப்போது இராமன் என்ன செய்யப் போகிறான் என்பதுதான் கேள்வி.

இராமன் இரண்டு விஷயங்கள் செய்தான்.

ஒன்று செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டான்...யாரிடம் ? வாலியிடம் கூட அல்ல, வாலியின் மகன், பொடியன் அங்கதனிடம் இராமன் மன்னிப்பு கேட்டான்.

ஹா...அப்படியா சங்கதி...இதுதான் இராமன் காட்டிய வழியா...தவறு செய்தால் மன்னிப்பு கேட்டால் போதுமா ? ரொம்ப சுலபமான வழியாக இருக்கிறதே என்று  நீங்கள் ஆரம்பிக்கு முன்....

நீங்கள் கார் ஓட்டிக் கொண்டு போகிறீர்கள். போகும் போது ஒரு மிதிவண்டி காரன் குறுக்கே வந்து விடுகிறான். அவனை இடித்து விடக்கூடாதே என்று வேகமாக வண்டியை வளைக்கிறீர்கள் ....ஓரமாய் ஒழுங்காக நடை பாதையில் சென்று கொண்டிருந்தவன் மேல் வண்டியை மோதி விடுகிறீர்கள்.

நடை பாதையில் போகிறவனை கொல்வது உங்கள் நோக்கம் அல்ல. மிதி வண்டி காரனை காப்பாற்ற நினைத்தீர்கள்...

வாலியை கொல்ல வேண்டும் என்று இராமன் அயோத்தியை விட்டு கிளம்பவில்லை. சுக்ரீவனை காப்பாற்ற நினைத்தான், வாலி அடி பட்டான்.

இடித்துவிட்டு வண்டியை நிறுத்தாமல் போகக் கூடாது - முதல் விதி. 

நடை பாதையில் சென்று அடிபட்டவனிடம் மன்னிப்பு கேட்கிறான் - இது இரண்டாவது விதி.

இதோடு விட்டிருந்தால், பெரிய விஷயம் இல்லை.

மூன்றாவதாக இராமன் ஒரு காரியம் செய்கிறான். யாரும் நினைத்து பார்க்க முடியாத ஒரு காரியம்.

தவறுக்கு பிரயாச்சித்தம் செய்கிறான்.

அந்த நேரத்தில், இராமனுக்கு பிள்ளை இல்லை. வாரிசு இல்லை. வாலியின் மகனை தன்  வாரிசாக  ஏற்றுக் கொள்கிறான்.

தன் உடைவாளை அங்கதனிடம் கொடுத்து, " நீ இதை பொறுத்தி " என்றான். பொறுத்தி என்றால் பெற்றுக் கொள் என்று அர்த்தம் அல்ல. இதற்க்கு முன்னால் இராமனை காட்டுக்கு அனுப்பமாட்டேன் என்று தசரதன் சொன்ன போது , விச்வாமித்ரன் கோபம் கொண்டபோது, வசிட்டன் " நீ இதை பொறுத்தி " என்கிறான். மன்னித்துக் கொள் என்ற அர்த்தத்தில் தான் கம்பன் அந்த வார்த்தையை கையாளுகிறான்.

தான் செய்த தவறுக்கு, இராமன் செய்த பிரயாசித்தம் அது.

அவன் அப்படி செய்ததும், உலகம் எல்லாம் அவனை வாழ்த்தியது.

வெறும் மன்னிப்பு அல்ல.  கொஞ்சம் செல்வத்தை கொடுத்து சரி   பண்ண முயற்சி செய்யவில்லை. வாலியின் மகனை தன் மகனாக அங்கீகாரம் செய்கிறான்.

இது ஏதோ அந்த நேரத்து உணர்ச்சியில் செய்யவில்லை.

இராமனிடமே இராஜ்ஜியம் இல்லை. இதில் அங்கதனை வாரிசாக அறிவித்த் என்ன பயன் ?


பின்னால் இராவண வாதம் முடிந்து, முடி சூட்டிக் கொள்ளும் போதும் " அங்கதன் உடை வாள் ஏந்த" என்று அந்த இடத்திலும் தன் அரசின் வாரிசாக அறிவிக்கிறான் இராமன்.

 தவறு நிகழ்ந்தால் என்ன செய்ய வேண்டும் என்று வாழ்ந்து காட்டுகிறான் இராமன்

முதலில், ஓடி ஒளியாமல் தவறு இழைக்கப் பட்டவர்களை நேருக்கு நேர் சந்திக்க வேண்டும்.

இரண்டாவது - தவறுக்கு மன்னிப்பு கேட்க்க வேண்டும்

மூன்றாவது - தவறுக்கு பிரயாசித்தம்  தேட வேண்டும்.

 நான்காவது - அந்த தவறில் இருந்து பாடம் படிக்க வேண்டும். மீண்டும் அந்த தவறு  நேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த நான்காவது விஷயம் எப்ப நடந்தது என்று நாளை பார்ப்போம் ....

இன்றைய பாடல்


தன் அடி தாழ்தலோடும், தாமரைத் தடங் கணானும்,

பொன் உடைவாளை நீட்டி, 'நீ இது பொறுத்தி' என்றான்;
என்னலும், உலகம் ஏழும் ஏத்தின; இறந்து, வாலி,
அந் நிலை துறந்து, வானுக்கு அப் புறத்து உலகன் ஆனான்


பொருள்


Wednesday, May 22, 2013

வாலி வதம் - தவறு நிகழ்ந்தால் என்ன செய்ய வேண்டும் ?

வாலி வதம் - தவறு நிகழ்ந்தால் என்ன செய்ய வேண்டும் ?


இராமாயணம் என்றால் இராமனின் வழி என்று பார்த்தோம்.

நாம் வாழ்வில் தவறே செய்ய மாட்டோமா ? தவறு நிகழ்ந்து விட்டால் என்ன செய்வது ? அதற்க்கு என்ன பிரயாசித்தம் செய்வது ?

இராமன் வாழ்வில் இதற்க்கு முன் உதாரணம் ஏதாவது இருக்கிறதா ? இராமன் காட்டிய வழி என்ன ?

வாலி வதை தவறு என்றே வாதத்திற்கு எடுத்துக் கொள்வோம்.

இராமன் என்ன செய்தான் ?

முதலில், யாருக்கு தவறு இழைக்கப் பட்டதோ அவர்கள் முன் போய் நின்றான். ஓடி ஒளியவில்லை .

பாடல்


'இறை திறம்பினனால்; என்னே, இழிந்துளோர் இயற்கை! என்னின்,
முறை திறம்பினனால்' என்று மொழிகின்ற முகத்தான் முன்னர்,
மறை திறம்பாத வாய்மை மன்னர்க்கு மனுவில் சொல்லும்
துறை திறம்பாமல் காக்கத் தோன்றினான், வந்து தோன்ற, 


பொருள்


நாச்சியார் திருமொழி - அவன் நிறத்து பாதகர்களே


நாச்சியார் திருமொழி - அவன் நிறத்து பாதகர்களே 


நீங்கள் யாரையாவது ரொம்ப ரொம்ப ஆழமாக நேசிக்கிறீர்கள் என்று வைத்து கொள்ளுங்கள்...நீங்கள் ஏதோ வேலையாக போய்  கொண்டிருகிறீர்கள்...அந்த வழியில் உங்கள் மனம் கவர்ந்தவரின் பெயர் உள்ள பெயர் பலகையோ, அந்த பெயரை சொல்லி யாரோ அழைத்தாலும் உடனே உங்கள் மனதில் அந்த மனம் கவர்ந்தவரின் முகம் தென்றலாய் வருடி  போகும் அல்லவா ? அவர்களுக்கு பிடித்த ஒரு பூவோ, ஒரு பாடலோ நீங்கள் செல்லும் வழியில் கேட்டால் அவர்கள் நினைவு மனதுக்குள் மழை தூறி போகும் தானே ? அவர்களை பார்க்க வேண்டும் என்று தோன்றுமே? இப்போது என்றால், உடனே கை பேசியை தட்டி அவர்களை கூப்பிட்டு பேசி விடலாம்...

ஆண்டாள் காலத்தில் அது எல்லாம் முடியுமா ? அதுவும் அந்த திருமாலுக்கு எந்த எண்ணுக்கு போன் செய்வது.

சும்மா இருக்க மாட்டாமல் இந்த குயிலும், மயிலும்,  களாப் பழங்களும், கருவிளம் பூக்களும் அந்த திருமாலின் நிறத்தில் தோன்றி, அவனை மீண்டும் மீண்டும் நினைவு படுத்திக் கொண்டு என்னை பாடாய் படுத்துகின்றன என்று அவற்றின் மேல் செல்ல கோபம் கொள்கிறாள் ஆண்டாள்.

பாடல்



பைம்பொழில் வாழ்குயில்காள்!
மயில்காள்! ஒண் கருவிளைகாள்!
வம்பக் களங்கனிகாள்!
வண்ணப்பூவை நறுமலர்காள்!
ஐம்பெரும் பாதகர்காள்!
அணிமாலிருஞ் சோலைநின்ற,
எம்பெரு மானுடைய
நிறமுங்களுக் கெஞ்செய்வதே ? 

பொருள்


Tuesday, May 21, 2013

வாலி வதம் - என்ன காரணம்

வாலி வதம் - என்ன காரணம்


காலம் காலமாய் எத்தனையோ பெரியவர்களால் அலசி ஆராயப் பட்ட விஷயம் இது.

மறைந்து நின்று அம்பு எய்தது சரி என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.வேண்டுமானால் அதற்க்கு சில காரணங்கள் சொல்லலாமே தவிர அது நூற்றுக்கு நூறு சரி என்று யாரும் சொல்ல முடியாது.

ஒரு வாதத்திற்கு அது தவறு என்றே வைத்துக் கொள்வோம்.

அந்த தவறு ஏன் நிகழ்ந்தது ? அப்படி ஒரு தவறை இராமன் செய்ததாக வால்மீகியும், கம்பனும் ஏன் சொல்ல வேண்டும் ? அதை விட்டுவிட்டு காப்பியத்தை எழுதி இருக்கலாமே ? அல்லது அதை கொஞ்சம் மாற்றி எழுதி இருக்கலாமே ?

அவர்கள் அதை அப்படியே எழுத ஏதோ ஒரு காரணம் இருக்க வேண்டும்.

என்ன, அது என்ன என்று சிந்திததில் எனக்கு கிடைத்த விடையை கீழே தந்திருக்கிறேன். இது சரியாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. எனக்கு தோன்றியது - அவ்வளவுதான்.

இராமாயணம் என்றாலே இராமனின் வழி என்று பொருள் (அயனம் = பாதை. உத்தராயணம், தக்ஷினாயனம்).

அவதாரம் என்றால் இறை மேலிருந்து கீழே வந்து, கீழே உள்ளவர்களை மேலே உயர்த்த  நடந்த ஒரு சம்பவம்.

எல்லோரும் இராமனின் வழியை பின் பற்ற வேண்டும் என்பது வால்மீகி மற்றும் கம்பனின் விருப்பம்.

இராமனை ஒரு அப்பு அழுக்கு இல்லாத ஒரு நாயகனாக காட்டி இருந்தால், எல்லோரும் என்ன செய்திருப்பார்கள் ? படித்துவிட்டு, இரசித்து விட்டு போய் இருப்பார்கள். அப்படி ஒரு மனிதன் வாழவே முடியாது. அது ஒரு கற்பனை பாத்திரம். கற்பனை பாத்திரம் என்ன வேண்டும் என்றாலும் செய்யும். அதை எல்லாம் நாம் செய்ய  முடியுமா என்று கதையை படித்து விட்டு போய் விடுவார்களே தவிர  இராமன் வழி நிற்க முயல மாட்டார்கள்.

Super  Man படம் பார்க்கும் யாராவது அவன் போல் பறக்க முயல்வார்களா ? அது முடியாது என்று தெரியும். அது பார்க்க, இரசிக்க அவ்வளவுதான்.

