Saturday, June 8, 2013

பிரகலாதன் - இறை உணர்வு - கடல் கரை ஏற

பிரகலாதன் - இறை உணர்வு - கடல் கரை ஏற 


கடலை நீந்தி கடக்க முடியுமா ?

முடியும் என்கிறான் பிரகலாதன்.

பிறவி என்ற பெருங்கடல். அந்த பெருங்கடலை நீந்தி கரை ஏறி நிற்பார்கள்.

யார் ?

அவனுடைய அருமையும், பெருமையும் அறிந்தவர்.

அவன் என்றால் யார் ?

அவன் தான் நாம் செய்யும் எல்லா வினைகளும், அவற்றின் பலன்களும், அந்த பலன்களை உயிர்களுக்கு தரும் தலைவனும், தானே எல்லாமாகி நின்றவன்.

அவனுடைய அருமையும், பெருமையும் அறிந்தவர் இம்மை, மறுமை என்று சொல்லும் இந்த பிறவி பெருங்கடலை கடந்து கரை ஏறி நிற்பர்.

பாடல்


' "கருமமும், கருமத்தின் பயனும், கண்ணிய
தரு முதல் தலைவனும், தானும், தான்; அவன்
அருமையும் பெருமையும் அறிவரேல் அவர்,
இருமை என்று உரைசெயும் கடல்நின்று ஏறுவார். 


பொருள் 




கருமமும்  = செய்கின்ற செயல்களும்

கருமத்தின் பயனும் = அந்த செயல்களின் பயன்களும்

கண்ணிய தரு முதல் தலைவனும் = பூ தொடுக்கும் போது, இந்த பக்கம் ஒரு பூ, அந்த பக்கம் ஒரு பூ என்று வைத்து, நாரினால் அதை கட்டுவார்கள். அப்படி கட்டப்பட்டதற்கு ஒரு கண்ணி  என்று பெயர். இந்த இரு வினைகளின் பலனை தரும் முதல்வன் அவன்.

தானும் = இவற்றை செய்பவனும் அவனே

தான் = எல்லாம் அவனாகி நிற்பவன் ; எல்லாவற்றையும் விடுத்து தானாக நிர்ப்பவனும் அவனே

அவன் = அவனுடைய

அருமையும் பெருமையும் அறிவரேல் = அருமையும் பெருமையும் அறிந்தால்

அவர் = அப்படி அறியும் அவர்கள்

இருமை என்று உரைசெயும் = இம்மை, மறுமை என்று நூல்கள் கூறும் இருமை

 கடல்நின்று ஏறுபலனை வார்.  = என்ற கடலை கடந்து அதன் கரை ஏறி நின்று பலன் அடைவார்கள்




No comments:

Post a Comment