திருவாசகம் - நான் யார் ?
திருவாசகத்தில் உள்ள மிக சிக்கலான பாடல்களில் ஒன்று
நானார்என் உள்ளமார் ஞானங்களாரென்னை யாரறிவார்
வானோர் பிரானென்னை ஆண்டிலனேல் மதிமயங்கி
ஊனா ருடைதலையில் உண்பலிதேர் அம்பலவன்
தேனார் கமலமே சென்றூதாய் கோத்தும்பீ.
சீர் பிரித்த பின்
நான் யார் ? என் உள்ளம் யார் ? ஞானங்கள் யார் ? என்னை யார் அறிவார் ?
வானோர் பிரான் என்னை ஆண்டிலனேல் மதி மயங்கி
ஊனாரும் உடை தலையில் உண் பலி தேர் அம்பலவன்
தேனார் கமலமே சென்று ஊதாய் கோத்தும்பீ
நான் என்பது என்ன ? என் ஞாபங்கள், என் அறிவு இதைத் தவிர வேறு என்ன ? நான் அறிந்த அனைத்தும் மறந்து போனால் நான் என்ற நான் யார் ? என் பெயர், என் மனைவி/கணவன், என் பிள்ளைகள், பெற்றோர், நண்பர்கள், நான் கற்ற கல்வி எல்லாம் மறந்து போனால் நான் , நானாக இருப்பேனா ?
மாணிக்க வாசகருக்கு இது நிகழ்ந்தது.
இறைவன் அவரை ஆட்கொண்டான்.
நான் என்பது மறைந்து விட்டது ? நான் என்பது போன பின் உள்ளம் என்பது எது ?
ஞானம் இரண்டு வகைப்படும் - கற்ற அறிவு, அனுபவ அறிவு. பர ஞானம், அபர ஞானம் என்று சொல்வார்கள். நானும் போன பின், என் உள்ளமும் போன பின் என் ஞானம் என்பது என்ன ?
நான் போய் விட்டேன். நான் என்பது இல்லை
என் உள்ளம் போய் விட்டது.
என் ஞானங்கள் இல்லாமல் போனது.
இவை அனைத்தும் போன பின் என்னை யார் அறிவார் ?
அந்த இறைவன் என்னை ஆட்கொள்ளவில்லை என்றால் இதுவெல்லாம் என்னவாகி இருக்கும் ?
ஆட் கொண்டபின் என்ன ஆயிற்று ?
பொருள்