Wednesday, November 21, 2012

சிலப்பதிகாரம் - நம்மை மறந்தாரை


சிலப்பதிகாரம் - நம்மை மறந்தாரை 


அவர்கள் இளம் காதலர்கள். 

அவன் வேலை நிமித்தமாய் வெளியூர் போய் விட்டான். வேலை மும்முரத்தில் அவளை கூப்பிட்டு பேச மறந்து விட்டான். அவளுக்கு ஒரே தவிப்பு...பத்திராமாய் போய் சேர்ந்தானா, சாபிட்டானா, தூங்கினானா, அந்த ஊர் தட்ப வெப்பம் எப்படி இருக்கிறதோ என்று ஆயிரம் கவலை அவளுக்கு....ஒரு வேளை என்னை மறந்தே விட்டானோ ? இனிமேல் என்னை பற்றி நினைக்கவே மாட்டானோ ?

போனா போகட்டுமே...எனக்கு என்ன...அவன் என்னை மறந்தாலும் என்னால் அவனை மறக்க முடியாது...என்று அருகில் உள்ள பறவைகளிடம் சொல்லி கவல்கிறாள்.....

சிலப்பதிகாரத்தில் வரும் அந்த காதலும் கவலையும் சேர்ந்த வரிகள்...

பாடல்

ஆத்திசூடி - ஆறுவது சினம்

ஆத்திசூடி - ஆறுவது சினம் 

ஆத்திசூடி நாம் ஒன்றாம் வகுப்பிலோ இரண்டாம் வகுப்பிலோ படித்தது.

ஔவையார் எழுதியது. பெண் என்பதாலோ என்னவோ, அவள் எழுதிய பாடல்களுக்கு பெரிய சிறப்பு கிடைக்கவில்லை. 

திருவள்ளுவர் ஏழு வார்த்தைகளில் எழுதியதை இவள் இரண்டு அல்லது மூன்று வார்த்தைகளில் எழுதி விடுகிறாள். ஏழு வார்த்தைகளை பார்த்தே நாம் பிரமித்து போய் இருக்கிறோம். இரண்டு வார்த்தைகளை என்னவென்று சொல்லுவது ?

ஆத்திசூடியில் இருந்து சில விஷயங்களைப் பார்ப்போம்.

ஆறுவது சினம்.

சினம் என்றால் அது ஆறுவது. மணிக் கணக்கில், நாள் கணக்கில், மாதக் கணக்கில் இருக்காது. ஆறிவிடும். ஆறுவது தான் சினம்.

சில உணர்ச்சிகள் ஆறாது. பொறாமை, துவேஷம், காதல், காமம் போன்ற உணர்ச்சிகள் ஆறாது. மேலும் மேலும் கொழுந்து விட்டு எரியும்.

சரி. ஆறுவது சினம் ... அதனால் என்ன ?

பாலோ காபியோ சூடாக இருந்தால் என்ன செய்வோம் ? அதை இன்னொரு கிளாசிலோ பாத்திரத்திலோ மாற்றி மாற்றி ஊத்துவோம். அதை ஆத்துவோம் அல்லவா ? அது போல், சினம் வந்தால் இடத்தை மாற்றினால் போதும். சினம் மாறி விடும். 

யார் மீதாவது கோவம் வந்தால், முதலில் அந்த இடத்தை விட்டு நீங்கி விடுங்கள். கோவம் ஆறும். 

இரண்டாவது, பால் பாத்திரம் சூடாக இருந்தால், அதை குளிர்ந்த நீரில் உள்ள பாத்திரத்தில் வைத்தால் அதன் சூடு குறைந்து விடும். அது போல், கோவம் வரும் போது இடத்தை மாற்றி அமைதியான சூழ்நிலைக்கு சென்று விட்டால், கோவம் ஆறி விடும். 

கோபமாய் இருக்கும் போது பேசாதீர்கள், சண்டை போடாதீர்கள். அமைதியாய் இருங்கள்...ஏனென்றால் ...ஆறுவது சினம்....



Tuesday, November 20, 2012

அபிராமி அந்தாதி - உதிக்கின்றதே


அபிராமி அந்தாதி - உதிக்கின்றதே 

அந்தாதி என்றால் ஒரு பாடலின் இறுதி வார்த்தையயை  கொண்டு அடுத்த பாடலின் முதல் வார்த்தை தொடங்க வேண்டும். தமிழில் நிறைய அந்தாதிகள் உண்டு. அபிராமி அந்தாதியின் சிறப்பு முதல் பாடலின் முதல் வார்த்தையும் நூறாவது பாடலின் கடைசி வார்த்தையும் ஒன்றாக இருப்பது. 