இராமன் வழி மக்கள் நடக்க வேண்டும் என்றால் அவனும் நம்மில் ஒருவனாய் இருக்க வேண்டும். ஆசா பாசங்களுக்கு உட்பட வேண்டும், துன்பங்களை அனுபவிக்க வேண்டும், துன்பத்தில் சில மதி தடுமாறி தவறு செய்ய வேண்டும், செய்த தவறை உணர்ந்து திருந்த வேண்டும்....இவை எல்லாம்  செய்தால்  அவனும் நம்மை போல் ஒரு வாழக்கை வாழ்ந்தவன் தான் ...அவனை போல் நாமும் வாழ முடியும்  என்ற எண்ணம் மக்களுக்கு வரும்.

அதை விடுத்து அவனின் எல்லா காரியங்களும் அமானுஷ்யமான காரியங்களாக இருந்தால் மக்கள் பாடம் படிக்க மாட்டார்கள். அது வெறும் கதை என்று சொல்லிவிட்டு  போய் விடுவார்கள்.

எனவே, இராமனின் வாழ்வில் ஒரு சில தவறுகளை அந்த மகா கவிகள் வேண்டும் என்றே வைக்கிறார்கள்.

நமக்காக, நாம் உய்ய, நாம் அவன் வழி நடக்க அவன் மேல் சில பழிகளை ஏத்தி சொல்லுகிறார்கள்

சுத்த தங்கம் ஆபரணம் செய்ய உதாவது. அதில் கொஞ்சம் போல் காட்மியம் சேர்த்தால் அது  ஆபரணம் செய்ய உதவும். அது போல், இராமனின் வாழ்வில் ஒரு சில சம்பவங்களை சேர்க்கிறார்கள்.

அது நடந்ததா, நடக்க வில்லையா என்பதல்ல கேள்வி.

அந்த சம்பவம் நடந்ததாக சொல்வதற்கு காரணம் உங்கள் மேல் உள்ள அன்பு, கருணை.

நீங்கள் நல்ல வழியில் செல்ல வேண்டும். இராமன் காட்டிய வழியில் செல்ல வேண்டும்  என்ற அளவு கடந்த வாஞ்சையால் சொல்லப்பட்டது. இராமன் தங்களை மன்னிப்பான் என்று அவர்கள் நம்பி இந்த சில "தவறுகள்" என்று சொல்லப்படும் சம்பவங்களை சேர்த்து இருக்கிறார்கள் என்பது என் எண்ணம்.

அந்த உயர்ந்த நோக்கத்தை நாம் விட்டு விட்டு இராமன் தவறு செய்தானா என்று ஆராயப் புறப்பட்டு விடுகிறோம். இராமன் குற்றவாளி என்று தீர்ப்பு சொல்லும் நீதிபதி இடத்திற்கு நம்மை நாமே உயர்த்திக் கொள்கிறோம்.

நமக்காக அவன் பழி சுமந்தான் என்று நினைத்துப் பாருங்கள்.

காப்பிய நோக்கம் இராமன் வழியில் மற்றவர்கள் நடக்க வேண்டும் என்பதுதான். அதுதான் அவதார நோக்கமும் கூட.

இந்த கோணத்தில் பார்க்கும் போது, என்னை போல் அவனும் "தவறு" செய்திருக்கிறான் எனவே அவனைப்போல் நான் வாழ முடியும் என்ற நம்பிக்கை  வரும்.

வாலி அவ்வளவு கேள்வி கேட்டும் இராமன் பதில் சொல்ல வில்லை.

என்ன பதில் சொல்ல முடியும் - நான் வேண்டும் என்றே இந்த தவறை செய்தேன் என்று சொன்னால், செய்த காரியத்தின் நோக்கம் நிறைவேறாது. தவறு இல்லை என்றும் சொல்ல முடியாது.

எனவே அமைதியாக   நிற்கிறான்.

மகன் தவறு செய்யும் போது தாய் திட்டுவாள். கோபம் கொள்வாள். மனம் எல்லாம் அன்பு நிறைந்து இருக்கும். என் கோபம் பொய் என்று குழைந்தையிடம் சொல்ல  முடியாது.

வாலி அறிவாளி. கேள்வி கேட்டு கொண்டே வந்தவன், இராமனை பார்க்கிறான். அந்த பார்வையில் ஏதோ ஒன்று அவனுக்கு புரிகிறது.

என்னை பொருத்தவரை, வாலி புரிந்து கொள்கிறான். இராமன் செய்வது ஒரு நாடகம் என்று அவனுக்கும் புரிகிறது. என்ன செய்ய, அவனும் அதை வெளியே சொல்ல முடியாமல் தவிக்கிறான். சொன்னால், காரியம் கெட்டு விடும். எனவே,  பொங்கி வரும் அன்பில், உண்மை புரிந்ததால், அவன் கருணை தெரிந்ததால்  - அவன் சில வார்த்தைகள் சொல்கிறான்.

இராமன் செய்தது தவறு என்று அவன் நினைத்திருந்தால் இந்த வார்த்தைகளை  சொல்லி இருப்பானா என்று யோசித்துப்  பாருங்கள்.

அந்த வார்த்தைகள் ....



வாலி வாதம் - விடை இல்லாத வினாக்கள்

வாலி வாதம் - விடை இல்லாத வினாக்கள் 


இராமன் அம்பை எய்து விட்டான் என்று போன ப்ளாகில் பார்த்தோம்.

விடை இல்லாத வினாக்கள் பல தொக்கி நிற்கின்றன.

1. இராமன் ஏன் வாலியை கொல்ல நினைத்தான் ? வாலி அவன் தம்பியான சுக்ரீவனின் மனைவியை கவர்ந்து கொண்டான் என்பது ஒன்றுதான் ஒரே குற்றச் சாட்டு. வாலி அப்படி செய்தானா ?

2. சுக்ரீவனின் மனைவியின் பெயர் ரூமி. வால்மீகியோ, கம்பனோ அவளை ஒரு இடத்திலும் பேச வைக்க வில்லை. ஏன் ?

3. வாலி இறந்த பின், அவன் மேல் விழுந்து புலம்பும் தாரை, அதை பற்றி ஒண்ணுமே சொல்லவில்லை. இராவணன் இறந்த பின் புலம்பும் மண்டோதரி, இராவணின் காதல் பற்றி பேசுகிறாள். "கள் இருக்கும் மலர் கூந்தல் சானகியை மனச் சிறையில் கரந்த காதல்" என்று பேசுகிறாள். பாதிக்கப்பட்ட தாரை ஏன் அப்படி ஏன் எதுவும் சொல்லவில்லை ?

4. வாலி இறந்த பின், வாலியின் மனைவியான தாரையை சுக்ரீவன் மனைவியாக கொண்டான் என்று வால்மீகி சொகிறார். கம்பன் அப்படி சொல்லவில்லை. தாயாக நினைக்க வேண்டிய அண்ணனின் மனைவியை தாரமாக கொண்டது சரியா ? அதற்க்கு இராமனும் உடந்தை ? வாலிக்கு ஒரு நீதி , சுக்ரீவனுக்கு ஒரு நீதியா ?

5. வாலி, சுக்ரீவனின் மனைவியை கவர்ந்து கொண்டான் என்று எப்படி தெரியும் ? சுக்ரீவன் சொல்கிறான். சுக்ரீவன் சொற்கள் அவ்வளவு நம்பும்படியானவை  அல்ல. மாயாவி பற்றி அவன் இராமனிடம் சொன்னவை சரியானவை அல்ல. அவன், தன் மனைவியை விட்டு விட்டு ஓடி இருக்கலாம். இராமனின் துணை வேண்டி , வாலி தன் மனைவியை கவர்ந்து கொண்டதாக பொய் சொல்லி இருக்கலாம் அல்லவா ?

6. அனுமனும், சுக்ரீவன் சொன்னதையே சொல்கிறான். அனுமன் பொய் சொல்ல வேண்டிய  அவசியம் இல்லை. ஆனால், அனுமனுக்கு எப்படி தெரியும் ? சுக்ரீவன் சொல்லித்தான் அனுமனுக்கு தெரிந்திருக்கும். அனுமன் சுக்ரீவனிடம்  மிகுந்த பற்று கொண்டவன் அல்ல. வாலி இறந்த பின், அனுமன் இராமனிடம் தான் இராமன் கூடவே இருந்து விடுவதாக சொல்கிறான். ஒரு அமைச்சனாக  அவன் தன்னை நினைக்கவில்லை. எனவே, அனுமனுக்கும் சுக்ரீவனுக்கும் உள்ள  உறவு அவ்வளவு ஆழமானது அல்ல. இருவரும் ரிஷ்ய முக  பர்வதத்தில் சந்தித்து இருக்கலாம். சுக்ரீவன் கொஞ்சம் build  up  பண்ணி அனுமனை தன் அமைச்சனாக ஆக்கி இருக்கலாம்.

7. இராவண வதைக்குப் பின்னால், அனுமன் மீண்டும் சுக்ரீவனிடம் போக வில்லை. எனவே, அனுமன், இராமனிடம் சொன்னது எல்லாம், அவனுக்கு சுக்ரீவன் சொன்னதாகத் தான்  இருக்க வேண்டும் என்று நினைக்க இடம் இருக்கிறது.

8. வாலி தவறு செய்தவனா ? வாலி இறந்தபின், இராமன் , அனுமனிடம் சொல்கிறான் "ஒரு சிறந்த அரசன் இறந்த பின் புதிதாக வரும் அரசன் மிகுந்த சவால்களை சந்திக்க வேண்டி வரும்...எனவே நீ அவன் கூட இரு " என்று சொல்கிறான். இது இராமன் வாலிக்கு தந்த சான்றிதழ்.

9. இராமன் சுக்ரீவனை ஆராயாமல் நட்பு கொண்டானா ? இராமனை கண்டவுடன் , சுக்ரீவன் ஓடி ஒளிகிறான். இராமனும் இலக்குவனும் வாலியின் அடியாட்கள்  என்று நினைத்துக் கொண்டு. அப்படி பட்ட அறிவு உள்ளவன் சுக்ரீவன். அதை தெரிந்தும் அவனுடன் நட்பு கொள்கிறான் இராமன். ஏன் ?

10. சரி வாலி தவறு செய்தான் என்றே வைத்துக் கொள்வோம். ஏன் மறைந்து இருந்து கொல்ல  வேண்டும் ?

11. ஏன் என்றால், நேரில் வந்தால் வாலியும் சரணாகதி அடைந்து விடுவான், அதை தவிர்க்க  மறைந்து நின்று கொன்றான் என்கிறான் இலக்குவன். இது என்ன வாதம் ? அன்ன தானம் என்று அறிவித்து விட்டு, எல்லோரும் வந்தால் உணவு பத்தாதே என்று கதவை அடைப்பது மாதிரி.

12. வாலி சரணாகதி அடைந்தால் என்ன ? விபீஷணன் சரணாகதி அடையவ வரும்போது, விபீஷணன் என்ன அந்த இராவணனே வந்தாலும் அவனுக்கு அடைக்கலம் அளிப்பேன் என்கிறான் இராமன். மனைவியை கவர்ந்து சென்றவனுக்கே  அடைக்கலம் தருவேன் என்றால், வாலிக்கு தந்தால் என்ன ?

13. இராவணனிடம் இரண்டு முறை தூது விட்டான் இராமன். ஏன் வாலியிடம் தூது விடவில்லை ? இராமன் மேல் அவ்வளவு மதிப்பும் மரியாதையும் வைத்து இருந்தவன்  வாலி. இராமன் ஒரு வார்த்தை சொல்லி இருந்தால் வாலி இராமன் சொன்ன படி  செய்து இருப்பானே. ஏன் அவனை கொல்ல வேண்டும் ?

14. வாலி முன்னால் போய் நின்றால் தன் பலத்தில் பாதி அவனுக்கு போய் விடும் என்ற பயமா ? அப்படி ஒரு வரம் கொஞ்சம் மிகை படுத்தப்பட்டதாக தோன்றுகிறது. அது உண்மை என்றால் , வாலி மாயவியுடன் 25 மாதங்களுக்கு மேலாக சண்டை போட்டானே , அது எப்படி ?

15. வாலிக்கு ஒரு வரம் இருப்பதைப் போல், இராமனுக்கும் ஒரு வரம் இருக்கிறது. இராமனின் அம்பு இலக்கை ஒரு போதும் தப்பாது. அப்படி என்றால் , இராமன் நேரில் நின்று அம்பு எய்தாலும் வாலி இறந்து இருப்பான். பின் ஏன் , மறைந்து இருந்து அம்பு எய்தான் ?

