Monday, June 3, 2013

திருக்குறள் - புல்லறிவாண்மை

திருக்குறள் - புல்லறிவாண்மை 


அது என்ன புல்லறிவாண்மை ?

புல்லிய அறிவை ஆள்தல்.

கொஞ்சம் போல படித்துவிட்டு மேதாவி போல காட்டிக் கொள்வது. அறிவின்மை என்பது வேறு. ஏதோ மேல் போக்காக படித்து விட்டு கற்றறிந்த பண்டிதர் போல பேசுவது புல்லறிவாண்மை.

இப்படி பட்ட ஆட்களை வள்ளுவர் ரொம்பதான் கிண்டல் அடிக்கிறார்.

இந்த மாதிரி ஆட்கள் தங்களுக்குத் தாங்களே செய்து கொள்ளும் தீமை இருக்கிறதே, அதை அவர்களின்   எதிரிகள் கூட செய்ய முடியாது என்கிறார் .

அதாவது ஒரு எதிரி எவ்வளவு ஒருவனுக்கு தீமை செய்வானோ அதை விட அதிகமான தீமைகளை இந்த அரை வேக்காடுகள் தங்களுக்கு தாங்களே செய்து கொள்வார்கள் என்கிறார்.

பாடல்

அறிவிலார் தாம்தம்மைப் பீழிக்கும் பீழை
செறுவார்க்கும் செய்தல் அரிது.

பொருள்





அறிவிலார் = அறிவு இல்லாதவர்கள்

 தாம்தம்மைப் = தங்களுக்கு தாங்களே

பீழிக்கும் பீழை = செய்து கொள்ளும் தீமைகள்

செறுவார்க்கும் = பகைவர்களுக்கும்

செய்தல் அரிது. = செய்வது கடினம்

தங்களுக்குத் தாங்களே அவ்வளவு துன்பங்களை செய்து கொள்வார்கள்.



No comments:

Post a Comment