Showing posts with label Kandar Anupoodhi. Show all posts
Showing posts with label Kandar Anupoodhi. Show all posts

Monday, March 18, 2024

கந்தர் அனுபூதி - ஆறாறையும் நீத்து

 கந்தர் அனுபூதி - ஆறாறையும் நீத்து

நம் உடம்பிலே சக்தி ஒடுங்கி இருக்கிறது. அது எங்கே ஒடுங்கி இருக்கிறது என்றால் மலத் துவாரத்துகும், பிறப்பு உறுப்புக்கும் இடையில் உள்ள இடத்தில் ஒடுங்கி கிடக்கிறது என்கிறார்கள். 

அந்த சக்தியை எழுப்பி மேலே கொண்டு வர முடியும். அது ஒவ்வொரு படியாக மேலே ஏறி வரும். அந்த ஒவ்வொரு படியும் ஒரு சக்கரம் என்கிறார்கள். மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆங்க்யா என்ற ஆறு சக்கரங்களின் வழியாக மேலே ஏறி, தலைக்கு மேல் சஹாஸ்ரார் என்ற இடத்தை சென்று அடையும் என்கிறார்கள். 

இந்த சக்தி ஒவ்வொரு இடத்திலும் ஏறி நிற்கும் போது, பல நிகழ்வுகள் ஏற்படும் என்கிறார்கள். 

உதாரணமாக கழுத்தில் வந்து நின்றால் அவர்கள் சொல்வதை உலகம் கேட்டு நடக்கும், என்கிறார்கள். ஏன், சிலர் சொல்வதை உலகம் கேட்கிறது என்றால் காரணம் அவர்களின் சக்தி அங்கே நிற்கிறது. 

இந்த சக்கரங்கள் உண்மையா? அப்படியும் நடக்குமா? மற்ற மதங்களில் இது பற்றி எதுவும் சொல்லவில்லையே என்ற கேள்விகள் நிற்கின்றன. நிறைய ஆராய வேண்டி இருக்கிறது. 

கரங்குவிவார் உண்மகிழுங் கோன்கழல்கள் வெல்க

சிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க

என்பார் மணிவாசகர். 

குண்டலினி என்ற அந்த சக்தி இதயத்துக்கு வருவதும், தலைக்கு மேல் வருவதையும் இது குறிப்பதாக சில உரை ஆசிரியர்கள் கூறுகிறார்கள். 

இங்கே, அருணகிரியார் பாடுகிறார் 

"இந்த குண்டலினி சக்தி ஆறு நிலைகளைத் தாண்டி சஹாஸ்ரார் என்ற அந்த நிலைக்கு செல்லும் பேறு எனக்குக் கிடைக்குமா? கோபம் கொண்டு வரும் சூரனை வென்று, தேவர்கள் மனம் குளிரும்படி தேவ லோகத்தை அவர்களுக்கு கொடுத்தவனே "

என்று. 

பாடல்  

ஆறாறையு நீத் ததன் மேனிலையைப் 

பேறாவடி யேன் பெறு மாறுளதோ 

சீறா வரு சூர் சிதைவித் திமையோர் 

கூறா வுலகங் குளிர் வித்தவனே 

சீர் பிரித்த பின் 

ஆறு ஆறையும் நீத்து அதன் மேல் நிலையை  

பெறாத அடியேன் பெறுமாறு உளதோ  

சீறா வரும்  சூர் சிதைவித்து இமையோர்  

கூறா உலகம்  குளிர் வித்தவனே 

பொருள் 

ஆறு = வழி, பாதை 

ஆறையும் = ஆறு நிலைகள் (மூலாதாரம் தொடங்கி ஆங்க்யா வரை) 

நீத்து = விடுத்து 

அதன் மேல் நிலையை  = அதற்கு மேல் உள்ள நிலையான சஹாஸ்ரார் 

பெறாத அடியேன் = இது வரை பெறாத அடியேன் 

பெறுமாறு உளதோ = இனி அடையும் வழி உள்ளாதா? 

சீறா வரும் = சீறி வரும் 

 சூர்= சூரனை 

சிதைவித்து = வென்று 

இமையோர் =தேவர் 

கூறா உலகம் = அவர்களுக்கு அளிக்கப்பட்ட உலகத்தை அவர்களுக்கு அளித்து 

குளிர் வித்தவனே  = அவர்களை குளிர்வித்தவனே 

"கூறா உலகம்" - செய்யா எனும் வாய்பாடு. கூறாக பிளந்து கொடுக்கப்பட்ட உலகம். தேவர்களுக்கு என்று கொடுக்கப்பட்ட தேவலோகத்தை அசுரர்கள் எடுத்துக் கொண்டார்கள். அதை மீட்டு தேவர்கள் மனம் குளிரும்படி செய்தவனே.

"ஆறாறையும்" என்பதை 6 x 6 = 36 என்று கொண்டு, முப்பத்தி ஆறு தத்துவங்களையும் கடந்து மேலே செல்வது என்றும் பொருள் சொல்லுவார்கள். 

Tuesday, March 12, 2024

கந்தர் அநுபூதி - தாயும், தந்தையும்

கந்தர் அநுபூதி - தாயும், தந்தையும் 

பக்திப் பாடல்களில் பொதுவாக பாடப்படும் கடவுளைப் பற்றிய வர்ணனைகள் நிறைந்து இருக்கும். பாடும் கடவுளின் வாகனம், உடல் வண்ணம், அவர் செய்த லீலைகள், அருள் பாலித்த விதங்கள், தீயவர்களை தண்டித்த விதம் என்று இருக்கும். இந்த குணாதிசயங்கள் மீண்டும் மீண்டும் வரும். 

