Monday, May 6, 2013

திருக்குறள் - படித்தாலும் வராத அறிவு


திருக்குறள் - படித்தாலும் வராத அறிவு 


ஒரு புத்தகத்தை பல பேர் படிக்கிறார்கள். அதில் எழுதப் பட்டிருப்பது மாறுவது இல்லை. அப்படி இருக்க, அதை படிக்கும் ஒவ்வொருவரும் வேறு வேறு அர்த்தம் காணுகிறார்கள்.

எப்படி ?

ஏன் அப்படி நிகழ்கிறது ?

ஒருவன் என்னதான் புத்தகங்களைப் படித்தாலும், அவனுக்கென்று ஒரு இயற்க்கை அறிவு இருக்கிறது. அந்த அறிவே படித்த புத்தகங்களை தாண்டி நிற்கும்.

படிக்கும் புத்தகங்கள் ஒருவனை அப்படியே மாற்றி விடுவது இல்லை.

ஒரு ஆத்திகனின் கையில் ஆயிரம் நாத்திக புத்தகங்களை கொடுத்து பாருங்கள். அவன் மனம் மாறுவது இல்லை.

நாத்திகனுக்கும் அப்படியே.

புத்தகங்கள் எழுத்து மூலம் எண்ணங்களை தெரிவிக்கும் ஒரு சாதனம். எண்ணங்களை மற்ற வழியிலும் வெளிப் படுத்தலாம். வாய் மூலம் சொல்லலாம். புத்தகத்திற்கு நேர்ந்த கதி தான் வாய் மொழிக்கும் நேரும்.

புத்தகங்களின் மூலமோ, பேசியோ மனிதர்களை மாற்றி விட முடியாது.

இந்த கருத்தை ஊழ் என்ற அதிகாரத்தில் வள்ளுவர் வைத்து இருக்கிறார்.

முன் செய்த வினையே அறிவாய் நிற்கும் என்பது கருத்து.

சற்று ஜீரணிக்க முடியாத கருத்து.

சட்டென்று ஒத்துக் கொள்ள முடியாத கருத்து.

சிந்திக்க வேண்டிய கருத்து.

பாடல்


நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன்
உண்மை அறிவே மிகும்.


பொருள் 





நுண்ணிய = சிறந்த (specialized )

நூல்பல கற்பினும் = பல புத்தகங்களை படித்தாலும்

மற்றும்தன் = மற்றபடி தன்னுடைய

உண்மை அறிவே மிகும் = உண்மையான அறிவே மிகுந்து நிற்கும்

ஒன்று கவனித்தீர்களா ? வள்ளுவர் காலத்திலேயே நுண்ணிய நூல்கள் பல இருந்திருக்கின்றன.. அவை எப்போது எழுதப் பட்டவை ? எங்கே அவை ? அப்போது  நுண்ணிய நூல்கள் எழுதப் பட்டன என்றால், தமிழ் எவ்வளவு தொன்மையான மொழியாக இருந்திருக்க வேண்டும் ?

இது குறளின் மைய கருத்தாக இல்லாவிட்டாலும், சுவாரசியமான ஒரு  கவன ஈர்ப்பு..

பெருமை படுவோம்....

2 comments:

  1. நல்ல விளக்கம். ஆனால் தலைப்பு கொஞ்சம் encouraging ஆக வைத்து இருக்கலாம். நாங்களே வள்ளுவர் மாதிரி பல பெரியோர்கள் என்ன சொன்னாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் உங்கள் Tamil , gita blog படித்து எங்கள் அறிவை வளர்த்தி வருகிறோம்.

    ReplyDelete
  2. நூலறிவை விட, தனது உண்மை அறிவே மிகுதியாகும் (அதாவது, சிறந்ததாகும்) என்று சொல்லலாமா?

    இந்த மாதிரி ஒரு அதிகாரம் இருப்பது எனக்கு இப்போதுதான் தெரிந்தது. அந்த அதிகாரம் முழுதுமே, "தலை எழுத்தை மாற்ற முடியாது" என்ற ரீதியில்தான் குறள்கள் இருக்கின்றனவா?

    ReplyDelete