Monday, June 3, 2013

இரணியன் வதம் - நரசிங்கத்தின் கோர தாண்டவம்

இரணியன் வதம் - நரசிங்கத்தின் கோர தாண்டவம் 


நரசிங்கப் பெருமாள் களத்தில் இறங்கி விட்டார். அரக்கர்களை பின்னி பெடல் எடுக்கிறார்.

சின்ன பையன்கள் தங்களுக்கு பிடித்த கதா நாயகர்களின் வீர சாகசங்களை எப்படி ஒரு உற்சாகத்தோடு சொல்லுவார்களோ அப்படி ஒரு குதூகலத்தோடு சொல்லுகிறான் கம்பன்.

சில பேரை வாயில் போட்டு கடிக்கும், சில பேரை கையில் அப்படியே பிசைந்து  கொல்லும். இன்னும் கொஞ்ச பேரை அப்படியே தூக்கி மலை மேல் மோதிக் கொல்லும் . இன்னும் கொஞ்ச பேரை அப்படியே தண்ணீருக்குள் முக்கி கொல்லும். சில பேரை தூக்கி தீயில் அப்படியே வாட்டும்......

பாடல்

'பேருடை அவுணர்தம்மைப் பிறை எயிற்று அடக்கும்; பேரா,
பாரிடைத் தேய்க்கும்; மீளப் பகிரண்டத்து அடிக்கும்;  பற்றி,
மேருவில் புடைக்கும்; மாள, விரல்களின் பிசையும்; வேலை
நீரிடைக் குமிழி ஊட்டும்; நெருப்பிடைச் சுரிக்க நீட்டும்;

பொருள்





பேருடை அவுணர்தம்மைப்  = அவுணர் என்றால் அரக்கர். அரக்கர்னு யாராவது பேர் இருந்தால் கூட போதும், அவர்களை

பிறை எயிற்று அடக்கும் = அப்படியே தூக்கி வாயில் போட்டு அடக்கிக் கொள்ளும்

பேரா = நகராத


பாரிடைத் தேய்க்கும் = தரையில் வைத்து தேய்க்கும்

மீளப் பகிரண்டத்து அடிக்கும் = தூக்கி ஆகாயத்தில் வீசும்

பற்றி = பிடித்து

மேருவில் புடைக்கும் = மலை மேல் மோதும்

மாள = சாகும் படி

விரல்களின் பிசையும் = விரல்கைளின் இடையில் வைத்து பிசையும்

வேலை = கடலில்

நீரிடைக் குமிழி ஊட்டும் = நீர் குமிழி (bubbles ) வரும் படி அழுத்தி பிடிக்கும்

நெருப்பிடைச் சுரிக்க நீட்டும் = கருகும் படி நெருப்பில் நீட்டி பிடிக்கும். நெருப்பில் எறியும் என்று சொல்ல வில்லை...கருகும்படி பிடிக்குமாம்....அப்படியே roast  பண்ணும் போல இருக்கிறது....



No comments:

Post a Comment