அவற்றை ஒரு முறை வாசித்து விட்டு, பாட்டில் உள்ள மற்றைய செய்திகள்/கருத்துகளுக்குள் நாம் போகலாம். 

அருணகிரியார் சொல்கிறார் ,

"என் தாய் நீ. எனக்கு அருள் செய்யும் தந்தை நீ. என் மனதில் உள்ள சலனங்களை எல்லாம் போக்கி, என்னை ஆட்கொள்"

என்று. 

பாடல் 

எந்தாயு மெனக் கருள் தந்தையு நீ 

சிந்தா குலமானவை தீர்த்தெனையாள் 

கந்தா கதிர் வேலவனே உமையாள் 

மைந்தா குமரா மறை நாயகனே . 

சீர் பிரித்த பின் 

என் தாயும், எனக்கு அருள் தந்தையும் நீ 
 
சிந்தா குலமானவை தீர்த்து எனை ஆள்  

கந்தா கதிர் வேலவனே உமையாள் 

மைந்தா குமரா மறை நாயகனே . 

பொருள் 

என் தாயும் = என்னுடைய தாயும் 

எனக்கு அருள் தந்தையும் நீ = எனக்கு அருள் செய்யும் தந்தையும் நீயே 
 
சிந்தா குலமானவை = என் சிந்தையுள் ஏற்படும் சலனங்களை 

தீர்த்து = முடித்து வைத்து 

எனை ஆள் = என்னை ஆட்கொள்வாய் 
  
கந்தா = கந்தா 

கதிர் வேலவனே = கதிர் வீசும் வேலை உடையவனே 

உமையாள் மைந்தா = உமா தேவியின் மைந்தனே 

குமரா = குமரனே 

மறை நாயகனே = வேதங்களின் தலைவனே 

சிந்தையில் உள்ள சலனங்கள் நின்றால்தான் இறைவனால் ஆட்கொள்ளப்பட முடியும். அந்தச் சலனங்களை நாமே நிறுத்த முடியுமா?  அருணகிரியார் சொல்கிறார், "முருகா நீயே அந்தச் சலனங்களை நிறுத்தி என்னை ஆட்கொள் " என்று. இறைவனிடமே அந்தப் பொறுப்பையும் விட்டுவிடுகிறார். பூரண சரணாகதி. 

Wednesday, March 6, 2024

கந்தர் அநுபூதி - கரவாகிய கல்வி

கந்தர் அநுபூதி - கரவாகிய கல்வி 

நிறைய பேர் படிப்பார்கள். தாங்கள் படித்து அறிந்ததை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில்லை.. காரணம், எங்கே அவனுக்கும் தெரிந்து விட்டால், நம் மதிப்பு குறைந்து விடுமோ என்ற அச்சம் காரணமாக இருக்கலாம். அல்லது, மற்றவன் முன்னேறக் கூடாது என்ற உயர்ந்த எண்ணம் காரணமாக இருக்கலாம். 

அருணகிரியார் கூறுகிறார் 

"மறைத்து வைக்கும் கல்வியை கொண்டவர்களின் வாசலில் சென்று அவர்களிடம் உதவி கேட்கும் படி வைக்காமல் உயர்ந்த மெய்ப் பொருளை நீ எனக்கு அருள வேண்டும். தலைவா, இளையவனே, வஜ்ராயுதம் என்ற படையைக் கொண்டவனே, சிவ யோகத்தை பக்தர்களுக்குத் தருபவனே "

என்று. 

பாடல் 

கரவாகிய கல்வியுளார் கடை சென்று 

இரவா வகை மெய்ப் பொருளீகுவையோ 

குரவா குமரா குலிசாயுதகுஞ் 

சரவா சிவ யோக தயாபரனே 

பொருள் 

கரவாகிய = கரத்தல் என்றால் மறைத்தல். மறைத்து வைக்கும் 

 கல்வியுளார் = கல்வியை உடையவர்கள் 

கடை சென்று = வாசலில் சென்று 

இரவா வகை  = பிச்சை எடுக்காமல் இருக்கும்  படி 

மெய்ப் பொருளீகுவையோ  = மெய்யான பொருளை எனக்குத் தந்து அருள் புரிவாயா 

குரவா = குரவன் என்ற சொல்லுக்கு பல அர்த்தங்கள் உண்டு என்றாலும், தலைவன் என்ற அர்த்தம் இங்கு பொருந்தும். 

குமரா = இளையவனே 

குலிசாயுத = குலி + ஆயுதம் = வஜ்ரப் படையை உடையவனே 

குஞ்சரவா = குஞ்சரம் என்றால் யானை. தெய்வயானைக்கு தலைவனே 

சிவ யோக தயாபரனே = சிவ யோகத்தை பக்தர்களுக்கு தருபவனே 

சாதாரண மனிதர்கள் தாங்கள் கற்ற கல்வியை எதற்கு மற்றவர்களுக்கு தர வேண்டும் என்று மறைத்து வைத்துக் கொள்வார்கள். முருகன், சிவ யோக பலன்களையே பக்தர்களுக்குத் தருபவன். அவனிடமே நேரே சென்று கேட்டு பெற்றுக் கொள்ளலாம். 

"இரவா வகை மெய் பொருள் ஈகுவையோ" என்று கொண்டு, கரத்தல் தொழிலை செய்பவர்கள் மெய் பொருளை கற்றுத் தராமல் மற்றவற்றை கற்றுத் தருவார்கள், அந்த மாதிரி ஆட்களிடம் போய் நிற்காமல், நீயே எனக்கு மெய்ப் பொருளைத் தா என்கிறார். 

