திருவாசகம் - அதிசயப் பத்து - முன்னுரை
உலகிலேயே பெரிய அதியசம் எது?
நாம் தான்.
நாம் எவ்வளவு பெரிய அதியசயமான ஒரு படைப்பு.
இந்த பிரபஞ்சம் எவ்வளவு விரிந்தது? எவ்வளவு பெரியது ? நம்மால் அதை கற்பனை கூட பண்ண முடியாது.
அவ்வளவு பெரிய அண்டப் பெரு வெளியில், ஏதோ ஒரு மூலையில், ஒரு சின்ன நட்சத்திரம் நம் சூரியன். அதைச் சுற்றும் ஒரு சின்ன கோள் நம் பூமி. அதில் உள்ள ஒரு சின்ன இடம் நம் நாடு, பின் நம் ஊர். அங்கு நாம் பிறந்தோம்.
அதுவும் கண், காது, மூக்கு என்று எல்லாம் சரியாக வேலை செய்யும்படி.
அதுவம் எழுதப் படிக்க தெரிந்த படி.
அதுவும், அமைதியான இந்த நாட்டில்.
அதுவும், தமிழ் அறிவோடு.
இது நடக்க என்ன சாத்தியக் கூறு இருக்கிறது?
மிக மிக அபூர்வமான அமைப்பு நாம் பிறந்து வளர்ந்து, இந்த ப்ளாகைப் படிப்பது என்பது.
இது நடக்காமல் இருக்க கோடிக் கணக்கான வாய்ப்பு இருக்கு. அத்தனையும் புறம் தள்ளி, இதோ நான் எழுதுகிறேன், நீங்கள் படிக்கிறீர்கள். இது அதிசயம் அல்லவா?
மணிவாசகர் அதிசயப் பத்து என்று பத்துப் ஆடல்கள் எழுதி உள்ளார்.
"நான் எல்லாம் என்ன ஒரு ஆளுன்னு, என்னை கண்டு பிடிச்சு எனக்கு அருள் செய்திருக்கிறார் இந்த சிவ பெருமான். இது எவ்வளவு பெரிய அதியசம்" என்று உருகி உருகி பத்துப் பாடல்கள் பாடி உள்ளார்.
நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந்து உருகும்படி பாடி இருக்கிறார்.
தினம் ஒன்றாக அந்தப் பாடல்களை சிந்திப்போம்.
நீங்கள் இந்த வலைப்பதிவுகளை எழுதத்தொடங்கிய காலம் ஈசனால் ஆசிர்வதிக்கப்பட்ட காலமாக இருக்க வேண்டும். இத்தனை ஆண்டுகள் இடையறாது எழுதுவதும் அதிசயமே! உங்கள் வலைப்பதிவைப் படித்தாலும் "மண்ணின் நல்ல வண்ணம் வாழலாம்".
ReplyDeleteதமிழ்ப்பள்ளி ஆசிரியர் (பாஸ்டன்)