Thursday, August 3, 2023

கந்தரனுபூதி - எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவே

  

கந்தரனுபூதி -   எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவே 


(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 


உண்மை, மெய் ஞானம் என்று சொல்கிறீர்களே அது  என்ன?  அது என்ன என்று தெளிவாகச் சொன்னால் நாங்களும் அறிந்து கொள்ள முடியுமே? அதை சரி பார்க்க முடியுமே என்று பகுத்தறிவாளர்கள் கேட்கலாம். சொல்ல முடியாது என்றால் அது என்ன ஞானம் என்று கேலி செய்யலாம். 


பல விடயங்களை நம்மால் விவரித்துச் சொல்ல முடியாது. 


ரொம்ப தூரம் போவானேன். 


கற்கண்டின் சுவை எப்படி இருக்கும் ? எனக்கு விளக்கிச் சொல் என்றால் எப்படி சொல்லுவது?  கற்கண்டு இருக்கிறது. வாயில் போட்டால் இனிக்கிறது. அது உண்மைதான். சரி, சுவைத்தாய் அல்லவா, அது என்ன சுவை என்று சொல் என்றால் எப்படி சொல்லுவது. 


மல்லிகையின் மணம் எப்படி இருக்கும் சொல். அது ரோஜாவின் வாசனையில் இருந்து எவ்வாறு வேறுபட்டது சொல் என்றால் எப்படிச் சொல்லுவது?


கற்கண்டு எப்படி இருக்கும் என்றால் ஒரு துண்டு வாயில் போட்டால் தெரிந்து விடும். அனுபவம் இருந்தால் புரியும். சொல்லி விளங்க வைக்க முடியாது. 


அது போல இறை அனுபவமும், மெய் ஞானமும் அனுபவ பூர்வமாக அறிய முடியுமே அல்லாமல் படித்து அறிய முடியாது. 


அருணகிரிநாதர் சொல்கிறார்....


"இந்த உலக வாழ்க்கையில் அகப்பட்டு நான் செய்கின்ற செயல்கள் எல்லாம் ஆன்ம முன்னேற்றத்திற்கு உகந்தது அல்ல என்று முருகா நீ என்னை தடுதாட்கொண்டாய். அது மட்டும் அல்ல எனக்கு மெய்பொருளை உணர்வித்தாய். அப்படி குருவின் மூலம் அறிய வேண்டிய ஒன்றை மற்றவர்களுக்கு எப்படி விளங்கிச் சொல்ல முடியும்?" என்று


பாடல் 


செவ்வான்  உருவிற் றிகழ் வேலவன் அன் ( று ) 

ஒவ்வாததென உணர்வித்ததுதான் 

அவ்வாறு அறிவார் அறிகின்றதலால் 

எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவே . 


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/08/blog-post_3.html


(pl click the above link to continue reading)



செவ்வான் = சிவந்த வானம், மாலை நேர வான போல்


உருவிற் = சிவந்த உருவம் 


றிகழ் = கொண்டு திகழ்கின்ற 


வேலவன் = வேலை உடைய முருகப் பெருமான் 


அன் ( று ) = அன்று ஒரு நாள் 

 

ஒவ்வாததென = ஒவ்வாது, சரி வராது என்று 


 உணர்வித்ததுதான் = உணர்வித்தான் 

 

அவ்வாறு = அவ்வாறு குருவால் உணர்விக்கப்பட்டால் 


அறிவார் = அறிந்து கொள்வார் 


 அறிகின்றதலால் = அறிய முடியுமே அல்லாது 

 

எவ்வாறு = வேறு எப்படி 


ஒருவர்க்கு = வேறு ஒருவருக்கு 


இசைவிப்பதுவே = விளங்க வைப்பது ?


இறைவன் அருணகிரிநாதற்கு "உணர்வித்தான்". சொல்லிக் கொடுக்கவில்லை.  உணரும் படி செய்தான். 


எனவேதான் ஆன்ம தேடல் என்பது தனி மனித அனுபவமாகவே இருக்கிறது. ஒருவர் போன வழியில் இன்னொருவர் போக முடியாது. 