"கரவா வகை கல்வி"..நாம் படிக்கும் அனைத்தும் நமக்கு மெய் பொருளை உணர்த்துவதில்லை. அதை மறைத்து, வேறு எதையெதையோ நமக்குத் தரும். அந்த மாதிரி மெய்ப் பொருளை மறைக்கும் கல்வியை விட்டு விட்டு மெய்ப் பொருளை அறியும் கல்வியை எனக்குத் தா என்று வேண்டுகிறார் என்றும் கொள்ளலாம். 

வள்ளுவர் கூறுவார், 

கற்றதனால் ஆய பயன் என் கொல் வாலறிவன் நற்றாழ் தொழார் எனின் 

கல்வி, மெய் பொருளைத் தர வேண்டும். 

Friday, February 23, 2024

கந்தர் அநுபூதி - கமழும் கழல்

கந்தர் அநுபூதி - கமழும் கழல் 

கிடைக்கவே கிடைக்காது, கிடைப்பது ரொம்பக் கடினம், என்று நாம் ஒன்றை நினைத்துக் கொண்டிருப்போம். அது நாம் எதிர்பாராத நேரத்தில் கிடைத்து விட்டால் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்?  

இது எப்படி நமக்கு கிடைத்தது என்று வியந்து போவோம் அல்லவா?  இது உண்மைதானா, என்ற சந்தேகம் ஒருபுறம் வரும். இன்னொருபுறம் மிகுந்த மகிழ்ச்சி. 

அது போல அருணகிரிநாதர் இருக்கிறார். 

முருகனின் திருவடியில் சரணம் அடையும் பேறு தனக்கு எப்படி கிடைத்தது என்று விளங்காமல் தவிக்கிறார். அதை நான் எப்படிச் சொல்லுவேன் என்று திகைக்கிறார். 

அப்படி என்ன முருகன் திருவடியில் சிறப்பு?

அவரே சொல்கிறார் 

"வீடு பேற்றைத் தரும் திருவடி. தேவர்களின் தலை மேல் இருக்கும் திருவடி. வேதத்தில் படிந்து கிடக்கும் திருவடி. வள்ளியைத் தேடி தினைப்புனம் உள்ள காட்டில் பதிந்த திருவடி. இங்கெல்லாம் அவன் திருவடி பட்டு, அவை எல்லாம் மணம் வீசுகிறதாம்."

பாடல் 

சாடும் தனிவேல் முருகன் சரணம் 

சூடும் படிதந்தது சொல்லு மதோ 

வீடும் சுரர்மாமுடி வேதமும் வெங் 

காடும் புனமும் கமழுங் கழலே . 

பொருள் 

சாடும் = போர் புரியும் 

தனி = தனித்துவமான 

வேல் = வேல் 

முருகன் = முருகன் 

சரணம்  = சரண் அடையும்படி 

சூடும் படிதந்தது = அந்தத் திருவடிகளைத் தலையில் சூடிக் கொள்ளத் தந்தது 

சொல்லு மதோ  = எப்படி என்று சொல்ல முடியுமா? 

வீடும் = சுவர்க்கத்திலும் 

சுரர்மாமுடி = தேவர்களின் தலையிலும் 

வேதமும் = வேதத்திலும் 

வெங் காடும் = வெம்மையான காட்டிலும் 

புனமும் = அந்தக் காட்டில் உள்ள திணை புனம் உள்ள இடத்திலும் 

 கமழுங் கழலே = மணம் வீசும் திருவடிகளே 

Thursday, October 12, 2023

கந்தரனுபூதி- என்று விடப் பெறுவேன்?

கந்தரனுபூதி- என்று விடப் பெறுவேன்?

பள்ளியில் படிக்கும் போது முதலாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு என்று படித்து மேலே போவோம். எனக்கு நான்காம் வகுப்பு ரொம்ப பிடித்து இருக்கிறது. எனவே, நான் நான்காம் வகுப்பை விட்டு மேலே வர மாட்டேன் என்று யாராவது சொல்வார்களா?

அலுவலகத்தில் வேலையில் சேரும் போது ஒரு ஆரம்ப நிலையில் சேர்வோம். பின் நன்றாக வேலை செய்து மேலும் மேலும் பெரிய பெரிய பதவிகளை அடைவோம். நடுவில் ஏதோ ஒரு பதவியில் இருந்து கொண்டு, இது ரொம்ப பிடித்து இருக்கிறது. இனிமேல் எனக்கு ஒரு பதவி உயர்வும் வேண்டாம். இங்கேயே இருந்து விடுகிறேன் என்று யாராவது சொல்வார்களா?  

ஆனால், வாழ்வில், பிறந்தோம், வளர்ந்தோம், படித்தோம், வேலையில் சேர்ந்தோம், திருமணம் செய்தோம், பிள்ளைகள் பெற்றோம்..அவற்றை வளர்த்தோம்...வளர்த்தோம்..வளர்ந்தன...என்று ஒரு இடத்தில் தங்கி விடுகிறோம். அடுத்து என்ன?  

இல்லறம் தான் இறுதியா? அதற்கு மேல் ஒன்றும் இல்லையா?

அதற்கு மேல் போகத் தெரியவில்லையா அல்லது போக விருப்பம் இல்லையா?

சில பேருக்கு மேலே போக விருப்பம் இருக்கும், ஆனால் எப்படி போவது, எங்கே போவது என்று தெரியாது. குழப்பமாக இருக்கும். 

சிலருக்கு, நாலாவது வகுப்பு பிடித்து போய் விடுவதைப் போல, இல்லறமே இறுதி என்று இருந்து விடுகிறார்கள். 

இதில் இருந்து விடுபட்டு மேலே செல்வது எப்படி?

பாடல் 

சிந்தா குல இல் லொடு செல்வ மெனும் 

விந்தா டவி யென்று விடப் பெறுவேன் 

மந்தா கினி தந்தி வரோதயனே 

கந்தா முருகா கரு ணாகரனே . 

