Sunday, May 5, 2013

இராமாயணம் - வாலியின் சிறப்பு - 1


இராமாயணம் - வாலியின் சிறப்பு - 1


வாலி பற்றி இராமனிடம் அனுமன் எடுத்துரைக்கிறான்.

வாலியை விட வலிமையான பாத்திரம் ஒன்று இருக்க முடியாது என்று நினைக்கும் அளவுக்கு கம்பன் அந்த பாத்திரத்தை படைக்கிறான்.

அந்த வாலியின் சிறப்புகள் என்ன ?


அவன் சிறந்த சிவ பக்தன், அளவற்ற ஆற்றல் கொண்டவன்.



பாடல்

நாலு வேதம் ஆம் நவை இல் ஆர்கலி
வேலி அன்னவன், மலையின் மேல் உளான்,
சூலிதன் அருள் துறையின் முற்றினான்,
வாலி என்று உளான், வரம்பு இல் ஆற்றலான்; 

பொருள்






நாலு வேதம் ஆம் = நான்கு வேதங்கள் என்னும்

நவை இல் ஆர்கலி = குற்றம் எதுவும் இல்லாத அலை கடல். கடல் போன்றது வேதம். கடலில் ஒரு குறை உண்டு. அது முத்து பவளம் போன்றவற்றை தன்னுள் மறைத்து வைக்கும். மற்றவர்களுக்கு எளிதில் தராது. வேதம் அப்படி அல்ல. தன்னிடம் உள்ள அறிவு பொக்கிஷங்களை அள்ளி அள்ளி தரும். எனவே , குறை ஒன்றும் இல்லாத கடல்.


வேலி அன்னவன் = அப்படிபட்ட வேலி போன்றவன் . அவைகளை பாதுகாப்பவன்


 மலையின் மேல் உளான் = அந்த மலையில் உள்ளான்

சூலிதன் = சூலப் படை கொண்ட சிவனின்

அருள் துறையின் முற்றினான் = அருளை முற்றுமாக பெற்றவன் (சிறந்த சிவ பக்தன் )

வாலி என்று உளான் = வாலி என்று ஒருவன் இருக்கிறான்.

, வரம்பு இல் ஆற்றலான் = எல்லை இல்லாத ஆற்றல் பெற்றவன்



4 comments:

  1. This is how he described raavanan also. Isn't there any body bad in Kamba raamaayanam?

    ReplyDelete
    Replies
    1. There are many. Kooni, Thaadagai, Soorpanagai, Viraadhan,...so many bad people.

      btw: Every person carries good and bad in them. Good people have more of good qualities and less of bad qualities and vice versa. There is no absolutely good person and absolutely bad person.

      Delete
  2. இப்படிப்பட்ட வாலியையே வென்றவன் என்று இராமனுக்குப் பெருமை செர்க்கப்போகிறாரா கம்பர்?

    ReplyDelete
    Replies
    1. அல்ல. அதற்கும் ஒரு படி மேலே

      Delete