உதிக்கின்ற செங்கதிர் என்று முதல் பாடல் ஆரம்பிக்கிறது. 

நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே என்று நூறாவது பாடல் முடிகிறது.

பூ சரத்தை தொடுத்துக்கொண்டே போய் கடைசியில் இறுதிக் கண்ணியையை முதல் வார்த்தையோடு சேர்த்து அந்த பூ சரத்தை மாலையாக செய்து விட்டார் பட்டர். 

முதல் பாடல் 

உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம், உணர்வுடையோர் 
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது, மலர்க்கமலை 
துதிக்கின்ற மின் கொடி, மென் கடிக் குங்கும தோயம்-என்ன
விதிக்கின்ற மேனி அபிராமி, எந்தன் விழுத் துணையே:

நூறாவது பாடல்

குழையைத் தழுவிய கொன்றையந் தார் கமழ் கொங்கைவல்லி 
கழையைப் பொருத திருநெடுந் தோளும், கருப்பு வில்லும் 
விழையப் பொரு திறல் வேரியம் பாணமும் வெண் நகையும் 
உழையைப் பொருகண்ணும் நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே!






இராமாயணம் - அழகிய எமன்


இராமாயணம் - அழகிய எமன் 


எமன் எப்படி இருப்பான் ? கருப்பா, குண்டா, சிவந்த கண்கள், பெரிய பெரிய பற்கள், கலைந்த தலை, கையில் பாசக் கயறு, இன்னொரு கையில் கதை என்று பார்க்கவே பயங்கரமாக இருப்பான் அல்லவா ?

அப்படித்தான் நானும் நினைத்து கொண்டிருந்தேன்...ஆனால் அப்படி அல்ல, எமன் ரொம்ப அழகாக இருக்கிறான்....சொல்லப் போனால் எமன் ஆண் கூட அல்ல ஒரு பெண்...அழகிய மேகலை உடுத்துக்கொண்டு, தேர் தட்டு போன்ற இடுப்பு, கூறிய வாள் போன்ற நெடிய கண்கள் இரண்டு, ஒளி வீசும் இரண்டு மார்பகங்கள், அடக்கமான ஒரு புன்னகை என்று இத்தனயும் கொண்டு வந்தது அந்த கூற்றம். 

ஆமா, அந்த கூற்றுவனுக்கு இத்தனையும் வேண்டுமா...இதுல ஒண்ணு இருந்தா கூட போதுமே , உயிரை எடுக்க ....

என்று சீதையையை பார்த்து விட்டு வந்த இராமன் காதல் வேதனையில் புலம்புகிறான்....

பாடல் 

Friday, November 16, 2012

அபிராமி அந்தாதி - கரை காணா இன்பம்


அபிராமி அந்தாதி - கரை காணா இன்பம்


அவள் இன்னைக்கு வருவாளா ? வர்றேன்னு சொன்னாளே ? ஒரு வேளை அது நாளைக்கோ ? நான் தான் சரியாக கேட்கலையோ ? வர்றேன்னு சொன்னா வந்துருவா ? இல்ல வர்ற வழியில என்ன பிரச்சனையோ பாவம்....

அது யாரு அவ தான ? அவளை மாதிரி தான் இருக்கு. 

அந்த உருவம், அந்த நடை, அவள் தான்னு நினைக்கிறேன். ஆமா, அவளே தான்....அப்பாட, ஒரு வழியா வந்துட்டாள்...அவ கிட்ட வர வர இதய துடிப்பு ஏறுகிறது...இன்னும் கிட்ட வந்துட்டாள்...லேசா வேர்க்குது...நிமிந்து பார்க்கிறாள்...மனதுக்குள் ஆளுயர அலை...அவள் கிட்ட வர வர மனதுக்கு சந்தோஷ ஊற்று குமிழியிட்டு கிளம்புகிறது...அருகில் வந்து விட்டாள்...தொடும் தூரம் தான்...அணை உடைந்து வெள்ளம் பெருக்கெடுத்து வந்த மாதிரி ஒரே மகிழ்ச்சி மனதுக்குள்ளே...எங்கு பார்த்தாலும் வெள்ளம்...கரை காணா முடியாத வெள்ளப் பெருக்கு ..தத்தளிக்கிறேன் அந்த சந்தோஷ சாகரத்தில்...