பொருள்

(please click the above link to continue reading)

சிந்தா குல = சிந்தை + ஆகுலம் = ஆகுலம் என்றால் வருத்தம், குழப்பம், துன்பம் என்று பொருள். சிந்தனை + ஆகுலம் என்றால் மனதுக்கு வருத்தம், குழப்பம் தரும் என்று பொருள்   

இல் லொடு = இல்லறத்தோடு 

செல்வ மெனும் = செல்வம் என்ற 

விந்தா டவி = விந்தை + அடவி =  அடவி என்றால் காடு. விந்தா அடவி என்றால் விந்தையான காடு 

யென்று = என்று 

விடப் பெறுவேன் = விடுவேன் 

மந்தா கினி = கங்கை 

 தந்தி = தந்த 

வரோதயனே = வரம் + உதயன் = தேவர்கள் பெற்ற வரத்தினால் உதயம் ஆனவனே 

கந்தா = கந்தா 

முருகா = முருகா 

கரு ணாகரனே = கருணையே வடிவானவனே 

இந்த இல்லறம் இருக்கிறதே அது சிந்தையை மயக்கும். ஒரு நாள் இனிமையாக இருப்பது போலத் தெரியும். இன்னொரு நாள் என்னடா இது என்று வெறுப்பு வரும். முன்னும் போக விடாது. பின்னும் போக விடாது. செக்கு மாடு சுத்தி சுத்தி வர வேண்டியதுதான். 

அதை ஒரு விந்தையான காடு என்கிறார். 

ஏன் விந்தை என்றால், காட்டுக்குள் போனவன், வெளியே வர வழி தெரியாமல் தவிப்பான். அவன் தான் போனான். போகும் போது காடு, மலை, மரம், அருவி என்று பார்த்துக் கொண்டே போனவன் திரும்ப வழி தெரியாமல் சிக்கிக் கொண்டு தவிப்பான். அது போல இந்த இல்லறமும். உள்ளே நுழையத் தெரியும். வெளியே வரத் தெரியாது. 

இன்னொன்று, காட்டுக்குள் போவது, அங்கேயே தங்கி விட அல்ல. ஆனால், சிலர் அடடா அருவி எவ்வளவு அழகாக இருக்கிறது, குயில் கூவுகிறது, மயில் ஆடுகிறது என்று அதன் அழகில் மயங்கி அங்கேயே இருந்து விடுகிறார்கள். பின்னால் புலி, சிங்கம் வரும், பாம்பு வரும், கள்ளர்கள் வருவார்கள், பல துன்பங்கள் வரும். அது தெரியாமல் சிக்கிக் கொண்டு தவிப்பார்கள். 

எனவே, ஆபத்து நிறைந்தது தெரியாமல் அழகால் மயக்கும் காடு வினோதமான ஒன்று என்கிறார். இல்லறமும் அது போலத்தான். 

நம் வாழ்க்கை முறையை வகுத்த நம் முன்னவர்கள்

அறம், பொருள், இன்பம், வீடு என்று பாதை போட்டார்கள். 

அறம் என்பது இல்லறம், துறவறம் என்று இரண்டு பெரும் பிரிவுகளாக பிரியும். 

இரண்டு அறத்துக்கும் பொருள் வேண்டும். வெறும் பொருளும், அறமும் இருந்தால் போதாது, ஆணும் பெண்ணும் கூடும் இன்பம் வேண்டும். 

ஆனால், இவை எல்லாம் முடிவு அல்ல. முடிவு என்பது வீடு. அதை அடைய இவை எல்லாம் படிக்கட்டுகள். மாடிக்கு போகாமல் படிக்கட்டிலேயே உட்கார்ந்து இருக்கலாமா?

மேலே போக வேண்டாமா?

அதெல்லாம் இருக்கட்டும், இப்ப சுட சுட ஒரு strong காப்பி கொஞ்சம் சர்க்கரை தூக்கலா போட்டு குடிச்சா எப்படி இருக்கும்....:)

Saturday, September 2, 2023

கந்தரநுபூதி - பதறிக் கதறி

 கந்தரநுபூதி - பதறிக்  கதறி 

எவ்வளவோ படிக்கிறோம். யார் சொல்வதை எல்லாம் கேட்கிறோம். கொஞ்சம் மண்டையில் ஏறுகிறது. கொஞ்சம் புரிகிறது. கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது. இதில் நிறைய மறந்து போகிறது. 

படிப்பவற்றில் ஆளாளுக்கு ஒன்று சொல்கிறார்கள். எது சரி, எது தவறு என்று எப்படி கண்டுபிடிப்பது. நான் படிக்கும் புத்தகங்கள், நான் வணங்கும் தெய்வங்கள், நான் கொண்ட தத்துவங்கள் மட்டும்தான் சரி. மற்றது எல்லாம் தவறு என்று எப்படி சொல்ல முடியும். அப்படித்தானே மற்றவர்களும் நினைக்கிறார்கள். யார் நினைப்பது சரி? 

அல்லது, யார் என்ன சொன்னால் என்ன, நான் குதிரைக்கு கடிவாளம் போட்டது போல, ஒரே பாதையில் செல்வேன். அர்த்தம் தெரிகிறதோ இல்லையோ, ஒரு நாளைக்கு இரண்டுதரம் எல்லா பாடல்களையும் ஓதுவேன் என்று இருக்கலாம் என்றால் அறிவு விட மாட்டேன் என்கிறது. அங்கே என்ன சொல்லி இருக்கிறது, அது எப்படி சரி ஆகும், இது தவறு இல்லையா என்று கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கிறது. 

இறுதியில், குழப்பம் மட்டுமே மிஞ்சுகிறது. 