திருநாவுக்கரசர் போன வழியில் மணிவாசகர் போகவில்லை.  அவரவர் அனுபவம் தனி. 


அருணகிரிநாதர் மலைக்கிறார். 


தனக்கு முருகன் உணர்வித்தான். அதை மற்றவர்களுக்கு எப்படி சொல்லுவது என்று தெரியாமல் திகைக்கிறார். 


கணிதத்தில் முனைவர் (Dr ) பட்டம் பெற்ற பெரிய அறிஞர் ஒருவர் இருக்கிறார். இரண்டாம் வகுப்பு பிள்ளைக்கு அவர் அறிந்த கணிதத்தை சொல்லிக் கொடுக்க முடியுமா?  அவருக்குத் தெரியும். அந்தக் குழந்தையால் புரிந்து கொள்ள முடியாது. 


அது வளர்ந்து, பக்குவப் பட வேண்டும். 


அதற்கு முன்னால் அது எவ்வளவு விருமினாலும், அதற்கு எவ்வளவு சொன்னாலும் ஒன்றும் புரியாது. 


ஆன்மா பக்குவப் படவேண்டும். இறைவன் அருள் வேண்டும். இரண்டும் நிகழ்ந்தால்தான் அந்த அனுபவம் கிட்டும். 


திருமூலர் அதை வேறு விதமாக சொல்லிக் காட்டுவார். 


தாய், தன் கணவனோடு அனுபவித்த சுகத்தை தன் சிறுவயது மகளுக்கு எப்படி சொல்லி விளங்கப் பண்ண முடியும்? அந்த சிறுபெண் வயதுக்கு வந்து, மனமும், உடலும் பக்குவப்பட்டால் அவளுக்கே அது என்ன என்று புரியும். 


முகத்தில் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்!

அகத்தில் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்!

மகட்குத் தாய்தன் மணாளனோடு ஆடிய

சுகத்தைச் சொல்என்றால் சொல்லுமாறு எங்ஙனே? (திருமந்திரம் 2944)




 [


மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html

மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html

மெய்யியல் - பகுதி 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html

மெய்யியல் - பகுதி 4

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html

மெய்யியல் - பகுதி 5 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html

மெய்யியல் - பகுதி 6 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html

மெய்யியல் - பகுதி 7

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/7.html

நின்று தயங்குவதே 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_14.html

வள்ளி பதம் பணியும் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_20.html

விடுவாய் வினையா வையுமே 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_26.html

மெய்ப் பொருள் பேசியவா

https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post.html

 பரிசென் றொழிவேன் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_7.html

எதிரப் படுவாய்

https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_26.html

மெய்ப் பொருள் பேசியவா

https://interestingtamilpoems.blogspot.com/2022/12/blog-post_11.html

அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_8.html

முருகன் கழல் பெற்று உய்வாய்

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_14.html

என்று அருள்வாய் ? 

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/1.html

பேராசை எனும் பிணியில் பிணிபட்டு

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_24.html

யாமோதிய கல்வியும் பாகம் 1 

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_29.html

 யாமோதிய கல்வியும் பாகம் 2

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_29.html

உதியா மரியா

https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post.html

மிடியென் றொரு பாவி

https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_12.html

உபதேசம் உணர்தியவா 

https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_18.html

கருதா மறவா

https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_23.html

வள்ளிபதம் பணியும்

https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_4.html

அடியைக் குறியா

https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_21.html

அருள் சேரவும் எண்ணுமதோ 

https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_26.html

அலையத் தகுமோ

https://interestingtamilpoems.blogspot.com/2023/04/blog-post.html

நினைந்திலையோ  

https://interestingtamilpoems.blogspot.com/2023/04/blog-post_29.html

மின்னே நிகர்வாழ்வை

https://interestingtamilpoems.blogspot.com/2023/05/blog-post_16.html

யானாகிய என்னை விழுங்கி 

]

2 comments:

  1. அனுபவம்-புதுமை

    ReplyDelete
  2. Beautifully explained....wow

    ReplyDelete