16. வாலியிடம் நட்பு கொள்ளாமல், ஏன் சுக்ரீவனிடம் நட்பு கொண்டான் ? சபரி கூறினாள்  சுக்ரீவனிடம் நட்பு கொள்ளச் சொல்லி . அது அவ்வளவு சரியாக இல்லை ஏன் என்றால் , ஆதியோடு அந்தமாக சுக்ரீவனின் கதையை இராமன் கேட்கிறான் அவனிடமே. சபரி சொல்லி இருந்தால், மீண்டும் அதை கேட்க்க வேண்டிய அவசியம் என்ன ?


17. சுக்ரீவனின் ஒரு பக்க கதையை மட்டும் கேட்டு விட்டு இராமன் முடிவு எடுக்கிறான்...."தலைமையும் தாரமும் உனக்கு தருவேன் " என்று. வாலியிடம் கேட்க்க வேண்டாமா ?  ஆராயாமல் முடிவு எடுப்பது நல்ல அரசனுக்கு அழகா ?

18. தாரம் - சரி. தலைமை ஏன் ? வாலி தானே மூத்தவன் ? அவன் உயிரோடு இருக்கும் போது சுக்ரீவன் எப்படி அரசு ஆள  முடியும் ?


19. வாலியின் அத்தனை கேள்விகளுக்கும் இராமன் பதில் சொல்லவில்லை. இலக்குவனே பதில்  சொல்கிறான் . ஏன் ?



20. இராமனே தான் தவறு செய்ததாக ஒப்பு கொள்கிறான். " நீ இதை பொறுத்தி என்றான் " என்று வாலியின் மகன் அங்கதனிடம் சொல்கிறான்.. அப்படி சொன்னவுடன்   வானவர்கள் இராமனை வாழ்த்தினார்கள். தவறு செய்தான் என்பதில் சந்தேகம் இல்லை. ஏன் செய்தான் ?

வால்மீகியோ கம்பனோ விடை தரவில்லை.

நாம் யோசிப்போம்


Monday, May 20, 2013

ஆத்திச் சூடி - நுண்மை நுகரேல்

ஆத்திச் சூடி - நுண்மை நுகரேல்



உடல் நலத்திற்கு முதல் எதிரி அளவுக்கு அதிகமாக உண்பது. அதிலும் முக்கியமாக சாப்பாட்டிற்கு இடையில் கொறிக்கும் சிற்றுண்டிகள் - சமோசா, வடை, முறுக்கு, பிஸ்கட்,காபி, டீ  போன்ற நொறுக்கு தீனிகள் பானங்கள்.

இவற்றை முற்றுமாக தவிர்க்க வேண்டும் என்கிறார் அவ்வையார்.

நுண்மை என்றால் சிறிய என்று  பொருள்.

சின்ன சின்ன உணவு வகைகள், சிற்றுண்டிகள் இவற்றை தவிர்க்க சொல்கிறார்.

இதையே இன்னும் கொஞ்சம் விரித்து பார்த்தால் சிறிய விஷயங்கள் என்றால் வாழ்க்கைக்கு பயன் தராத சில்லறை விஷயங்கள் -   புகை பிடிப்பது, புறம் சொல்லுவது, சூதாடுவது, போன்ற பலன் இல்லாத விஷயங்கள் என்றும் கூறலாம்.

வாழ்க்கையில் பெரிய விஷயங்களை நுகருங்கள்.

கல்வி, ஒழுக்கம், சேவை என்று நீண்ட பலன் தரும் விஷயங்களை நுகருங்கள்.

இரண்டு வார்த்தைகள் ...எவ்வளவு விஷயங்கள்.


தேவாரம் - நின் திருக்கருணை இருந்தவாறே

தேவாரம் - நின் திருக்கருணை இருந்தவாறே 


திருநாவுக்கரசர் இறைவனிடம் உருகுகிறார்.

நான் என்ன செய்துவிட்டேன் என்று நீ என் தவறுகளை எல்லாம் பொறுத்து, மன்னித்து, என்னை உன்னோடு அரவணைத்து, என்னை ஆட்கொண்டாய்...உன் கருணையை, ஐயோ, நான் என்னவென்று சொல்லுவேன் 

பாடல்

அத்தாவுன் அடியேனை அன்பா லார்த்தாய்
அருள்நோக்கில் தீர்த்தநீ ராட்டிக் கொண்டாய்
எத்தனையும் அரியைநீ எளியை யானாய்
எனையாண்டு கொண்டிரங்கி யேன்று கொண்டாய்
பித்தனேன் பேதையேன் பேயேன் நாயேன்
பிழைத்தனகள் எத்தனையும் பொறுத்தா யன்றே
இத்தனையும் எம்பரமோ ஐய ஐயோ
எம்பெருமான் றிருக்கருணை இருந்த வாறே.

சீர் பிரித்த பின்

அத்தா உன் அடியேனை அன்பால் ஆர்த்தாய் 
அருள் நோக்கில் தீர்த்த நீர் ஆட்டிக் கொண்டாய்
எத்தனையும் அரியை நீ எளியை ஆனாய் 
எனை ஆண்டு கொண்டு இரங்கி ஏன்று கொண்டாய் 

பித்தனேன் பேதையேன் பேயேன் நாயேன்
பிழைத்தனகள் எத்தனையும் பொருத்தாய் அன்றே 
இத்தனையும் எம்பரமோ ஐய ஐயோ 
எம்பெருமான் திருக்கருணை இருந்தவாறே 

பொருள் 


Sunday, May 19, 2013

இராமாயணம் - நின்ற அம்பு



 இராமாயணம் - நின்ற அம்பு 


இராமன் எய்த அம்பு வாலியின் மார்பில் , வாழைப்பழத்தில் ஏறிய ஊசி போல் நுழைந்தது. நின்றது. ஏன் நின்றது ?

வாலியின் மார்பு எவ்வளவு உரம் வாய்ந்தது ? இந்த நீரும், அந்த நீரைத் தரும் நெருப்பும், காற்றும், இவற்றை தாங்கும் நிலமும் இந்த நான்கின் சேர்ந்த வலிமை பெற்றது. அப்படிபட்டவனின் மார்பை அந்த அம்பு தைத்தது.

இந்த பாடல் சற்று ஆழமான பாடல் - அருஞ்சொற்பொருளோடு விரிவான பொருளையும் பார்ப்போம்....

பாடல்


கார் உண் வார் சுவைக்
      கதலியின் கனியினைக் கழியச்
சேரும் ஊசியின் சென்றது -
      நின்றது என், செப்ப? -
நீரும், நீர் தரு நெருப்பும்,
      வன் காற்றும், கீழ் நிவந்த
பாரும், சார் வலி படைத்தன்
      உரத்தை அப் பகழி.


பொருள்


Saturday, May 18, 2013

இராமாயணம் - இராமனின் தர்ம சங்கடம்

இராமாயணம் - இராமனின் தர்ம சங்கடம் 



'எடுத்துப் பாரிடை எற்றுவென், பற்றி' என்ரு, இளவல்
கடித்தலத்தினும், கழுத்தினும், தன் இரு கரங்கள்
மடுத்து, மீக் கொண்ட வாலிமேல், கோல் ஒன்று வாங்கி,
தொடுத்து, நாணொடு தோள் உறுத்து, இராகவன் துரந்தான்.

கொஞ்சம் வேகமாக முன்னோக்கி செல்வோம். சுக்ரீவனுக்கும் வாலிக்கும் சண்டை நடந்தது. முதலில் சுக்ரீவன் அடிபட்டு சோர்ந்து வருகிறான். சுக்ரீவனை கொடிப்பூ அணிந்து செல்லச் சொல்கிறான் இராமன். அவனும் செல்கிறான்.

சண்டை நடக்கிறது.

போரின் உச்ச கட்டம்.

வாலி , சுக்ரீவனை தலைக்கு மேல் தூக்கினான். கீழே எறியப் போகிறான். அவன் வேகத்தோடு எறிந்தால், சுக்ரீவன் அடிபட்டு மாண்டு போவான் என்பது உறுதி.

இராமன் முடிவு எடுக்க வேண்டிய கட்டாயம்.

சமயம் அதிகம் இல்லை..ஒரு சில வினாடிகள் இருக்கிறது

சுக்ரீவனை காப்பாற்ற வேண்டும் என்றால், வாலியை கொல்ல வேண்டும்.

இல்லை, வாலியை மறைந்து இருந்து கொல்வது தவறு என்று  நினைத்து தயங்கினால் சுக்ரீவன் இறப்பது உறுதி.

வில்லறம் ஒரு புறம்.

சரணாகதி அடைந்தவனை காக்க வேண்டிய சொல்லறம் மறுபுறம்.

இரண்டையும் காக்க முடியாது. ஏதோ ஒன்றை துறக்க வேண்டும்.

எதை துறப்பது ?

வில் அறத்தை துறந்தால் பழி வரும் ஆனால் சுக்ரீவன் பிழைப்பான். வாலி
இறப்பான்

சொல் அறத்தை துறந்தால் சுக்ரீவன் இறப்பான், பழி வராது, வாலி உயிரோடு இருப்பான்.

என்ன செய்வான் இராமன் ?

நீங்கள் இராமனின் இடத்தில் இருந்தால் என்ன  செய்து இருப்பீர்கள் ?

நம்பி  வந்தவனின் உயிர் முக்கியமா ? உங்கள் வீரம் முக்கியமா ?

உங்களுக்கு நல்ல பெயரா ? உங்கள் நண்பனின் உயிரா ?

பாடல்


'எடுத்துப் பாரிடை எற்றுவென், பற்றி' என்ரு, இளவல்
கடித்தலத்தினும், கழுத்தினும், தன் இரு கரங்கள்
மடுத்து, மீக் கொண்ட வாலிமேல், கோல் ஒன்று வாங்கி,
தொடுத்து, நாணொடு தோள் உறுத்து, இராகவன் துரந்தான். 


பொருள் 

Friday, May 17, 2013

தேவாரம் - எனக்கு பிடித்தாமனது எல்லாம் நீ


தேவாரம் - எனக்கு பிடித்தாமனது எல்லாம் நீ 


உங்களுக்கு எதுவெல்லாம் பிடிக்கும் ?

உங்கள் பெற்றோர், பிள்ளைகள், துணைவன்/துணைவி, நல்ல இசை, அருமையான புத்தகங்கள், சுவையான உணவு, புது புது உடை, இயற்க்கை, செல்வம் என்று இப்படி உங்கள் பட்டியல் நீண்டு கொண்டே போகும்....

நாவுக்கரசர் பார்க்கிறார்....இறைவா, எனக்கு எதுவெல்லாம் பிடிக்குமோ அதுவாக எல்லாம் நீ இருக்கிறாய்....எதுவெல்லாம் எனக்கு மகிழ்ச்சி தருமோ , எதுவெல்லாம் எனக்கு சுகம் தருமோ, அது எல்லாமாக நீ இருக்கிறாய்....

பார்க்கும் இடத்தில் எல்லாம் உன் பச்சை நிறம் தோன்றுதடா நந்தலாலா என்று பாரதி பாடியது போல்....

உண்ணும் வெற்றிலை, பருகும் நீர் எல்லாம் நீ என்று ஆழ்வார்கள் உருகியது போல்

நாவுக்கரசர் உருகுகிறார்....

பாடல்



நின்னாவார் பிறரின்றி நீயே யானாய்
    நினைப்பார்கள் மனத்துக்கோர் வித்து மானாய்
மன்னனாய் மன்னவர்க்கோ ரமுத மானாய்
    மறைநான்கு மானாய்ஆ றங்க மானாய்
பொன்னானாய் மணியானாய் போக மானாய்
    பூமிமேல் புகழ்தக்க பொருளே உன்னை
என்னானாய் என்னானாய் என்னி னல்லால்
    ஏழையேன் என்சொல்லி யேத்து கேனே.


பொருள்


திருக்குறள் - தவம் என்றால் என்ன ?

திருக்குறள் - தவம் என்றால் என்ன ?