அது மட்டும் அல்ல, எது சரி, எது தவறு, யார் சொல்வது உயர்ந்தது, என்று வாதப் பிரதிவாதங்கள், சண்டை சச்சரவுகள் வேறு. 

இது ஆன்மீகத்தில் மட்டும் அல்ல. அறிவு சார்ந்த எல்லா துறைகளிலும் இந்த குழப்பங்கள் உண்டு. படிப்பு மேலும் மேலும் குழப்பத்தை கொண்டு வந்து சேர்க்கிறது. 

சரி, படிக்காமல் விட்டு விடலாம் என்றால் அதுவும் முடியவில்லை. 

முட்டாளாக இருக்க முடியுமா? 

குழப்பம் மட்டும் இருந்தால் பரவாயில்லை. 

எவ்வளவு நேரம் வீணாகி விட்டது. ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் என்று வைத்துக் கொண்டால் , 80 வருடம் வாழ்ந்தோம் என்றால்,  கிட்டத்தட்ட 4 முழு வருடங்கள் இதில் செலவழித்து விடுகிறோம். கண்ட பலன் என்ன? 

நேரம் விலை மதிக்க முடியாதது என்று நினைப்பவர்களுக்கு ஒரு பதற்றம் வரும். ஐயோ, இப்படி வீணாகக் கழிகிறதே என்று. வேறு வேலை வெட்டி ஒன்றும் இல்லை என்றால், அந்தப் பதற்றம் இருக்காது. சும்மா தானே இருக்கிறோம், அதில் ஒரு மணி இப்படி போனால் என்ன என்று தோன்றும். நேரத்தின் அருமை தெரிந்தவர்களுக்கு ஒவ்வொரு நொடியும் முக்கியமானது. 

அருணகிரிநாதர் சொல்கிறார், 

அந்தக் கலை, இந்தக் கலை என்று பல கலைகளை கற்று, இதை படிக்கவில்லையே, அதைப் படிக்கவில்லையே, நேரம் இல்லையே, என்ன செய்வது என்று பதறி, ஒரு வேளை தவறானவற்றை படித்து நேரத்தை வீணாக்கி விட்டோமோ, ஒரு வேளை உண்மை வேறு எங்கோ இருக்கிறதோ என்று பதறி, இறுதியில் ஒன்றும் சரியாக பிடிபடாமல் கலங்கி, கதறி, மண்டை காய்ந்து, துன்பப்படவோ என்னை விடுத்தாய் முருகா "

என்று கலங்குகிறார். 

பாடல் 

கலையே பதறிக் கதறித் தலையூ 

டலையே படுமா றதுவாய் விடவோ 

கொலையே புரிவேடர் குலப்பிடிதோய் 

மலையே மலை கூறிடு வாகையனே 

சீர் பிரித்த பின் 

கலையே பதறிக் கதறித் தலை ஊடு  

அலையே படுமாறு அது வாய் விடவோ 

கொலையே புரி வேடர் குலப் பிடி தோய் 

மலையே மலை கூறிடு வாகையனே

பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2023/09/blog-post.html

(please click the above link to continue reading)

கலையே  = பல கலைகள், கல்வி, கேள்விகள் 

பதறிக் = அவசர அவசரமாக படித்து 

கதறித் = ஒன்றும் புரியாமல், என்ன செய்வது என்று அறியாமல் கதறி 

தலை ஊடு = வாதங்கள் புரிந்து (ஒரு தலைக்கும் இன்னொரு தலைக்கும் ஊடே) 

அலையே படுமாறு = அங்கும் இங்கும் அலையும் படி 

அது வாய் விடவோ = அது போல விட்டு விடுவாயா என்னை 

கொலையே = கொலை செய்வதையே 

புரி = தொழிலாகக் கொண்ட 

 வேடர் குலப்  = வேடர் குலத்தில் தோன்றிய 

பிடி = பெண் யானை போன்ற வள்ளியின் 

தோய் = தோள்களில் தோய்பவனே, அவளை அணைத்துக் கொள்பவனே 

மலையே = மலை போன்ற தோள்களை உடையவனே 

மலை = கிரௌஞ்ச மலையை 

கூறிடு = இரண்டு கூறாகப் பிளந்த 

வாகையனே = வெற்றியை உடையவனே 

அது எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். 

எனக்கு எப்போதும் ஒரு சந்தேகம் உண்டு. 

ஒரு மிகப் பெரிய கேள்வியை எழுப்பும் அருணகிரிநாதர், எதற்கு வள்ளியை கட்டி அணைத்துக்  கொள்பவனே என்று ஒரு வரியை நடுவில் சேர்க்க வேண்டும். 

வேண்டும் என்றால் தகப்பனுக்கு பிரணவத்தை உபதேசம் செய்தவனே என்று சொல்லி இருக்கலாம். உன் மனைவியை கட்டி அணைத்துக் கொள்பவனே என்று ஏன் சொல்ல வேண்டும்?

காரணம் இல்லாமல் அருணகிரி சொல்வாரா? 

கல்வி கேள்விகளால் இறைவனை அடைய முடியாது. அன்பினால் முடியும் என்று சொல்ல வருகிறாரோ என்று சந்தேகம் வருகிறது. 

கொலைத் தொழிலை கொண்ட வேடர் குலத்தில் பிறந்த வள்ளிக்கு கல்வி ஞானம் அதிகம் இருக்காது. ஆனாலும், அவளைத் தேடிப் போய் முருகன் அணைத்துக் கொண்டான் என்று சொல்வதன் மூலம், நீ ரொம்ப படித்து சிரமப் படாதே. அன்போடு இரு. நானே வருவேன் உன்னைத் தேடி என்று சொல்ல வருகிறாரோ?