மிகுந்த சந்தோஷம் வரும் போது அறிவு விடை வாங்கிக் கொண்டு போய் விடும்...ஆனால் அவளைப் பார்க்கும் போது உண்டாகும் அளவு கடந்த மகிழ்ச்சியிலும் அறிவு விடை பெற்று போகவில்லை...

அவள் அறிவையும் ஆனந்தத்தையும் ஒன்றே தருகிறாள்....


பாடல் 

ராமாயணம் - அறிவின் பயன்


ராமாயணம் - அறிவின் பயன்


சீதை உப்பரிகையில் இருந்து இராமனைப் பார்த்தாள். பார்த்தவுடன் காதல் கொண்டாள். பின்னால் சிவ தனுசை இராமன் வளைத்தான். வில்லை வளைத்தவனுக்கு மாலை இட வருகிறாள் சீதை. 

வில்லை வளைத்தவன் அவள் பார்த்த அதே வாலிபன் தானா என்று அவளுக்குத் தெரியாது. 

அவள் மனம் பட பட வென்று அடித்துக் கொள்கிறது. அவனாய் இருக்குமோ ? அவனாய் இருக்கணுமே ...அவனாய் இல்லாட்டி என்ன செய்வது என்று குழம்புகிறாள். 

திருமண மண்டபம் வருகிறாள். இராமனைப் பார்க்கிறாள். மனதில் ஒரு நிம்மதி. அப்பாட...இவன் தான் அவன் என்று அமைதி கொள்கிறாள்....

இது என்ன பெரிய விஷயம் ?

அறிவுள்ளவர்கள் இறைவனை தேடுவார்கள். அவனை அறிந்து கொள்ள முயல்வார்கள். அவன் திருவடி அடைய முயற்சி செய்வார்கள். நிறைய புத்தகம் படிப்பார்கள்...பெரியவர்கள் சொல்வதை கேட்பார்கள்....இறைவன் இதுவா, இறைவன் அதுவா...இதுவாக இருக்குமா ? அதுவாக இருக்குமா என்று கிடந்து குழம்புவார்கள். இறைவன் என்று ஒருவன் இருந்தால் ஏன் இவ்வளவு துன்பமும் துயரமும் என்று குழம்பி கிடப்பார்கள். 

முடிவில் அவனை அவர்கள் அறியாலாம். அப்படி அவர்கள் கடைசியில் இறைவனை அறியும்போது அவர்கள் மனதில் எப்படி ஒரு நிம்மதியும், அமைதியும், மகிழ்ச்சியும் பிறக்குமோ அது போல் கடைசியில் இராமனை கண்ட சீதைக்கு மனதில் நிம்மதியும் மகிழ்ச்சியும் பிறந்தது...

எப்படி  உதாரணம் ? 

அரை குறை அறிவு நம்மை குழப்புகிறது. இதுவா, அதுவா, இவனா, அவனா என்று மனம் பேதலிக்கிறது. அறிவு முதிர்ச்சி அடையும் போது இறைவனை அறிய முடிகிறது. அப்படி அறிவின் முதிர்ச்சி அடைந்தவர்களின் மன நிலையை ஒத்திருந்தது சீதையின் மன நிலை.

பாடல் 

Thursday, November 15, 2012

இராமாயணம் - நச்சுப் பொய்கை மீன்


இராமாயணம் - நச்சுப் பொய்கை மீன் 


மீன் வாழ்வது நீரில். நீரை விட்டு வெளியே வந்தால் அது இறந்து போகும். அப்படி அது வாழும் அந்த நீரில் நஞ்சைக் கலந்தால், அந்த மீன் என்ன செய்யும் ? தண்ணீரை விட்டு குதித்து வெளியேயும் செல்ல முடியாது, தண்ணீரிலும் இருக்க முடியாது ... அப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலை. 

அது போல் இருந்தது மாரீசனுக்கு. 

இராவணன் , மாரீசனை பொய் மான் வடிவில் போ என்றான். போனால் இராமன் கையால் சாவு உறுதி. போகா விட்டால் இராவணன் கையால் சாவு உறுதி. நச்சு பொய்கை மீன் போல் ஆனான் என்றான் கம்பன். என்ன ஒரு கற்பனை. கற்பனையில், கம்பனை மிஞ்ச ஆள் கிடையாது. 

பாடல்