Wednesday, August 4, 2021

நாலடியார் - யாரிடம் தான் குறை இல்லை ?

 நாலடியார் - யாரிடம் தான் குறை இல்லை ?


யாரிடம் தான் குறை இல்லை? குறை இல்லாத மனிதனே இந்த உலகில் இல்லை. குறை உள்ளவர்களை விலக்கி நடந்தால், நாம் தனியாகத்தான் நடக்க வேண்டி வரும். நம்மிடம் குறை இல்லையா?


நட்பிலும், உறவிலும் குறை இருந்தால் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். 


நட்பு மட்டும் அல்ல, வீட்டுக்கு வந்த மருமகள்/ன் கொஞ்சம் அப்படி இப்படி இருந்தால் பொறுத்துதான் போக வேண்டும். விலக்கி விட முடியாது. 


மனிதர்களை விடுங்கள், "நெல்லில் உமி உண்டு, நீரில் நுரை உண்டு, மணம் மிக்க அழகான பூவில் கூட வாடி, நிறம் இல்லா ஓரிரு இதழ்கள் இருக்கலாம்...அதற்காக அவற்றை வெறுக்க முடியுமா? " ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்கிறது நாலடியார். 


பாடல் 


நல்லார் எனத் தாம் நனி விரும்பிக் கொண்டாரை,

அல்லார் எனினும், அடக்கிக் கொளல்வேண்டும்;-

நெல்லுக்கு உமி உண்டு; நீர்க்கு நுரை உண்டு;

புல் இதழ் பூவிற்கும் உண்டு.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/08/blog-post.html


(Please click the above link to continue reading)


நல்லார் = நல்லவர் 


எனத் = என்று 


தாம் = நாம் 


நனி = மிக 


விரும்பிக் கொண்டாரை, = விரும்பி ஏற்றுக் கொண்டவரை 


அல்லார் எனினும் = அப்படி நல்லவர்கள் இல்லை என்றாலும் 


அடக்கிக் கொளல்வேண்டும்;- = வெளியே காட்டிக் கொள்ளாமல் அடக்கிக் கொள்ள வேண்டும் 


நெல்லுக்கு உமி உண்டு = நெல்லில் பயன் படாத உமி உண்டு 


நீர்க்கு நுரை உண்டு; = நீரிலே நுரை உண்டு 


புல் இதழ் பூவிற்கும் உண்டு. = பயன் தராத இதழ்கள் பூவிலும் உண்டு 



ஏதோ ஒரு கெட்ட குணம் இருக்கிறது என்பதற்காக நட்பை கை விட்டுக் விடக் கூடாது. 


எல்லாவற்றிலும் நிறை குறை இருக்கத்தான் செய்யும். 


சரி சரி என்று அணைத்துக் கொண்டு போக வேண்டியதுதான்...


என்ன, சரி தானே?



5 comments:

  1. ஆம் அண்ணா ...
    அப்படியே ஏற்க வேண்டும்...

    ReplyDelete
  2. நல்லவரிடம் ஓரிரு சிறு குற்றங்கள் இருந்தால், அவர் பிழையாக ஏதாவது செய்துவிட்டால் நாம் அதை விட்டு விடலாம். ஆனால், நல்லவர் என்று நாம் கருதியவர், பிற்காலத்தில் கயவர் என்று தெரிய வந்தால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

    ReplyDelete
  3. அனுசரித்தால்தான் வாழ்க்கை முன்னோக்கி நகரும்

    ReplyDelete