மேலும், கிரௌஞ்ச மலையை பிளந்தவனே என்று ஏன் சொல்ல வேண்டும்?

பதவி, அதிகாரம், பலம், இது எல்லாம் இருந்தாலும், இறைவனை அடைய முடியாது என்பது மட்டும் அல்ல, அவை ஆணவத்துக்கு இடம் கொடுக்கும். அவற்றை நீக்கினால் அன்றி அவனை அடைய முடியாது என்று சொல்லாமல் சொல்கிறாரோ என்று தோன்றுகிறது. 

நேரடியான பொருள் இல்லை. இப்படியும்  சிந்திக்க இடம் உண்டு. அவ்வளவுதான். 

சரி என்று பட்டால் ஏற்றுக் கொள்ளுங்கள். இல்லை என்றால் தள்ளி விடுங்கள். 

Monday, June 5, 2023

கந்தரனுபூதி - யானாகிய என்னை விழுங்கி

கந்தரனுபூதி -   யானாகிய என்னை விழுங்கி 

(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 

நான் என்பது என்ன?

இது ஒரு மிகப் பெரிய கேள்வி. உன்னையே நீ அறிவாய் என்பது மகா வாக்கியம். 

நான் என்பது இந்த உடம்பா? இல்லை. 

இந்த உடம்புக்குள் இருக்கும் நினைவுகள், ஞாபகங்களா?  

யோசித்துப் பாருங்கள், உங்கள் அனைத்து ஞாபகங்களும் மறந்து போய்விட்டது என்றால் எப்படி இருக்கும் என்று. 

உங்கள் பெயர், உங்கள் ஊர், அப்பா, அம்மா, கணவன், மனைவி, பிள்ளைகள், நட்பு, சுற்றம், படித்த பாடங்கள், பார்த்த சினிமா , கேட்ட பாடல்கள் எல்லாம் மறந்து போய் விட்டது என்றால் நீங்கள் யார்? 

சரி, என் நினைவுகள் மட்டுமா நான்? எத்தனையோ விடயங்களை மறந்து போயிருக்கிறேன். அதானால் என்ன கெட்டு போய்விட்டது?  

இல்லை என்றால் உடலுக்குள் இருக்கும் உயிரா? மனமா? சித்தமா ...எதுதான் நான்?

நான் என்பது இவையெல்லாம் கடந்த ஒன்றா?  

"நான்" என்று சொல்லும் போது , நான் வேறு, இந்த உலகம் வேறு என்று பிரித்துப் பார்க்கிறேன். நான் என்ற எண்ணம் போய் விட்டால் , நான் வேறு, உலகம் வேறு என்பது இல்லமால் போகும் அல்லவா?

ஆற்று நீர், கடலோடு சேர்ந்தால், இரண்டு வேறு வேறு நீர் இருக்காது அல்லவா?

குடத்துக்குள் ஒரு வெளி இருக்கிறது. குடத்துக்கு வெளியே ஒரு வெளி இருக்கிறது. குடம் உடைந்து போனால், இரண்டு வெளியும் ஒன்றாகி விடும் அல்லவா? 

நான், எனது என்ற அகங்கார மமகாரம் போய் விட்டால், எப்படி இருக்கும்?

நன்றாக இருக்கும் என்று சொல்லக் கூட முடியாது. யாருக்கு நன்றாக இருக்கும் என்ற கேள்வி வரும். நான்   இல்லை என்றால்   நன்றாக இருக்கும் என்று சொல்லுவது யார்?

அருணகிரிநாதர் வியக்கிறார். மலைத்துப் போகிறார். 

பாடல் 

ஆனா வமுதே யயில்வேலரசே 

ஞானா கரனே நவிலத்தகுமோ 

யானா கிய என்னை விழுங்கிவெறும் 

தானாய் நிலைநின்றது தற்பரமே 

பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2023/06/blog-post.html

(pl click the above link to continue reading)

ஆனா வமுதே = ஆனாத + அமுதே = அழிவு இல்லாத அமுதம் போன்றவனே 

அயில்வேலரசே = அயில் + வேல் + அரசே = கூரிய வேலாயுதத்தை உடைய தலைவனே 

ஞானா கரனே = ஞானமே வடிவானவனே 

நவிலத்தகுமோ = சொல்ல முடியுமா?

யானா கிய = நான் என்று சொல்லப்படும் 

என்னை = என்னை 

விழுங்கி = உள் வாங்கி 

வெறும் = வெறுமனே

தானாய் = தான் மட்டுமாய் தனித்து  

நிலைநின்றது = நிலையாக நின்றது 

தற்பரமே = மேலான பொருளே 

நான் என்ற என்னை விழுங்கி, தனக்குளே ஒன்றாக்கிக் கொண்ட உயர் பொருளே என்கிறார். 

எது உண்டது? எதை உண்டது? உண்ட பின் நின்றது எது?

அவருக்குத் தெரிகிறது. ஆனால், அதை சொல்ல முடியவில்லை. சொன்னால் புரியாது என்று நினைத்து இருக்கலாம். 

"நவிலத் தகுமோ" என்கிறார். 

சொல்ல முடியுமா என்று கேட்கிறார்.  

நானே இல்லை என்ற பின் சொல்ல யார் இருக்கிறார்கள்?  எப்படிச் சொல்ல முடியும்?

அனுபவம் மட்டும் நிற்கிறது. 

என்னை அது தன்னுள் கொண்டுவிட்டது. இப்போது நான் அதுவாகிவிட்டேன் என்று சொல்லலாம். ஆனால், அப்படியும் சொல்ல முடியாது. ஏன் என்றால் நான் என்பதே இல்லையே.

யோசனை செய்து பாருங்கள். 