தவம் என்றால் காட்டில் சென்று, மரத்தடியில் அமர்ந்து, இறைவனின் நாமத்தை சொல்லுவது, என்று ஒரு பொதுவான எண்ணம் நிலவுகிறது.

அது தவறு.

தவத்திற்கு இரண்டு பிரிவு உண்டு.

முதலாவது - உற்ற நோய் நோன்றல். அதாவது தனக்கு வந்த துன்பங்களை தாங்கிக் கொள்வது.

இரண்டாவது - உயிர்க்கு உறுகண் செய்யாமை - மற்ற உயிர்களுக்கு துன்பம் செய்யாமல் இருத்தல்

இவை இரண்டும் தவத்திற்கு உரு.

கொஞ்சம் வலி பொறுத்துப் பழகுங்கள். ஜுரம் வந்தால், தலை வலி வந்தால், பசி வந்தால் கொஞ்சம் தாங்கிப் பழகுங்கள். அதுவே ஒரு தவம். வலி பொறுக்க பொறுக்க உங்கள் வலிமை வளரும்.

எடுத்ததற்கெல்லாம் pain killer வேண்டும் என்று ஓடாதீர்கள்.

வலி இல்லாமல் வாழ்க்கை இல்லை.

எந்த காரியம் செய்தாலும் வலி இருக்கும். வலி இல்லாத வேலை என்று ஒன்று இல்லை.

மற்றவர்களுக்கு உதவி செய்வதும் ஒரு வலி தான்.

படிப்பதும் வலிதான்.

இனிமையான இசை கேட்கிறோம்...வாசிப்பவனுக்குத் தெரியும் வாசிப்பின் வலி.

நோன்றல் என்றால் பொறுத்துக் கொள்ளுதல்.


பாடல்

உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை

அற்றே தவத்திற் குரு.

பொருள்

உற்றநோய் = தனக்கு ஏற்பட்ட துன்பம்


நோன்றல் = பொறுத்துக் கொள்ளுதல்

உயிர்க்குறுகண் = மற்ற உயிர்களுக்கு துன்பம் 

செய்யாமை  = செய்யாமல் இருத்தல்


அற்றே தவத்திற் குரு = அதுவே தவத்திற்கு வடிவம்



Thursday, May 16, 2013

இராமாயணம் - அருளின் ஆழியான்



இராமாயணம் - அருளின் ஆழியான் 


இராமனின் கொடைத்திறம், அவன் வில்லாற்றல் பற்றி கூறிய வாலி, அடுத்து அவனின் சகோதர பாசத்தை பற்றி கூறுகிறான்

இராமனுக்கு அவன் தம்பிகள் என்றால் உயிர். அவர்களை தவிர இன்னொரு உயிர் இல்லை என்று நினைக்கும் அளவுக்கு அவர்கள் மேல் பாசமாய் இருந்தான். அப்படிபட்டவன், நானும் என் தம்பியும் சண்டை போடும்போது முடிந்தால் எங்கள் சண்டையை விலக்கி நாங்கள் ஒன்றாக வாழ வழி செய்வானே அல்லாமல் எங்களுக்கு இடையே உள்ள பகையை தனக்கு சாதகமாக கொண்டு, என் மேல் அம்பு தொடுக்க மாட்டான் என்று உறுதியாகச் சொல்கிறான்.

அது மட்டும் அல்ல, இராமன் கருணை கடல். நான் தவறே செய்திருந்தாலும் என்னை மன்னிக்கும் கருணை உள்ளம் கொண்டவன். அவனை போயா நீ மறைந்து இருந்து அம்பு விட்டு என்னை கொல்வான் என்கிறாய் என்று தாரையிடம் சொல்கிறான்.....

இராமனின் வில்லாற்றல், அவன் சகோதர பாசம், அவன் வள்ளல் தன்மை, அவன் கருணை உள்ளை என்று இராமன் மேல் ஒரு ஆழ்வார் கொண்ட பக்தியும், அன்பும் போல வாலி கொண்டிருக்கிறான்....

பாடல்


தம்பியர் அல்லது தனக்கு வேறு உயிர்
இம்பரின் இலது என எண்ணி ஏய்ந்தவன்,
எம்பியும் யானும் உற்று எதிர்ந்த போரினில்
அம்பு இடை தொடுக்குமோ, அருளின் ஆழியான்?


பொருள்


Wednesday, May 15, 2013

இராமாயணம் - தன்னில் வேறு இலான்


இராமாயணம் - தன்னில் வேறு இலான் 


இராமனின் குணத்தை மட்டும் அல்ல, அவன் வீரத்தையும் புகழ்கிறான் வாலி. அனைத்து உலகங்கள் எதிர்த்து வந்தாலும், அவனுடைய வில் ஒன்று போதும் அதை சமாளிக்க. அவனுக்கு ஒரு துணை வேண்டாம். அவ்வளவு பெரிய வீரன்.  அவன் போய் இந்த கீழான குரங்கோடு நட்பு கொள்வானா ? மாட்டான். என்று தாரையிடம் சொல்கிறான் வாலி.

இராமன் மேல் அளவு கடந்த மதிப்பு.

அவன் ஒரு போதும் தவறு செய்ய மாட்டான் என்ற நம்பிக்கை.


போன பாடலில் அவனின் சகோதர பாசத்தை பற்றி சொன்னான்.

அவனின் வள்ளல் தன்மை பற்றி சொன்னனான். தம்பிக்கு அரசை எவ்வளவு மகிழ்ச்சியோடு கொடுத்தான் என்று சொன்னான்.

கீழ் வரும் பாடலில் அவனுடைய வீரத்தை புகழ்கிறான்.


பாடல்

நின்று பேர் உலகு
      எலாம் நெருக்கி நேரினும்,
வென்றி வெஞ் சிலை
      அலால், பிறிது வேண்டுமோ?
தன் துணை ஒருவரும்,
      தன்னில் வேறு இலான்,
புன் தொழில் குரங்கொடு
      புணரும் நட்பனோ?


பொருள்



Tuesday, May 14, 2013

இராமாயணம் - உவகையால் அளித்த ஐயன்


இராமாயணம் - உவகையால் அளித்த ஐயன் 


போருக்கு போகாதே, சுக்ரீவனுக்கு இராமன்  துணையாக வந்திருக்கிறான் என்று சொல்லக் கேட்ட வாலி  இராமனின் குணங்களை தாரைக்கு  எடுத்துரைக்கிறான்.....

தசரதன் நாட்டை பரதனுக்கு  சொன்னான். இராமன் கொடுத்தான்.

கொடுக்கும் போது மகிழ்ச்சியோடு கொடுத்தானா ? அல்லது தந்தை சொல் மீறக் கூடாது என்ற  கடமை உணர்வினால் சந்தோஷம் இல்லாவிட்டாலும் கொடுத்தானா ?

வாலி சொல்கிறான் - ஆற்ற அரும் உவகையால் - சொல்ல முடியாத சந்தோஷத்தோடு கொடுத்தானாம்.

வாலி அதை நேரில் பார்க்க வில்லை...இராமன் அப்படிதான் கொடுத்திருப்பான் என்று நம்புகிறான்.

மேலும், இராமனை கானகம் அனுப்பிய கைகேயியை கைகேயியை  வாலிக்கு பிடிக்கவில்லை. அவள் பெயரை கூட அவன் சொல்ல விருமபவில்லை. ஈன்றவள் மாற்றவள் என்கிறான்.

இராமன் மேல் அவ்வளவு அன்பு, மரியாதை வாலிக்கு.

இராமன் தவறே   செய்யமாட்டான் என்று  உறுதியாக நம்புகிறான்.

பாடல்


ஏற்ற பேர் உலகு எலாம் எய்தி. ஈன்றவள்
மாற்றவள் ஏவ, மற்று, அவள்தன் மைந்தனுக்கு
ஆற்ற அரும் உவகையால் அளித்த ஐயனைப்
போற்றலை; இன்னன புகறல்பாலையோ?'


பொருள்


அபிராமி அந்தாதி -உந்தன் விழியின் கடை உண்டு


அபிராமி அந்தாதி -உந்தன் விழியின் கடை உண்டு 


உடம்பு சரி இல்லை. அதை குணமாக்க மருந்து சொல்ல மருத்துவர் உண்டு. கடையில் மருந்து உண்டு. மருத்துவரையும் பார்க்காமால், மருந்தும் வாங்காமல் சும்மா வீட்டில் உட்கார்ந்திருந்தால் நோய் குணமாகுமா ? நோய் குணமாகாவிட்டால் யார் காரணம் ?


பாடல்



ஆளுகைக்கு, உன்தன் அடித்தாமரைகள் உண்டு, அந்தகன்பால் 
மீளுகைக்கு, உன்தன் விழியின் கடை உண்டு, மேல் இவற்றின் 
மூளுகைக்கு, என் குறை, நின் குறையே அன்று,-முப்புரங்கள். 
மாளுகைக்கு, அம்பு தொடுத்த வில்லான், பங்கில் வாணுதலே.

பொருள்


இராமாயணம் - இராம சம்பந்தம்


இராமாயணம் - இராம சம்பந்தம் 


சுக்ரீவன் வாலியை போருக்கு அழைத்தான். வாலி போருக்கு புறப்பட்டு விட்டான்...தாரை தடுக்கிறாள் "இராமன் என்பவன் உன் உயிர் கோடலுக்கு உடன் வந்தான் " என்று சொல்லி தடுக்கிறாள்.

இராமன் என்ற சொல் வாலியின் காதில் விழுந்தது.

கடல் கடைந்த கைகளால் அவன் உடல் கடைந்து வருகிறேன் என்று கிளம்பியவன், இராமன் என்ற வார்த்தையை கேட்டவுடன் என்ன சொல்கிறான்   ......

வல் வினையால் துன்பப்பட்டு அயர்கின்ற உலக மக்களுக்கு அறத்தின் வழி நின்றவனை, அவனுடைய இயல்பு அல்லதாதை பேசுகிறாய்....பிழைத்தனை உன் பெண்மையால் என்று கூறுகிறான்.

ஆழ்வார்கள் கூறும் அளவுக்கு வாலி இராமனைப் பற்றி பேசுகிறான் - பேரை கேட்ட மாத்திரத்திலேயே....

அது இராம நாம மகிமை...



பாடல்

உழைத்த வல் இரு வினைக்கு ஊறு காண்கிலாது
அழைத்து அயர் உலகினுக்கு அறத்தின் ஆறு எலாம்
இழைத்தவற்கு, இயல்பு அல இயம்பி என் செய்தாய்?
பிழைத்தனை; பாவி! உன் பெண்மையால்' என்றான்.



பொருள்



Monday, May 13, 2013

பெரிய புராணம் - கடல் வயறு நிறையாத


பெரிய புராணம் - கடல் வயறு நிறையாத 



காவிரி ஆறு கிளை கிளையாக பிரிந்து வரும் வழியில் உள்ள வயல்களை எல்லாம் வளம் செய்து , தன்னிடம் உள்ள நீரை எல்லாம் வாரி வழங்கி கடைசியில் கடலுக்கு வரும் போது ஒன்றும் இல்லாமல் வந்து சேர்கிறது ....ஏன் தெரியுமா ?

எருதின் மேல் வரும் சிவனுக்கு அமுது அளிக்காமல் விஷம் தந்ததால், எவ்வளவு போட்டாலும் வயறு நிறையாத கடலுக்கு ஒன்றும் தர வேண்டாம் என்று நினைத்து காவிரி தன் இடம் உள்ளது எல்லாம் உலக்குக்கு வழங்கி விட்டது...

பாடல்

தட நிலை மாளிகைப் புலியூர் தன்னில் உறைந்து இறைஞ்சிப் போய்
'அடல் விடையின் மேல் வருவார் அமுது செய அஞ்சாதே
விடம் அளித்தது' எனக் கருதி மேதினிக்கு வளம் நிறைத்தே
கடல் வயிறு நிறையாத காவிரியின் கரை அணைந்தார்.

பொருள்




Sunday, May 12, 2013

இராமாயணம் - மனச் சோர்வை மாற்றிய காட்சி


இராமாயணம் - மனச் சோர்வை மாற்றிய காட்சி 


இந்த ப்ளாக் வயது வந்தவர்களுக்கு மட்டும். மற்றவர்கள் படிக்காமல் இருப்பது உத்தமம்.

