Thursday, May 9, 2013

இராமாயணம் - வாலியின் வர பலம்



இராமாயணம் - வாலியின் வர பலம் 


தன் எதிரில் உள்ளவர்களின் பலத்தில் பாதியை வாலி பெற்றுக் கொள்வான்

பலம் என்றால் பலவீனமும் அதில் உண்டு தானே ? அதிலும் பாதி அவனுக்கு சேர வேண்டுமே ? அப்படி என்றால் அவன் எவ்வளவு பலவீனம் உள்ளவானாக இருப்பான் ? எல்லார் பலவீனத்திலும் பாதி அவனுக்கு போய் விடும்.

அதிலும் கம்பன் ஒரு சிறப்பை காட்டுகிறான். "நல் வலம் பாகம் எய்துவான்" என்றான் . அதாவது, அவர்களுடைய நல்ல பலத்தில் பாதியை எடுத்துக் கொள்வான்.

நிறைய அரக்கர்கள், கடினமான தவம் செய்வார்கள். நிறைய வரங்களைப் பெறுவார்கள். பெற்ற பின், அவற்றைக் கொண்டு இல்லாத கெட்ட காரியம் எல்லாம் பண்ணுவார்கள்.

வாலி அப்படி அல்ல. இவ்வளவு வலிமை இருந்தும், தினமும் சிவனை வழிபடுபவன்.

பாடல்


கிட்டுவார் பொரக் கிடைக்கின், அன்னவர்
பட்ட நல் வலம் பாகம் எய்துவான்;
எட்டு மாதிரத்து இறுதி, நாளும் உற்று,
அட்ட மூர்த்தி தாள் பணியும் ஆற்றலான்


பொருள்







கிட்டுவார் பொரக் கிடைக்கின் = சண்டை போட ஆள் கிடைத்தால்

அன்னவர் = அவர்களின்

பட்ட நல் வலம் பாகம் எய்துவான் = அவர்கள் கொண்ட நல்ல வலிமையில் பாதியை அவன் எடுத்துக் கொள்ளும் வரம் பெற்றவன் 

எட்டு மாதிரத்து இறுதி = எட்டு திக்குகளுக்கும் தலைவனான சிவனை

நாளும் உற்று = தினமும் தரிசித்து

அட்ட மூர்த்தி தாள் பணியும் ஆற்றலான் = அந்த அட்ட மூர்த்தியின் திருவடிகளை பணியும் ஆற்றல் உள்ளவன்


வாலி ஒரு அக்கிரமும் பண்ணவில்லை.

அமிழ்தை கடைந்து எடுத்து தேவர்களுக்கு கொடுத்தான். நினைத்திருந்தால் தானே குடித்திருக்க முடியும் . செய்யவில்லை. அவ்வளவு பரோபாகாரம்.


தினமும் சிவனை வழி படுகிறான். பக்திமான்.

தேவர்களையோ, மனிதர்களையோ துன்பப் படுத்தினான் என்று அவனின் எதிரிகளான  சுக்ரீவனோ அனுமனோ சொல்லவில்லை.

அவன் சுக்ரீவனின் மனைவியிடம் தவறாக நடந்து கொண்டான் என்று அவன் மனைவி சொல்லவில்லை

இராவணன் இறந்த பின் புலம்பும் மண்டோதரி கூறுகிறாள் "கள் இருக்கும் மலர் கூந்தல்   சானகியை மனச் சிறையில் கரந்த காதல் உள்ளிருக்கும் என்றுதடவியதோ ஒருவன் வாளி " என்று.

இராவணன் சீதையை விரும்பினான் என்று மண்டோதரி சொல்லுகிறாள்.

அப்படி, தாரை சொல்லவில்லை.

பின் ஏன் , இராமன் வாலியை கொன்றான் ? அதுவும் மறைந்து நின்று ?




 


1 comment:

  1. This Vaali vahdam is one tricky part in Raamayanam. Only kambar has to come back and explain why the motive for this.

    ReplyDelete