 [

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html

மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html

மெய்யியல் - பகுதி 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html

மெய்யியல் - பகுதி 4

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html

மெய்யியல் - பகுதி 5 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html

மெய்யியல் - பகுதி 6 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html

மெய்யியல் - பகுதி 7

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/7.html

நின்று தயங்குவதே 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_14.html

வள்ளி பதம் பணியும் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_20.html

விடுவாய் வினையா வையுமே 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_26.html

மெய்ப் பொருள் பேசியவா

https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post.html

 பரிசென் றொழிவேன் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_7.html

எதிரப் படுவாய்

https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_26.html

மெய்ப் பொருள் பேசியவா

https://interestingtamilpoems.blogspot.com/2022/12/blog-post_11.html

அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_8.html

முருகன் கழல் பெற்று உய்வாய்

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_14.html

என்று அருள்வாய் ? 

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/1.html

பேராசை எனும் பிணியில் பிணிபட்டு

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_24.html

யாமோதிய கல்வியும் பாகம் 1 

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_29.html

 யாமோதிய கல்வியும் பாகம் 2

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_29.html

உதியா மரியா

https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post.html

மிடியென் றொரு பாவி

https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_12.html

உபதேசம் உணர்தியவா 

https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_18.html

கருதா மறவா

https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_23.html

வள்ளிபதம் பணியும்

https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_4.html

அடியைக் குறியா

https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_21.html

அருள் சேரவும் எண்ணுமதோ 

https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_26.html

அலையத் தகுமோ

https://interestingtamilpoems.blogspot.com/2023/04/blog-post.html

நினைந்திலையோ  

https://interestingtamilpoems.blogspot.com/2023/04/blog-post_29.html

மின்னே நிகர்வாழ்வை

https://interestingtamilpoems.blogspot.com/2023/05/blog-post_16.html

]

Tuesday, May 16, 2023

கந்தரனுபூதி - மின்னே நிகர்வாழ்வை

 கந்தரனுபூதி -   மின்னே நிகர்வாழ்வை

(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 

வாழ்க்கை நிரந்தரமானது அல்ல, செல்வம், இளமை என்பனவும் நிரந்தரம் அல்ல. 

இதெல்லாம் நமக்குத் தெரியும். 

இருந்தும் ஏதோ கற்ப கோடி ஆண்டுகள் வாழப் போவது போல சொத்து சேர்க்கிறோம், சண்டை பிடிக்கிறோம், நான் , எனது என்று இறுமாக்கிறோம்.  

மரணம் எப்பவும் வரலாம் என்று தெரிந்தும் ஏன் இவ்வளவு சிக்கல்? 

அருணகிரிநாதர் சொல்கிறார், 

"எல்லாம் விதியின் பயன்". 

அறிவு இருந்தாலும், வேலை செய்யாது. 

எத்தனை ஆயிரம் புத்தகம் படித்தாலும், எத்தனை ஆயிரம் சொற்பொழிவுகள் கேட்டாலும், எவ்வளவு ப்ளாகுகள் வாசித்தாலும்,  புரிந்தாலும் நடை முறை படுத்த முடியாது. 

காரணம், கொண்டுவந்த விதி. 

"காதற்ற ஊசியும் வாராது காண் நும் கடை வழிக்கே" 

என்ற ஒரு வாக்கியத்தைப் படித்தவுடன் ஞானம் வந்து துறவி ஆனார் பட்டினத்தார். 

நாமும்தான் வாசிக்கிறோம். விட முடிகிறதா? 

காரணம் அவர் விதி வேறு, நம் விதி வேறு. 

அது ஒரு புறம் இருக்கட்டும். 

சிறு வயதில் பல board game கள் விளையாடி இருப்போம். 

பலவற்றில் இராஜா, இராணி, குதிரை, பணம், வீடு என்றெல்லாம் பொம்மைகள், காகிதங்கள் இருக்கும். பிள்ளைப் பருவத்தில்  அவற்றை நிஜம் என்று எடுத்துக் கொண்டு தீவிரமாக விளையாடுவோம். 

அந்த விளையாட்டில் இருக்கும் பணம் உண்மையான பணம் அல்ல. 

அது போல, 

பெரியவர்கள் ஆன பின், பல உலோகங்களை வாங்கி வைத்துக் கொண்டு இது தங்கம், இது வெள்ளி என்றும் சில பல கற்களை  எடுத்து வைத்துக் கொண்டு இது வைரம், அது வைடூரியம் என்று கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம். 

எது உண்மையான தங்கம், வைரம், பொருள் எல்லாம்?

அருணகிரிநாதர் சொல்கிறார். 

பாடல் 

மின்னே நிகர்வாழ்வை விரும்பியயா 

னென்னே விதியின் பயனிங்கிதுவோ 

பொன்னே மணியே பொருளே அருளே 

மன்னே மயிலேறிய வானவனே 

பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2023/05/blog-post_16.html

(pl click the above link to continue reading)

மின்னே = மின்னலுக்கு 

நிகர் = நிகரான 

வாழ்வை = வாழ்க்கையை 

விரும்பிய = விருப்பப்பட்ட 

யான் = நான் 

என்னே = என்ன ஆச்சரியம் 

விதியின் பயனிங்கிதுவோ = விதியின் பயன் இதுதானா ?

பொன்னே  = பொன்னே 

மணியே = மணியே 

பொருளே = பொருளே 

அருளே = அருள் வடிவானவனே 

மன்னே = என்றும் நிலைத்து இருப்பவனே 

மயிலேறிய வானவனே = மயில் மேல் ஏறிய உயர்ந்தவனே  

பொன்னும், மணியும், பொருளும், அருளும் இறைவன் தானே அன்றி நாம் நினைக்கும் இந்த உலோகங்கள் அல்ல.