அதீத துக்கத்தையும் பாலுணர்வு (sex ) குறைக்கும்.

பாலுணர்வு எல்லா உணர்சிகளையும் விஞ்சி நிற்கிறது.

இராமனை கங்கையின் அந்த கரையில் விட்டுவிட்டு மக்கள் திரும்பி வருகின்றனர். தாங்க முடியாத சோகம். ஆ அழுத, அன்றலர்ந்த பூ அழுத என்று அயோத்தியின் துக்கத்தை படம் படித்தான் கம்பன்.

சோகத்தோடு மக்கள் படகில் திரும்பு வருகிறார்கள்.

துடுப்பு போடும் போது நீர் துளிகள் தெறிக்கிறது.

அங்கிருந்த பெண்களின் மேலாடையில் அந்த நீர் துளிகள் படுகின்றன.

அவர்களின் உடல் அழகு நனைந்த துணியின் ஊடே தெரிகிறது.

அந்த காட்சி, அங்கிருந்த ஆடவர்களின் மனத்தில் ஒரு புத்துணர்வை உண்டு பண்ணுகிறது.

வார்த்தைகள் சற்று அதீதமாய் இருந்தாலும், பாடல் சொல்ல வருவது இதுதான்.

பெண்ணின் அருகாமை, அவளின் சுகம் ஒரு ஆணுக்கு எந்த துக்கத்தையும் மாற்றும். அவ்வளவு வலிமை அவளிடம்.

பாடல்



இயல்வு உறு செலவின் நாவாய்,
     இரு கையும் எயினர் தூண்ட,
துயல்வன துடிப்பு வீசும்
    துவலைகள், மகளிர் மென் தூசு
உயல்வு உறு பரவை அல்குல் ஒளிப்பு
    அறத் தளிப்ப, உள்ளத்து
அயர்வுறும் மதுகை மைந்தர்க்கு
    அயாவுயிர்ப்பு அளித்தது அம்மா!


பொருள்


Saturday, May 11, 2013

பிரபந்தம் - விலா நோக சிரித்தேன்


பிரபந்தம் - விலா நோக சிரித்தேன் 


நிறைய பேர் கோவிலுக்குப் போவார்கள். சாமி கும்பிடுவார்கள். உண்டியலில் காணிக்கை போடுவார்கள். பக்தி புத்தகம் எல்லாம் படிப்பார்கள்.

எல்லாம் வெறும் கடமை மாதிரி இருக்கும்.

செய்யாவிட்டால் பாவம் என்று நினைத்து செய்பவர்கள் இருக்கிறார்கள்.

செய்தால் நிறைய பலன் கிடைக்கும் என்று ஆசைப் பட்டு செய்வார்கள்.

செய்யாவிட்டால் எங்கே மற்றவர்கள் நம்மை மதிக்க மாட்டார்களோ என்று மரியாதை வேண்டி செய்வார்கள்.

எல்லோரும் செய்கிறார்கள், நாமும் செய்து விட்டு போவோம்....எதுக்கு வம்பு என்று செய்பவர்களும் உண்டு.

இறைவனை அறிந்தவர்கள் எத்தனை பேர் ?

இப்படி இறைவனை அறியாமல் ஏதோ சாவி கொடுத்த பொம்மை போல் காரியம் செய்தேன்....என்னை நினைத்தால் எனக்கே சிரிப்பு வருகிறது...சாதாரண சிரிப்பு இல்லை...விலா நோக சிரிப்பு வருகிறது என்கிறார் தொண்டரடிப்பொடி.....

பாடல்

உள்ளத்தே யுறையும் மாலை
உள்ளுவா னுணர்வொன் றில்லா,
கள்ளத்தேன் நானும் தொண்டாய்த்
தொண்டுக்கே கோலம் பூண்டேன்,
உள்ளுவா ருள்ளிற் றெல்லாம்
உடனிருந் தறிதி யென்று,
வெள்கிப்போ யென்னுள் ளேநான்
விலவறச் சிரித்திட் டேனே. 

கொஞ்சம் சீர் பிரிப்போம்

உள்ளத்தே உறையும் (திரு)மாலை 
உள்ளுவார் உணர்வு ஒன்றுமில்லா 
கள்ளத்தேன் நானும் தொண்டனாய் 
தொண்டுக்கே கோலம் பூண்டேன் 
உள்ளுவார் உள்ளத்தில் எல்லாம் 
உடனிருந்து அறிதி என்று 
வெள்கிப் போனேன் என்னுள்ளே நான் 
விலவற சிரித்திட்டேனே 

பொருள்


Friday, May 10, 2013

பிரபந்தம் - மாயவன் பேர்சொல்லி வாழ்மினோ


பிரபந்தம் - மாயவன் பேர்சொல்லி வாழ்மினோ


வயதாகும். முடி நரைக்கும். பல் விழும். தோல் சுருங்கும். கண் பார்வை மங்கும். கையும் காலும் வலு இழக்கும். நினைவு தடுமாறும். நா குழறும்.

நம்மை பெரிய ஆள், படித்தவன், பணம் படைத்தவன், அறிவாளி, என்று புகழ்ந்தவர்கள் கூட நமக்கு பின்னால் நம்மை ஏளனம் செய்யும் முதுமை வந்து சேரும்.

நம் உடையை கூட நாம் சரியாக உடுத்த முடியாமல் போகலாம்.

உடை சரியாக உடுத்தாமல், பிறர் பார்த்து சிரிக்கும்படி நாம் உடை உடுத்து நடக்கலாம்.

இதுவரை செய்தது எல்லாம் சரியா என்ற சந்தேகம் வரும். மாற்றிச் செய்யலாம் என்றால் முதுமை இடம் கொடுக்காது.

எனவே, இப்போதே அவன் பெயரை சொல்லி பணியுங்கள், வாழுங்கள்.

பாடல்

பணிமின் திருவருள் என்னும்அம் சீதப்பைம் பூம்பள்ளி
அணிமென் குழலார் இன்பக் கலவி அமுதுஉண்டார்
துணிமுன்பு நாலப் பல்ஏழையர் தாம்இழிப்பச் செல்வர்
மணிமின்னு மேனிநம் மாயவன் பேர்சொல்லி வாழ்மினோ.(3235)

பொருள்


அபிராமி அந்தாதி - பனிமுறுவல்

அபிராமி அந்தாதி - பனிமுறுவல் 



அபிராமியின் அழகு சொல்லி முடியாது.

பவள கொடியில், சிவந்த பழம் இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி அவளின் இதழ்கள்.

அவள் புன்னகை பனி போல் சில் என்று இருக்கும். கசிந்து உருகும். உருக்கும்
அந்த இதழ்களில் புன்னகை தவழும் .

இந்த கொடி போன்ற உடல், அதில் சிவந்த இதழ், அந்த இதழில் தவழும் புன்னகை....இவற்றோடு இன்னும் கொஞ்சம் ....

உடுக்கு போல சின்ன இடை....அந்த இடையின் மேல், அந்த இடுப்பை வளைக்கும் பாரம் இரண்டு மார்பகங்கள்....

இவை எல்லாம் கொண்டு சங்கரனிடம் கலவி என்ற போருக்குப் போனாள் ...சங்கரன் துவண்டு விட்டான் பாவம்....இத்தனை அழகை அவனால் எப்படி தாங்க முடியும்...மன்மதனை கண்ணால் எரித்தவனும் எங்கள் அபிராமியின் கண்களின்  முன் மண்டியிட வேண்டியதுதான்....

பாடல்

பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும், பனிமுறுவல்
தவளத் திரு நகையும் துணையா, எங்கள் சங்கரனைத்
துவளப் பொருது, துடியிடை சாய்க்கும் துணை முலையாள்--
அவளைப் பணிமின் கண்டீர், அமராவதி ஆளுகைக்கே.

பொருள்


Thursday, May 9, 2013

இராமாயணம் - வாலியின் வர பலம்



இராமாயணம் - வாலியின் வர பலம் 


தன் எதிரில் உள்ளவர்களின் பலத்தில் பாதியை வாலி பெற்றுக் கொள்வான்

பலம் என்றால் பலவீனமும் அதில் உண்டு தானே ? அதிலும் பாதி அவனுக்கு சேர வேண்டுமே ? அப்படி என்றால் அவன் எவ்வளவு பலவீனம் உள்ளவானாக இருப்பான் ? எல்லார் பலவீனத்திலும் பாதி அவனுக்கு போய் விடும்.

அதிலும் கம்பன் ஒரு சிறப்பை காட்டுகிறான். "நல் வலம் பாகம் எய்துவான்" என்றான் . அதாவது, அவர்களுடைய நல்ல பலத்தில் பாதியை எடுத்துக் கொள்வான்.

நிறைய அரக்கர்கள், கடினமான தவம் செய்வார்கள். நிறைய வரங்களைப் பெறுவார்கள். பெற்ற பின், அவற்றைக் கொண்டு இல்லாத கெட்ட காரியம் எல்லாம் பண்ணுவார்கள்.

வாலி அப்படி அல்ல. இவ்வளவு வலிமை இருந்தும், தினமும் சிவனை வழிபடுபவன்.

பாடல்


கிட்டுவார் பொரக் கிடைக்கின், அன்னவர்
பட்ட நல் வலம் பாகம் எய்துவான்;
எட்டு மாதிரத்து இறுதி, நாளும் உற்று,
அட்ட மூர்த்தி தாள் பணியும் ஆற்றலான்


பொருள்



Wednesday, May 8, 2013

தனிப் பாடல் - வைகை ஏன் கடலில் கலக்கவில்லை ?


தனிப் பாடல் - வைகை ஏன் கடலில் கலக்கவில்லை ?



நிறைய பேருக்குத் தெரிந்திருக்கும் வைகை கடலில் கலக்காமல் ஒரு பெரிய ஏரியில் போய் கலக்கும் விஷயம்.

ஏன் வைகை நதி கடலில் கலக்கவில்லை ?

பாற்கடலை கடைந்த போது, அந்த கடல் சிவனுக்கு நஞ்சை கொடுத்தது. அந்த பாற் கடலுக்கு இந்த கடல் எல்லாம் உறவுதானே என்று நினைத்து, இப்படி பட்ட கடலுக்கு நாம் ஏன் நீர் தரவேண்டும் என்று வைகை நதி தன்னிடம் உள்ள நீரை எல்லாம் வரும் வழியில் இரு புறமும் உள்ள வயல்களுக்குத் தந்து விட்டு மீதி உள்ள கொஞ்ச நீரை ஒரு ஏரியில் கொண்டு செலுத்தி விடுவதாக புகழேந்திப் புலவர் கற்பனை செய்கிறார்.....

பாடல்

நாரியிட பாகருக்கு நஞ்சளித்த பாவியென்று
வாரியிடம் புகுதா வைகையே – மாறி
இடத்தும் புறத்தும் இருகரையும் பாய்ந்து
நடத்தும் தமிழ்ப் பாண்டிய நாடு.



பொருள் 

அபிராமி அந்தாதி - முன் செய்த புண்ணியம்

அபிராமி அந்தாதி - முன் செய்த புண்ணியம்


பக்தி செய்வது எளிதான காரியம் என்று நினைகிறீர்களா?

ரொம்பவும் கடினமான காரியம்.

நாளை முதல் பக்தி செய்யப் போகிறேன் என்று நீங்கள் நினைத்தால் மட்டும் போதாது.

நாளை முதல் படிக்கப் போகிறேன், நாளை முதல் உடற் பயிற்சி செய்யப் போகிறேன், நாளை முதல் இசை கற்றுக் கொள்ளப் போகிறேன் என்று நீங்கள் என்ன வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம், அதில் வெற்றியும் பெறலாம்.

பக்தி, தவம் இவை எல்லாம் உங்கள் பிரயத்னம் மட்டும் அல்ல.

குருவருளும் திருவருளும் இல்லாமல் முடியாது.

முன்பு செய்த தவமும் வேண்டும்.

நான் சொல்லவில்லை. வள்ளுவர் சொல்கிறார்


தவமும் தவமுடையார்க் காகும் அவம்அதனை
அஃதிலார் மேற்கொள் வது.


