கம்ப இராமாயணம் - வாலி வதம் - இன்னொரு கோணம்
இராமன் வில் அறம் தவறுபவனா ? வாலி வதத்திற்கு முன், இராமன் முதன் முதலில் வில் எடுத்த போது நடந்தது என்ன ?
விச்வாமித்திரனுடன், அவன் வேள்வியை காக்க இராமன் கானகம் போனான்.
இவர்களை (இராமன், இலக்குவன் மற்றும் விஸ்வாமித்திரன்) கண்டவுடன் தாடகை இவர்களை கொல்ல பெரிய சூலாயுதத்தை எடுத்து ஏறிய தயாராய் நிற்கிறாள்.
விஸ்வாமித்திரன் அம்பை விடு என்று இராமனிடம் சொல்கிறான்.
மாதரையும் தூதரையும் கொல்வது வில் அறம் அல்ல என்று இராமன் அறிவான்..
அவன் அம்பை தொடக் கூட இல்லை.
இன்னும் சிறிது நேரம் சென்றாலும் தாடகையின் கையில் உள்ள சூலாயுதம் அவன் உயிரை குடிக்க தயாராய் இருக்கிறது.
இருந்தும் அவன் அசையக் கூடவில்லை
பாடல்
அண்ணல் முனிவற்கு அது
கருத்துஎனினும். ‘ஆவி
உண்’ என. வடிக் கணை
தொடுக்கிலன்; உயிர்க்கே
துண்ணெனும் வினைத்தொழில்
தொடங்கியுளளேனும்.
‘பெண்’ என மனத்திடை
பெருந்தகை நினைந்தான்.
பொருள்
அண்ணல் முனிவற்கு = பெருமையான அந்த முனிவனுக்கு
அது கருத்துஎனினும் = அது தான் கருத்து என்றாலும் (தாடகையை கொல்வது தான் கருத்து என்றாலும்)
‘ஆவி உண்’ = உயிரை உண்
என = என்று
வடிக் கணை = வடிவான அம்பை
தொடுக்கிலன் = வில்லில் தொடுக்கவில்லை
உயிர்க்கே துண்ணெனும் வினைத்தொழில் = உயிர்களை துச்சமாக என்னும் தொழிலை
தொடங்கியுளளேனும் = தொடங்கி செய்து கொண்டிருந்தாள் என்றாலும்
.
‘பெண்’ என = பெண் என்று
மனத்திடை பெருந்தகை நினைந்தான் = மனத்தில் பெருந்தகை நினைத்தான்.
வில் அறத்தின் நாயகன் இராமன். இது வாலி வதத்திற்கு முன் நடந்தது.
அதற்கு பின் நடந்ததும் ஒன்று உண்டு.
No comments:
Post a Comment