Showing posts with label மன்மதன். Show all posts
Showing posts with label மன்மதன். Show all posts

Wednesday, May 30, 2012

கம்ப இராமாயணம் - இராவணனை கொன்றது இராமன் அல்ல!


கம்ப இராமாயணம் - இராவணனை கொன்றது இராமன் அல்ல!


உலகம் எல்லாம் நினைத்து கொண்டு இருக்கிறது இராவணனை கொன்றது இராமன் என்று.

மண்டோதரி சொல்கிறாள், இராமன் அல்ல இராவணனை கொன்றது, மாரன் (மன்மதன்) என்று.

நாள் எல்லாம் அந்த மன்மதன் இராமன் மேல் மலர் கணை தொடுக்காமல் இருந்திருந்தால், இராவணன் சீதையின் மேல் இவ்வளவு காதல் கொண்டு இருக்க மாட்டான், அவனுக்கும் இந்த அழிவு வந்து இருக்காது என்கிறாள். 
மன்மதனின் கணையும், தேவர்களின் வரமும் இராவணனை கொன்றது என்கிறாள்.


'ஆர் அனார்உலகு இயற்கை அறிதக்கார்அவை ஏழும் ஏழும் அஞ்சும்
வீரனார் உடல் துறந்துவிண் புக்கார்கண் புக்க வேழ வில்லால்,
நார நாள் மலர்க் கணையால்நாள் எல்லாம் தோள் எல்லாம்நைய எய்யும்
மாரனார் தனி இலக்கை மனித்தனார் அழித்தனரேவரத்தினாலே!

ஆர் அனார், = யார் அது

உலகு இயற்கை = இந்த உலகத்தின் இயற்கையை

அறிதக்கார்? = அறிய தக்கவர் (யாரும் இல்லை)

அவை ஏழும் ஏழும் அஞ்சும் = அந்த ஈரேழு உலகும் அஞ்சும்

வீரனார் = வீரனான இராவணன்

உடல் துறந்து, = உடலை துறந்து, விட்டு விட்டு

விண் புக்கார் = வானகம் போனான்

கண் புக்க = கணுக்கள் உள்ள (கரும்பு)

வேழ வில்லால், = கரும்பு வில்லால்

நார நாள் மலர்க் கணையால் = மணம் வீசும் மலர்க் கணையால்

நாள் எல்லாம் = எப்போதும்

தோள் எல்லாம் நைய = தோள் வலிக்க வலிக்க

எய்யும் மாரனார் = எய்யும் மன்மதன்

தனி இலக்கை = இராவணன் மார்பில் அம்பு எய்யும் தைரியம் மன்மதன் ஒருவனுக்கு மட்டும் தான் இருந்தது. "தனி இலக்கு"
மனித்தனார் அழித்தனரே, = அந்த மார்பை, அந்த இலக்கை மனிதன் அழித்து விட்டானே

வரத்தினாலே = வரத்தினாலே (ஆற்றலாலே என்று சொல்லவில்லை.)

(Appeal: If you like this blog, please click g+1 button below to express your liking)

Sunday, May 27, 2012

கம்ப இராமாயணம் - ஜொள்ளு விடும் பெண்கள்

கம்ப இராமாயணம் - ஜொள்ளு விடும் பெண்கள்



இராமன் மிதிலை வீதியில் நடந்து வருகிறான்.


அங்குள்ள பெண்கள் எல்லாம் அவன் அழகில் மயங்கி அவம் மேல் மையல் கொள்கின்றனர்


  
மன்மதனும் தன் மலர் அம்புகளை எய்த வண்ணம் இருக்கிறான்.

அம்பு எய்து எய்து அவன் அம்புராத் துணியில் உள்ள அம்பு எல்லாம் தீர்ந்து விட்டது 

பாவம் அவனும் தான் என்ன செய்வான்.அம்பு இல்லாமல் நிராயுத பாணியாய் நிற்கிறான் வேற என்ன செய்வது என்று

தெரியாமல் கையை அவனுடைய வாளின் மேல் வைத்தானாம்....




கம்பரின் அந்த அருமையான கவிதை..