முன்பு தவம் செய்தவர்களுக்கே தவம் கை வரும். மற்றவர்கள் அதை செய்ய நினைப்பது அவமே என்கிறார்.

மாணிக்க வாசகர் என்ன சொல்கிறார் தெரியுமா - அவன் அருளாலே அவன் தாள் வணங்கி - என்பார்

இறைவன் திருவடியை வணங்க வேண்டும் என்றால், அவன் அருள் வேண்டும். அவன் அருள் இல்லாவிட்டால் பக்தியும் வராது.

பேற்றை தவம் சற்றும் இல்லாத என்னை என்பார் அருணகிரிநாதர்.

தவம் நாம் செய்வது. பேறு முன்பு செய்த பாவ புண்ணியம். பூர்விக சொத்து.
முன்பு புண்ணியம் செய்திருந்தால், இப்ப தவம் செய்ய, பக்தி செய்ய முடியும்.

....தானமும் தவமும் செய்தல் அரிது ... என்பாள் ஔவை பாட்டி. தவம் செய்வது, பக்தி செய்வது எளிதான காரியம் அல்ல.



பாடல்:


கண்ணியது உன் புகழ், கற்பது உன் நாமம், கசிந்து பக்தி
பண்ணியது உன் இரு பாதாம்புயத்தில், பகல் இரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து-நான் முன்செய்த
புண்ணியம் ஏது? என் அம்மே. புவி ஏழையும் பூத்தவளே.



பொருள்


இராமாயணம் - வாலியின் வாலின் வலிமை


இராமாயணம் - வாலியின் வாலின் வலிமை 


மிக வேகமாக செல்லக் கூடியது என்றால் காற்று. அந்த காற்று கூட ஓட்டப் பந்தயம் வைத்தால் வாலியிடம் தோற்றுவிடும். வாயுவால் வாலியை முந்த முடியாது. அவ்வளவு வேகமாக செல்லக் கூடியவன் வாலி.

முருகன் கிரௌஞ்ச மலையை தன் வேலால் துளைத்தவன். மலையை துளைத்த அந்த வேல் கூட வாலியின் மார்பை துளைக்காது.  வேலை எறிந்தவன் முருகனாக இருந்தால் கூட. அவ்வளவு வலிமை மிக்க மார்பு.

ஒரு ஊருக்கு இராவணன் போகிறான் என்றால் முதலில் அங்கு உள்ளவர்களை "இங்கு வாலி வந்தானா" என்று கேட்பான்.

"வாலி இங்கு வரவில்லை, ஆனால் அவன் பக்கத்து ஊருக்கு வந்தான், அப்படி வந்த போது அவன் வால் இந்த ஊர் பக்கம் வந்து சென்றது " என்று சொன்னால் போதும், இராவணன் அந்த ஊருக்குள் போக மாட்டான். வாலியின் வாலுக்கு அப்படி பயப்படுவான் இராவணன்.

வாலி எவ்வளவு பெரிய வலிமையானவன் என்று நீங்களே கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள்

பாடல்


கால் செலாது அவன் முன்னர்; கந்த வேள்
வேல் செலாது அவன் மார்பில்; வென்றியான்
வால் செலாத வாய் அலது, இராவணன்
கோல் செலாது; அவன் குடை செலாது அரோ


பொருள்


Tuesday, May 7, 2013

திருக்குறள் - உலக இயற்கை


திருக்குறள் - உலக இயற்கை



பணம் சம்பாதிக்க அறிவு வேண்டுமா ?

இந்த உலகத்தில் படிக்காதவன் பெரிய பணக்காரனாக இருக்கிறான். படித்தவன் வறுமையில் வாடுகிறான். இது ஏன் இப்படி நிகழ்கிறது ?

பணம் சம்பாதிப்பதும், சம்பாதித்த பணத்தை பத்திரமாக பாதுகாப்பதும், அதை சரியான வழியில் முதலீடு செய்வதும் அறிவினாலன்றி செய்ய முடியாத காரியம். அப்படி இருக்க, எப்படி படிப்பு அறிவு இல்லாதவர்கள் பெரும் பணக்காரர்களாக இருக்கிறார்கள் ? நிறைய படித்தவர்கள் அப்படி ஒன்றும் பணம் சேர்த்து விடுவதில்லை.....

இதற்கு காரணம் ஊழ் வினை என்கிறார் வள்ளுவர்.

பணம் சேர்பதற்கு உண்டான ஊழ், படிப்பதற்கு ஆவதில்லை. அதே போல் படிப்பதற்கு உண்டான ஊழ் பணம் சம்பாதிக்க ஆவதில்லை.

பாடல்


இருவே றுலகத் தியற்கை திருவேறு
தெள்ளியர் ஆதலும் வேறு.

பொருள்


தாயுமானவர் பாடல் - இராவாணாகாரம்


தாயுமானவர் பாடல் - இராவாணாகாரம் 

தாயுமானவர் - மிகப் பெரிய ஞானி.

1452 பாடல்கள் எழுதி உள்ளார். மிக மிக எளிமையான பாடல்கள்.

வல்லாருக்கும், பாரதியாருக்கும் இவர் பாடல்கள் என்று கூறுவோரும் உண்டு. அத்துணை எளிமை.

வேதாரண்யத்தில் பிறந்து, திருச்சியில் வாழ்ந்து, இராமநாதபுரத்தில் சமாதி அடைந்தார்.

ஒரு பொருளின் மேல் முதலில் ஆசை வரும். அது கையில் கிடைத்துவிட்டால் ஆணவம் வரும். என்னை போல் இந்த உலகில் யார் உண்டு ? நினைத்ததை முடிப்பவன் நான் என்ற ஆணவம் வரும். கிடைக்க வில்லையென்றால் ஆங்காரம் வரும். அந்த ஆங்காரம், ஆணவத்தை விட மோசமானது.

அறிவை மயக்கும் நாடு நிலை தவற வைக்கும். எதை எடுத்தாலும் அதுவாய் மாறிடும். வாயில் வந்த படி பேசும். மும்மூர்த்திகளும் நான் தான் என்று சொல்லும்.....

இப்படி சொல்லிக் கொண்டே தாயுமானவர் இந்த பட்டியலுக்கு முடிவு வேண்டுமே என்று முடிவில் இராவணாகாரமாகி விடும் என்றார்

அது என்ன இராவணாகாரம் ?

வீரத்திலும், பக்தியிலும் சிறந்தவன் இராவணன்.

சீதை மேல்  ஆசைப் பட்டான். புத்தி வேலை செய்வது நின்றது. வீரம் போய் குறுக்கு புத்தி வந்தது. கள்ளமாய் அவளை கவர்ந்து வந்தான். இராமனோடு சண்டை போட்டான். தன் சொந்த மகனை போரில் இழந்தான்.

இத்தனைக்கும் காரணம் அந்த சீதை தானே, அவளை கொன்று விடுகிறேன் என்று புறபட்டான்.

அவள் வேண்டும் என்று தானே தூக்கி வந்தான். அவளுக்காகத்தானே இத்தனை  போர். மகனையும் இழந்தான். இப்போது அவளை கொல்லுவேன் என்கிறான். தனக்கு கிடைக்காதது யாருக்கும் கிடைக்க கூடாது என்ற ஆங்காரம்.

பாடல்

ஆங்கார மானகுல வேடவெம் பேய்பாழ்த்த
       ஆணவத் தினும்வலிதுகாண்
    அறிவினை மயக்கிடும் நடுவறிய வொட்டாது
       யாதொன்று தொடினும் அதுவாய்த்
தாங்காது மொழிபேசும் அரிகரப் பிரமாதி
       தம்மொடு சமானமென்னுந்
    தடையற்ற தேரிலஞ் சுருவாணி போலவே
       தன்னிலசை யாதுநிற்கும்
ஈங்காரெ னக்குநிகர் என்னப்ர தாபித்
       திராவணா காரமாகி
    இதயவெளி யெங்கணுந் தன்னரசு நாடுசெய்
       திருக்கும்இத னொடெந்நேரமும்
வாங்காநி லாஅடிமை போராட முடியுமோ
       மௌனோப தேசகுருவே
    மந்த்ரகுரு வேயோக தந்த்ரகுரு வேமூலன்
       மரபில்வரு மௌன குருவே.


பொருள்:

திருவாசகம் - தேனுந்து செந்தீ


திருவாசகம் - தேனுந்து செந்தீ


தீ நல்லதுதான். உணவு சமைக்க உதவும். மழை பொழிய, பயிர் விளைய, இப்படி பலப் பல நல்ல காரியங்களுக்கு தீ உதவுகிறது. இருந்தும் அதில் ஒரு சங்கடம்...சுடும். தொட்டால் பொசுக்கி விடும். கருக்கி விடும்.

திருப் பெருந்துறையில் ஒரு தீ இருக்கிறது. அதுவும் எரிக்கும். எதை தெரியுமா ? உங்கள் இரு வினைகளை. உங்கள் பாவ புண்ணியம் என்ற இரண்டு வினைகளை எரித்து சாம்பாலாக்கி விடும்.

உங்கள் வினைகளை எரிக்கும் ஆனால் உங்களுக்கு தேன் போல தித்திக்கும். உங்கள் வினைகளை எரிக்கும். உங்கள் உடலை காக்கும்.

தேனைப் பொழியும் செந்தீ அது.

வாழ்க்கையில் பொய் ஆனவற்றை எல்லாம் பொடி பொடியாக்கி விடும். பொய் போன பின் நிற்பது மெய் தானே.

இத்தனையும் நடக்கும், எப்போது என்றால் அந்த திருபெருந்துறையானை மனதால் நினைத்தால்.

அது கூட முடியவில்லையே என்று உருகுகிறார் மாணிக்க வாசகர்.

அவருக்கே அந்த நிலை என்றால்.....

பாடல்


வெய்ய வினையிரண்டும் வெந்தகல மெய்யுருகிப்
பொய்யும் பொடியாகா தென்செய்கேன் செய்ய
திருவார் பெருந்துறையான் தேனுந்து செந்தீ
மருவா திருந்தேன் மனத்து.


பொருள்


இராமாயணம் - நீள் கரம் பற்றிய கையினள்


இராமாயணம் - நீள் கரம் பற்றிய கையினள் 


இராமன் கனகம் போவேன் என்று சொன்னவுடன் நானும் உன்னுடன் வருவேன் என்று சீதை வாக்குவாதம் பண்ணுகிறாள். நின் பிரிவினும் சுடுமோ அந்த கானகம் என்று கேள்வி கேட்கிறாள். என்னை விட்டு விட்டு போவதுதான் உனக்கு இன்பமா என்று இராமனை மடக்குகிறாள்.

இராமன் யோசிக்கிறான்.

சீதை பார்த்தாள். இது சரி வராது என்று நேரே அரண்மனையின் உள்ளே போனாள் . தான் உடுத்தி இருந்த விலை உயர்ந்த ஆடை ஆபரணங்களை களைந்தாள் . மர உரியை புனைந்தாள் . இராமனுக்கு பின் வந்து நின்று, அவன் கையை பற்றிக் கொண்டு "வா போகலாம்" என்று சொல்லுவதை போல நின்றாள்.

எவ்வளவு பெரிய துன்பம் வந்தாலும், மனைவி "நான் உன்னோடு இருக்கிறேன்" என்ற சொன்னால் அந்த அன்பு, அந்த காதல் ஒரு ஆண்மகனை எந்த துன்பத்தையும் எதிர்த்து போராடும் ஆற்றலை தரும்.

நினைத்துப் பாருங்கள். சீதை, எப்படி வாழ்ந்தவள். ஜனகனின் ஒரே பெண். எவ்வளவு செல்லமாக வாழ்திருப்பாள். பட்டத்து இராணியாக வேண்டியவள்.

எல்லாவற்றையும் விடுத்து, மர உரி அணிந்து வந்து நின்றாள் என்றால் அவள் இராமன் மேல் எவ்வளவு அன்பு வைத்திருக்க வேண்டும்.

அவள் அந்த அளவு தன் மேல் அன்பு செய்ய இராமனும் எப்படி இருந்திருக்க வேண்டும் ?

