Sunday, May 26, 2013

இரணியன் வதம் - மேதாவிகட்கு எல்லாம் மேதாவி


இரணியன் வதம்  - மேதாவிகட்கு எல்லாம் மேதாவி  


இராம இராவண யுத்தம் நிகழப் போகிறது.

இராவணன் மந்திர ஆலோசனை செய்கிறான்.

அதில் விபீடணன் இராவணனிடம் சொல்கிறான்....எவ்வளவு வர பலம், ஆள் பலம், உடல் பலம் இருந்தாலும் அறத்தின் பலம் இல்லாவிட்டால் அழிந்து போவாய் என்று. ஆணவம், இறைவனை பணியாத குணம் இருந்தால் அழிவு வரும் என்று சொல்கிறான்.

அப்படி இருந்த இரணியன் எப்படி அழிந்தான் என்று விபீடணன் விளக்குகிறான்.

இரணியன் வதையை படிக்கும் போது, கம்பன் கம்ப இராமாயணத்தை இதற்காகவே எழுதினான் போல இருக்கும்.

அத்தனை கவி நயம் அத்தனை ஆழ்ந்த தத்துவங்கள். பக்தி பிரவாகம் பொங்கி வழியும் பாடல்கள்.

மொத்தம் 175 பாடல்கள்.

அத்தனையும் தேன் சொட்டும் பாடல்கள்.

வீரம். பக்தி. ஆக்ரோஷம். பிரமாண்டம். எல்லாம் கலந்த பாடல்கள்.

அதிலிருந்து சில பாடல்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசை.

பாடல்


'ஈது ஆகும், முன் நிகழ்ந்தது; எம்பெருமான் ! என்
மாற்றம் யாதானும் ஆக நினையாது, இகழ்தியேல்,
தீது ஆய் விளைதல் நனி திண்ணம்' எனச்
செப்பினான் - மேதாவிகட்கு எல்லாம் மேலான மேன்மையான்.

பொருள் 



ஈது ஆகும் = இது ஆகும்

முன் நிகழ்ந்தது = முன் நிகழ்ந்தது - முன் நிகழ்ந்த இரணியன் கதை

எம்பெருமான் = என் பெருமானாகிய இராவணனே 

என் மாற்றம் யாதானும் = நான் உனக்கு மாற்றாக கருத்தை சொல்லினும்

ஆக நினையாது = அதை மனதில் கொள்ளாமல் 

இகழ்தியேல் = நான் சொல்வதை இகழ்ந்தால்

தீது ஆய் விளைதல் நனி திண்ணம் = தீமை விளைவது மிக உறுதி

எனச் செப்பினான் = என்று கூறினான்

மேதாவிகட்கு எல்லாம் மேலான மேன்மையான். = மேதைகளுக்கு எல்லாம் மேலான மேன்மை உள்ள விபீடணன்

நிகழ்ந்தது என்று கூறினானே - என்ன நிகழ்ந்தது ?

பார்ப்போம் 

No comments:

Post a Comment