Wednesday, May 4, 2022

3000 ப்ளாகுகள்

 3000 ப்ளாகுகள் 


உங்களின் தொடர் வாசிப்பு மூலமும், உங்களின் கருத்து பரிமாற்றம் மூலமும், குருவருளின் பலனாலும் நேற்றோடு  3000 ப்ளாகுகள் எழுதி முடித்துவிட்டேன். 


அனைவருக்கும் நன்றி. 


ஏதோ விளையாட்டாக ஆரம்பித்தது இவ்வளவு தூரம் வந்து விட்டது. 


தமிழ் அறிவு சற்றும் இன்றி, ஆன்மீக உணர்வு கொஞ்சமும் இல்லாமல் ...நான் எழுதியவற்றையும் 'சிறு கை அளாவிய கூழ்' போல் இரசித்து வந்தமைக்கு மீண்டும் ஒரு நன்றி. 


இன்னும் தொடரும் என்ற நம்பிக்கையுடன். 

5 comments:

  1. பிளாக் இல்லை நண்பரே. போஸ்ட் தான் சரி... தமிழில் சொன்னால் பதிவு என்று சொல்லலாம்.

    ReplyDelete
  2. ப்ரமாதம். உங்கள் பணி இனிதே தொடர வாழ்த்துகள். மற்றும் ப்ரார்த்தனைகள்.

    ReplyDelete
  3. முதற்கண் மூன்றாயிரம் ப்ளாகுகள் முடித்ததிற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். இந்த 3000 kanakku
    இடறுகிறது . ஒரே பதிவில் இரண்டு,மூன்று கவிதைகள்,பாடல்கள்,பாசுரங்கள் என்று எடுத்துக்கொண்டால் கிட்டத்தட்ட 4000 பதிவுகுளாக இருக்கலாம்!
    உங்கள் தமிழறிவையோ ஆன்மீக உணர்வுகளையோ குறைத்து மதிப்பீட வேண்டாம்.அவைகளின் உயர்வு மேன்மை எவ்வளவு என்பதை தொடர்ந்து படிப்பவர்களுக்கு தெரியும்.
    புதிய கண்ணோட்டத்துடனும் மனதில் பதியும்வண்ணம் எழுதும் உங்கள் திறன் பிரமிக்க வைக்கிறது.உங்கள் பணி மேலும் பல்லாண்டுகள் தொடர ஆண்டவன் அருள் புரியட்டும்.

    ReplyDelete
  4. தனக்குத் தெரிந்ததை, தெரிந்தவரையில் தெளிவாகச் சொல்லும் உரிமை அனைவருக்கும் உண்டு. அதிலிருந்து தனக்கு வேண்டியதை எடுத்துக்கொள்ளவேண்டியது வாசகனின் கடமை. எனவே 'தமிழறிவு குறைவு' என்றெல்லாம் உங்களைத் தாழ்த்திக்கொள்ள வேண்டியதில்லை. ஒரு மாதப் பத்திரிகையில் மாதம் ஒரு அதிகாரம் திருக்குறளுக்கு பொழிப்புரை எழுதிக்கொண்டிருந்தார் ஓர் அறிஞர். தற்செயலாக அந்தப் பத்திரிகைக்கு சந்தா செலுத்தினேன். அந்த அறிஞரின் பொழிப்புரையில் மாதம் இரண்டு தவறாவது இருந்ததை சுட்டிக்காட்டினேன். இப்போது வேறொருவர் அதை எழுதுகிறார். திருக்குறள் மாதிரி அனைவருக்கும் தெரிந்த, நூற்றுக்கும் மேற்பட்ட தற்கால அறிஞர்கள் பொழிப்புரை எழுதிய நூலுக்கே அறிஞர்கள் மத்தியில் உள்ள நிலை இதுதான் என்றால் என்ன சொல்வது? நீங்கள் உங்களால் முடிந்த தொண்டைத் தமிழுக்குச் செய்கிறீர்கள். மதிக்கிறோம். தொடருங்கள். இருட்டைப் பழிக்காமல், அகல் விளக்கை ஏற்றி வைக்கிறீர்கள். உயர்ந்த பணியல்லவா இது!

    ReplyDelete
  5. இன்னாது 3000 பதிவுகளா? மலைப்பாக இருக்குதே!!! நாங்க இன்னும் முன்னூறு பதிவுகளையே தாண்ட முடியாம தவ்விகிட்டு கிடக்கோம்... ம் .. ம்ம்... நடக்கட்டும் நடக்கட்டும்... வாழ்த்துக்கள்!!

    ReplyDelete