கண்ணில் நீர் வர வைக்கும் அந்த பாடல்



அனைய வேலை, அகல்மனை எய்தினள்;
புனையும் சீரம் துணிந்து புனைந்தனள்;
நினையும் வள்ளல் பின் வந்து, அயல் நின்றனள்,
பனையின் நீள்கரம் பற்றிய கையினாள்.


பொருள்


Monday, May 6, 2013

திருக்குறள் - படித்தாலும் வராத அறிவு


திருக்குறள் - படித்தாலும் வராத அறிவு 


ஒரு புத்தகத்தை பல பேர் படிக்கிறார்கள். அதில் எழுதப் பட்டிருப்பது மாறுவது இல்லை. அப்படி இருக்க, அதை படிக்கும் ஒவ்வொருவரும் வேறு வேறு அர்த்தம் காணுகிறார்கள்.

எப்படி ?

ஏன் அப்படி நிகழ்கிறது ?

ஒருவன் என்னதான் புத்தகங்களைப் படித்தாலும், அவனுக்கென்று ஒரு இயற்க்கை அறிவு இருக்கிறது. அந்த அறிவே படித்த புத்தகங்களை தாண்டி நிற்கும்.

படிக்கும் புத்தகங்கள் ஒருவனை அப்படியே மாற்றி விடுவது இல்லை.

ஒரு ஆத்திகனின் கையில் ஆயிரம் நாத்திக புத்தகங்களை கொடுத்து பாருங்கள். அவன் மனம் மாறுவது இல்லை.

நாத்திகனுக்கும் அப்படியே.

புத்தகங்கள் எழுத்து மூலம் எண்ணங்களை தெரிவிக்கும் ஒரு சாதனம். எண்ணங்களை மற்ற வழியிலும் வெளிப் படுத்தலாம். வாய் மூலம் சொல்லலாம். புத்தகத்திற்கு நேர்ந்த கதி தான் வாய் மொழிக்கும் நேரும்.

புத்தகங்களின் மூலமோ, பேசியோ மனிதர்களை மாற்றி விட முடியாது.

இந்த கருத்தை ஊழ் என்ற அதிகாரத்தில் வள்ளுவர் வைத்து இருக்கிறார்.

முன் செய்த வினையே அறிவாய் நிற்கும் என்பது கருத்து.

சற்று ஜீரணிக்க முடியாத கருத்து.

சட்டென்று ஒத்துக் கொள்ள முடியாத கருத்து.

சிந்திக்க வேண்டிய கருத்து.

பாடல்


நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன்
உண்மை அறிவே மிகும்.


பொருள் 


தேவாரம் - இடரினும் தளரினும்


தேவாரம் - இடரினும் தளரினும் 


நல்லது நடக்கும் போது பொதுவாக யாரும் இறைவனை நினைப்பது இல்லை. கஷ்டம் வந்தால் இறைவனை திட்டி தீர்ப்பார்கள் - இந்த ஆண்டவனுக்கு கண்ணு இல்லை, நான் எவ்வளவு பூஜை செய்தேன், எவ்வளவு காணிக்கை போட்டேன், இது சாமியே இல்லை, இந்த கடவுளை கும்பிடுவதில் ஒரு புண்ணியமும் இல்லை என்று இறை நம்பிக்கை குறைவதை காண்கிறோம்.

சுந்தரர்.

இறைவனிடம் ரொம்ப நடப்பு உணர்வோடு பழகியவர்.

எதையும் இறைவனிடம் உரிமையோடு கேட்பார், ஏதோ கொடுத்து வைத்தது மாதிரி.

ஒரு தந்தையிடம் மகன் எப்படி உரிமையோடு கேட்பானோ, அப்படி கேட்பார். தரவில்லை என்றால் சண்டை பிடிப்பார்.

அப்படி ஒரு அன்யோன்யம். உன்னிடம் எனக்கு இல்லாத உரிமை யாருக்கு என்று.

பாடல்



இடரினும் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே 

இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.

பொருள்


இராமாயணம் - கடல் கடையும் தோளினான் - வாலி - 2


ஒரு முறை தேவர்களும், அசுரர்களும் அமுதம் வேண்டி பாற் கடலை கடைந்தார்கள். மேரு மலையை மத்தாகவும், வாசுகி என்ற பாம்பை கயிறாகவும் கொண்டு கடைந்தார்கள்.

முடியவில்லை. கை சலித்து, உடலும் மனமும் சலித்தார்கள்.

வாலி அங்கு வந்தான் ....

"எல்லாரும் தள்ளுங்க...இது கூட முடியல" என்று அந்த வாசுகியின் தலையை ஒரு கையால் பிடித்தான், வாலை  இன்னொரு கையால் பிடித்தான்...கட கட என்று கடைந்தான். வாசுகி வலி தாங்காமல் வயறு கலங்கி நெருப்பாக மூச்சு விட்டாள்....மந்திர மலை தேய்ந்து உருக் குலைந்தது...அதை பற்றியெல்லாம் அவன் கவலைப் படவில்லை...பாற்  கடலை கடைந்து அமுதம் எடுத்து அவர்களுக்குத் தந்தான்....

அப்பேற்பட்ட வலிய தோள்களை உடையவன்....

நினைத்து பாருங்கள் மலையைக் கொண்டு கடலை கடைபவனின் தோள் ஆற்றல் எப்படி இருக்கும் என்று.....

பாடல்


கழறு தேவரோடு, அவுணர் கண்ணின் நின்று,
உழலும் மந்தரத்து உருவு தேய, முன்,
அழலும் கோள் அரா அகடு தீ விட,
சுழலும் வேலையைக் கடையும் தோளினான்;


பொருள்


தேவாரம் - துஞ்சலும் துஞ்சல் இல்லாத போதும்


தேவாரம் - துஞ்சலும் துஞ்சல் இல்லாத போதும் 


வாழ்க்கையில் மிக கொடுமையான விஷயம் எது என்றால் இறக்கும் நேரம் முதலிலேயே தெரிவது. ஒவ்வொரு நாளும் அதை நினைத்தே வருந்த வேண்டி வரும். அதனினினும் கொடிது, நமக்கு நெருங்கியவர்களின் இறுதி நாளை அறிவது...பெற்றோர், கணவன் , மனைவி, பிள்ளைகள் என்று நமக்கு மிக மிக அன்பானவர்களின் இறுதி நாள் அறிந்தால் எப்படி இருக்கும் ?

மார்க்கண்டேயனின் இறுதி நாள் எது என்று அவனுக்கும் தெரியும். அவன் பெற்றோருக்கும் தெரியும். குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாவது எல்லா பெற்றோர்க்கும் மகிழ்ச்சி தரக் கூடியது. ஆனால் , மாரகண்டேயனின் பெற்றோர்கள் ஒவ்வொரு நாளும் வருந்தினார்கள்.

இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

நாம் நம் வாழ்க்கையில் சுத்தமாக நம்பிக்கை இழக்கும் தருணங்கள் சில வரலாம். தீவிரமான வியாதி, விபத்தில் அடிபட்டு கிடப்பது (நாமோ, நமக்கு வேண்டியவர்களோ), மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள் - இனி பிழைப்பது கடினம் என்று. என்ன செய்வது ? மனித குலத்தின் ஒட்டு மொத்த அறிவும் ஒரு எல்லை தாண்டி வருவது இல்லை.

என்ன செய்வது, என்ன செய்வது ? யாரை போய் கேட்பது,

முதல் போட்ட தொழில் மூழ்கும் தருவாயில் இருக்கிறது. நடுத் தெருவுக்கு வந்து விடுவோம் போல் இருக்கிறது. மனைவி பிள்ளைகளை எப்படி காப்பாற்றுவது....

இப்படி முற்றுமாய் நம்பிக்கை இழக்கும் தருணங்கள் வரலாம்.

மார்கண்டேயனுக்கு வந்த மாதிரி....

அப்படி முற்றுமாய், வேறு வழியேயில்லை என்ற தருணத்திலும் கை கொடுத்தது இறை நம்பிக்கை.

நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒரு வழியை தந்தது...என்றென்றும் பதினாறு என்ற வரத்தை தந்தது....

கட்டாயம் இறப்பான் என்ற நிலை மாறி எப்போதுமே இறக்க மாட்டான் என்ற சிரஞ்சீவி நிலை தந்தது  இறை நம்பிக்கை.

அவனால் முடியாதது எது ? உங்கள் அறிவுக்கும் என் அறிவுக்கும் எட்டாத பதில்கள் அவனிடம் இருக்கும்.

திருஞான சம்பந்தர் உருகுகிறார்.....

பாடல்



துஞ்சலும் துஞ்சலி லாத போழ்தினும்
நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும்
வஞ்சக மற்றடி வாழ்த்த வந்தகூற்
றஞ்சவு தைத்தன அஞ்செ ழுத்துமே.

சீர் பிரித்த பின்

துஞ்சலும் துஞ்சல் இல்லாத போழ்தினும் 
நெஞ்சகம் நைந்து நினை மின் நாள் தோறும் 
வஞ்சகம் அற்று அடி வாழ்த்த வந்த கூற்று 
அஞ்ச உதைத்தன அஞ்சு எழுத்துமே 

பொருள்


Sunday, May 5, 2013

இராமாயணம் - வாலியின் சிறப்பு - 1


இராமாயணம் - வாலியின் சிறப்பு - 1


வாலி பற்றி இராமனிடம் அனுமன் எடுத்துரைக்கிறான்.

வாலியை விட வலிமையான பாத்திரம் ஒன்று இருக்க முடியாது என்று நினைக்கும் அளவுக்கு கம்பன் அந்த பாத்திரத்தை படைக்கிறான்.

அந்த வாலியின் சிறப்புகள் என்ன ?


அவன் சிறந்த சிவ பக்தன், அளவற்ற ஆற்றல் கொண்டவன்.



பாடல்

நாலு வேதம் ஆம் நவை இல் ஆர்கலி
வேலி அன்னவன், மலையின் மேல் உளான்,
சூலிதன் அருள் துறையின் முற்றினான்,
வாலி என்று உளான், வரம்பு இல் ஆற்றலான்; 

பொருள்



திருவாசகம் - சிறைபடா நீர் போல்


திருவாசகம் - சிறைபடா நீர்  போல் 


இறை அருளை பெற என்ன செய்ய வேண்டும் ?

ஒன்றும் செய்ய வேண்டாம் !

ஒண்ணும் செய்ய வேண்டாமா ? அப்புறம் இந்த பக்தி, பூஜை, புனஸ்காரம் எல்லாம் எதுக்கு ? அது எல்லாம் வேண்டாமா ?

வேண்டாம்.

இது என்ன புது கதையா இருக்கு. ஒண்ணும் புரியலையே.

சொல்லுவது நான் அல்ல. மாணிக்க வாசகர்.

மலையில் இருந்து கீழே வரும் வெள்ளம். அதை சிறை படுத்தி வைக்க முடியாது. அணை கட்டி வைத்தாலும் ஆவியாகப் போய் விடும். எப்படி தடுத்தாலும் நீர் கசிந்து கசிந்து கீழ் நோக்கி பாய்வதை தடுப்பதை கடினம்.

இறை அருள் என்ற வெள்ளம் உங்கள் மனம் என்ற இடம் நோக்கி பாய்ந்து வரும். நீங்கள் அதை காலியாக வைத்து இருங்கள்.

அந்த வெள்ளம் நம்மிடம் வர முடியாமல், நாம் அதில் குப்பைகளை போட்டு நிரப்பி வைத்திருக்கிறோம். பள்ளம் இருந்தால் தானே அதில் நீர் வந்து பாய முடியும்?

அத்தனை ஆசை, கோபம், காமம், லோபம், வேற்றுமை உணர்வுகள், அச்சம், பொறாமை என்ற குப்பைகள்.

இந்த குப்பைகளை எடுத்து எறிந்து விட்டு, மனதை சுத்தமாய் வைத்திருங்கள். அருள் வெள்ளம் உங்கள் உள்ளத்தை தானே நிரப்பும்

ஈசனோடாயினும் ஆசை அறுமின் என்றார் திருமூலர்

பாடல்


குறைவிலா நிறைவே கோதிலா அமுதே
    ஈறிலாக் கொழுஞ்சுடர்க் குன்றே
மறையுமாய் மறையின் பொருளுமாய் வந்தென்
    மனத்திடை மன்னிய மன்னே
சிறைபெறா நீர்போல் சிந்தைவாய்ப் பாயுந்
    திருப்பெருந் துறையுறை சிவனே
இறைவனே நீயென் உடலிடங் கொண்டாய்
    இனியுன்னை யென்னிரக் கேனே.  


பொருள்


Saturday, May 4, 2013

இராமாயணம் - அவதார நோக்கமும் செயலும்

இராமாயணம் - அவதார நோக்கமும் செயலும் 


இராமயணத்தை படிக்கும் போது, அதன் கதை போக்கிலேயே படித்துக் கொண்டு போவது ஒரு சுவை.

அதை விடுத்து, இந்த கதை ஏன் இப்படி போகிறது, இதுவே வேறு மாதிரி போனால் எப்படி இருக்கும் ? இந்த கதா பாத்திரம் எதற்கு இருக்கிறது ? அது இல்லாவிட்டால் என்ன என்று கேள்வி கேட்டு விடை தேடினால் அதில் இன்னும் சுவை கூடும்.

அப்படி சிந்தித்த போது எனக்குள் ஒரு கேள்வி....இந்த வாலி வதம் எதற்கு ? அதுவும் மறைந்திருந்து கொல்ல வேண்டிய அவசியம் என்ன ?

இராமன் நேரடியாக வாலியிடம் சென்று ஒரு வார்த்தை சொல்லி இருந்தால், இராவணன் கதறிக் கொண்டு வந்து சீதையை ஒப்படைத்திருப்பான்.

அப்புறம் இராவணனோடு நிதானமாக சண்டை போட்டு அவனை கொன்றிக்கலாம்.

அல்லது வாலியின் துணையோடு நேரே இலங்கை போய் இராவணனை கொன்று சீதையை சிறை மீட்டிருக்கலாம். சுக்ரீவனிடம் உதவி கேட்கலாம் என்றால் வாலியிடம் உதவி கேட்பதில் என்ன தவறு ?

வாலி என்ற பாத்திரம் இல்லாவிட்டால் காவிய போக்கில் என்ன நிகழ்ந்திருக்கும் ?

வாலி வதத்தின் மூலம் கம்பன் என்ன சொல்ல வருகிறான் ? அதுவும் மறைந்திருந்து கொல்வதற்கு ஏதோ ஒரு நோக்கம் இருக்க வேண்டும் அல்லவா ?

ஏன் இராமனை குற்றவாளி கூண்டில் கம்பன் நிறுத்தி வாலி வாயால் அத்தனை கேள்விகளை கேட்க்க வைத்தான் ? கேட்ட பின்னும், வாய் மூடி மெளனமாக இராமனை நிற்க வைத்தான் ?

என்ன காரணம் ? என்ன காரணம் ? என்ன காரணம் ?

யோசித்துப்  பாருங்கள். உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்களேன் ? சுவாரசியமாக இருக்கும்

Friday, May 3, 2013

திருக்குறள் - காதல் நோக்கு


திருக்குறள் - காதல் நோக்கு (கண்ணடிக்கிறா?)


காதலியின் பார்வை, என்ன செய்யும் என்று அதை அனுபவித்தவர்களுக்குத் தெரியும்.

மனதுக்குள் மலரள்ளித் தெளிக்கும்,

உடலெங்கும் உற்சாக நதி கரை புரண்டு ஓடும்,

அட்ரினலில் இரத்தம் கலக்கும், அடிவயிற்றில் கலவரம், காது நுனி சிவக்கும், உள்ளங்கை ஊற்றெடுக்கும், உடல் தூக்கத்தையும் பசியையும் நாடு கடத்தி இருக்கும்....ஓடுகின்ற இதயம் உசைன் போல்ட்டுக்கு சவால் விடும், தரை படாத கால்கள் நியுட்டனின் விதிகளை எள்ளி நகையாடும்....

அவள் நேராக பார்க்க மாட்டாள். ஓரக்கண்ணால ஒரு பார்வை. ஓரப் பார்வைக்கு இத்தனை உற்சாகம்...முழுப் பார்வையும் பார்த்தால்...யார் தாங்குவது ?

அப்படின்னு வள்ளுவர் சொல்லுறார்....

பாடல்

குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
சிறக்கணித்தாள் போல நகும்

பொருள்


அபிராமி அந்தாதி - புனிதரும் நீயும்


அபிராமி அந்தாதி - புனிதரும் நீயும்



அன்பு வயப்பட்டவர்கள் அறிவார்கள் ஈருடல் ஓருயிர் என்றால் என்ன. அன்பு இணைக்கும் பாலம். அன்பு கரைக்கும் இரசவாதம். ஒன்றில் ஒன்று கரைவது அன்பு. நீரையும் எண்ணெயையும் ஒன்றாக ஊற்றி வைத்தாலும் அது ஒன்றோடு ஒன்று பொருந்தாது. தனித் தனியாக நிற்கும்.

இரண்டு பொருளை நாம் சரியாகப் பொறுத்த வில்லை என்றால் அது கட கட என்று ஆடிக் கொண்டிருக்கும். சத்தம் போட்டுக் கொண்டு இருக்கும். சில சமயம் கழண்டு கூட விழுந்து விடும்.


ஒன்றோடு ஒன்று சரியாக பொருந்தி விட்டால் இரண்டும் சேர்ந்து ஒன்றாக செயல் படும்.



மனித மனம் ஒரு நிலையில் நில்லாதது. அங்கும் இங்கும் அலை பாய்ந்து கொண்டே இருக்கும். அரை நிமிடம் கூட அதனால் ஒரு நிலையில் நிற்க முடியாது.



சரண கமலாலயத்தை அரை நிமிஷ நேரமட்டில்
தவமுறை தியானம் வைக்க அறியாத
சட கசட மூட மட்டி 


என்று கூறுவார் அருணகிரிநாதர்

என்னதான் முயற்சி செய்தாலும் சிறை படா நீர் போல் என்று மாணிக்க வாசகர் சொன்னது போல் மனம் நீர் போல் கசிந்து போய் கொண்டே இருக்கிறது.

ஒரு இடத்தில் பொருந்தி நிற்காது.

இறைவனோடு நாம் எப்படி பொருந்தி இருப்பது ? ஒன்று நாம் இறைவனை அடைய வேண்டும். அல்லது இறைவன் நம்மை வந்து அடைய வேண்டும்.

நாம் இறைவனை அடைவது என்பது நடவாத காரியம். அவன் யார், எங்கே இருக்கிறான், எப்படி இருக்கிறான் என்று நமக்குத் தெரியாது.

நாம் யார், எங்கே இருக்கிறோம்,, எப்படி இருக்கிறோம் என்று அவனுக்குத் தெரியும்.

எது எளிது ?

நாம் அவனைத் தேடித் போவதா ? அவன் நம்மை தேடி வருவதா ?

இறைவன் நம்மை வந்து அடைவது எளிது.


பட்டர் கூறுகிறார்...நான் உன்னை வந்து அடைவது என்பது நடவாத காரியம். பேசாமல் நீ வந்து  என் மனதில் இரு என்று அபிராமியிடம்  கூறுகிறார்.

அதுவும் தனியா வராத, வரும்போது உன் கணவனையும் அழைத்துக் கொண்டுவா. இல்லை என்றால், திரும்பியும் உன் கணவனை பார்க்க போய் விடுவாய். நீங்க இரண்டு பெரும் ஒன்றாக வந்து என் மனதில் இருங்கள். அப்பத்தான் திரும்பி எங்கேயும் போக மாட்டீங்க. 

மனிதர்களும், தேவர்களும், மாயா முனிவர்களும் அவர்கள் வேறு, அபிராமி வேறு என்று நினைத்து அவளை அவர்கள் வணங்குகிறார்கள்.

பட்டர் அறிவார். அவர் வேறு அவள் வேறு அல்ல.

பாடல்



மனிதரும், தேவரும், மாயா முனிவரும், வந்து, சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே.கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும், பாம்பும்,பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே.

பொருள்


Thursday, May 2, 2013

திருக்குறள் - காதல் பயிருக்கு நீர்


திருக்குறள் - காதல் பயிருக்கு நீர் 


வீடுகளில் செடிக்கு நீர் விடுவதை பார்த்து இருக்கிறீர்களா ? பூச் செடி, துளசி செடி என்று செடி இருக்கும்.

ஒரு சின்ன  சொம்பிலோ , குவளையிலோ மொண்டு செடிக்கு தண்ணி ஊத்துவார்கள்.

சட்டென்று குவளையை கவிழ்த்து விடமுடியாது. அப்படி மொத்தமா கொட்டினால் செடி தாங்காது. கொஞ்ச கொஞ்சமாய் ஊற்ற வேண்டும்

குவளையை சரித்து கொஞ்சம் ஊற்றனும். அப்புறம் குவளைய நிமித்தனும். அப்புறம் கொஞ்சம் சரிக்கணும்...இப்படி கொஞ்ச கொஞ்சமாய் தண்ணி ஊற்றுவார்கள்

அப்படி கொஞ்ச கொஞ்சமா ஊற்றினால்தான் செடி நன்றாக வளரும்.



அவ சில சமயம் நேருக்கு நேர் பார்ப்பாள். அட, நம்ம  ஆளு இப்படி லுக்கு விடுதேனு நானும் அவ கண்ணை பார்த்தால் உடனே பார்வையை தாழ்த்தி விடுவா.  அப்படி பார்வையை தாழ்த்தும் போது ஒரு நாணப் புன்னகை சிந்துவாள்.

அப்புறம், நான் கவனிக்காதபோது லேசா தலைய தூக்கி பார்ப்பா...அப்புறம் நாணம், தலை கவிழ்ப்பு.....

செடிக்கு தண்ணி ஊத்தும் குவளை ஞாபகம் வருகிறதா ?


பாடல்

நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்


பொருள்


இராமாயணம் - நீர் மேயும் மேகம்


இராமாயணம் - நீர் மேயும் மேகம் 


அயோத்தியில் மேகங்கள் மழை பொழிகின்றன.

இதுதான் செய்தி

இதைச் சொல்ல வேண்டும். ஆழமாக, அழகாக சொல்ல வேண்டும்.

கம்பர் எப்படி சொல்கிறார் பாருங்கள். கம்பனின் கவிப் புலமைக்கு இது ஒரு உதாரணம்.

சிவ பெருமான். அவன் செந்நிற மேனி கொண்டவன். பொன் போன்ற நிறம்.

"பொன்னார் மேனியனே புலித் தோலை அரைக்கசைத்து" என்பது தேவாரம்.

அவன் மேனி எல்லாம் திருவெண்ணீறு பூசி இருக்கிறான். தூரத்தில் இருந்து பார்க்கும் போது ஒரே வெண்மையாகத் தெரிகிறது.

மேகங்கள் அப்படி வெண்மையாக இருந்ததாம்.

அப்படி பட்ட வெண் மேகங்களில் கொஞ்சம் நீர் இருக்கிறது. நிறைய இல்லை. அது ஏதோ ஆற்றை எடுத்து மேலே அணிந்து கொண்டது மாதிரி இருக்கிறது.

பின் அப்படியே மிதந்து போய் கடலின் மேல் பசு புல் மேய்வது மாதிரி கடல் தண்ணியை  எல்லாம் மேய்ந்ததாம். வயிறு முட்ட தண்ணி சாப்ட்டாச்சு.

திரும்பி அயோத்தி வருகிறது.

வரும்போது எப்படி இருக்கிறது ?

கருமை நிறத்தில் இருக்கிறது. எப்படி கருமை ? திருமகள் மணாளன் திருமாலின் வண்ணம் போல்  திரும்பி வந்தது.


திருமால் இங்கு வரப் போகிறான் என்று கட்டியம் கூறுவது போல இருக்கிறது அது.

பாடல்


நீறு அணிந்த கடவுள் நிறத்த வான்
ஆறு அணிந்து சென்று. ஆர்கலி மேய்ந்து. அகில்
சேறு அணிந்த முலைத் திருமங்கைதன் 
வீறு அணிந்தவன் மேனியின் மீண்டதே.

பொருள்