அது ஏன் தெரிய மாட்டேன் என்கிறது. 

அஞ்ஞானம். 

அதற்குக் காரணம், விதி. 

விதி மதியை மறைக்கும். 

இருக்கின்ற கொஞ்ச வாழ் நாளை  இந்த நிலையில்லா வாழ்வை நிலைப் படுத்தவும், அர்த்தமில்லா செல்வங்களை சேர்க்கவும் நாம்   வீணடிக்கக் காரணம் நம் விதி 

 [

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html

மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html

மெய்யியல் - பகுதி 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html

மெய்யியல் - பகுதி 4

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html

மெய்யியல் - பகுதி 5 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html

மெய்யியல் - பகுதி 6 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html

மெய்யியல் - பகுதி 7

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/7.html

நின்று தயங்குவதே 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_14.html

வள்ளி பதம் பணியும் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_20.html

விடுவாய் வினையா வையுமே 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_26.html

மெய்ப் பொருள் பேசியவா

https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post.html

 பரிசென் றொழிவேன் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_7.html

எதிரப் படுவாய்

https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_26.html

மெய்ப் பொருள் பேசியவா

https://interestingtamilpoems.blogspot.com/2022/12/blog-post_11.html

அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_8.html

முருகன் கழல் பெற்று உய்வாய்

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_14.html

என்று அருள்வாய் ? 

பேராசை எனும் பிணியில் பிணிபட்டு

யாமோதிய கல்வியும் பாகம் 1 

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_29.html

 யாமோதிய கல்வியும் பாகம் 2

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_29.html

உதியா மரியா

https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post.html

மிடியென் றொரு பாவி

https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_12.html

உபதேசம் உணர்தியவா 

]

Saturday, April 29, 2023

கந்தரனுபூதி - நினைந்திலையோ

 கந்தரனுபூதி -   நினைந்திலையோ  

(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 

நாம் விரும்புகிறோமோ இல்லையோ, அறிவியலின் தாக்கம் நமக்குள் நாளும் வளர்ந்து கொண்டேதான் போகிறது. 

எவ்வளவுதான் நம்பிக்கை இருந்தாலும், மனதின் எங்கோ ஒரு மூலையில், இது சரிதானா, இது உண்மையா என்ற கேள்வி இருந்துகொண்டே இருக்கிறது. 

சரி, உண்மை என்பதை எப்போது உறுதிப்படுத்தலாம்? சரியான ஆதாரம் இருந்தால் இந்த சந்தேகங்கள் போய்  விடும். ஆதாரத்துக்கு எங்கே போவது?

எந்த சோதனைச் சாலையில் சென்று அந்த ஆதாரங்களை சரி பார்ப்பது?

சரி ஆதாரம் இல்லை. எனவே இதை எல்லாம் புறம் தள்ளி விடலாம் என்றால் அதற்கும் மனம் ஒப்ப மறுக்கிறது. 

இதற்கு என்னதான் முடிவு? இப்படியே வாழ்நாள் முழுவதும் ஒரு முடிவும் இல்லாமல் தவித்துக் கொண்டே இருக்கத் தான்  வேண்டுமா?  

ஒரு வழி இருக்கிறது. 

இறைவனாக இரங்கி, "சரி போடா...ரொம்ப அலைஞ்சு திரிஞ்சு துன்பப் பட்டுவிட்டாய்" என்று அருள் செய்தால் பின்   ஆதாரம் ஒன்றும் வேண்டாம். அந்த அருள் ஒன்றே போதும். அதுதான் ஆதாரம். 

அருணகிரி சொல்கிறார், "ஆதாரம் இல்லேன், அருளை பெற நீயும் என் மேல் இரக்கம் காட்ட மறுக்கிறாய்...நான் என்ன செய்வது"

அவன் நமக்கு அருள் செய்யாவிட்டால் என்ன. நமக்கு முன்னால் யாருக்காவது அருள் செய்து இருப்பானே. அப்படி அருள் பெற்றவர்கள் ஏதாவது எழுதி வைத்து இருப்பார்களே. அதைப் படித்து தெரிந்து கொள்ள முடியாதா?

ஆன்மீக அறிவு சார்ந்த நூல்களை நான்கு படிகளாக பிரிக்கிறார்கள். 

வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் என்று. 

இந்த நூலகளைப் படித்து ஞானம் பெற்று உண்மை எது என்று அறிந்து கொள்ள முடியுமா?  

அருணகிரி சொல்கிறார், "...உண்மை, இறை என்பதெல்லாம் அறிவிற்குள் அடங்காத ஒன்று" என்று. 

அது என்ன அறிவிற்கு அகப்படாத ஒன்று இருக்கிறதா?  வினோதமாக இருக்கிறதே என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் நினைப்பது மிகவும் சரி என்கிறார் அருணகிரி. "விநோதமானவன்" என்கிறார். 

பாடல் 

ஆதாரமிலேன் அருளைப் பெறவே 

நீதானொரு சற்று நினைந்திலையோ 

வேதாகம ஞான வினோதமனோ 

தீதா சுரலோக சிகாமணியே 

பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2023/04/blog-post_29.html

(pl click the above link to continue reading)

ஆதாரமிலேன் = ஆதாரம் ஒன்றும் இல்லாதவன் 

அருளைப் பெறவே = உன்னுடைய அருளைப் பெறுவதற்கு 

நீதானொரு = நீ தான் ஒரு 

சற்று = கொஞ்சம் கூட 

நினைந்திலையோ = நினைக்கவில்லையோ ? உனக்கு என்னைப் பற்றி கொஞ்சம் நினைப்பு கூட இல்லை. 
 
வேதாகம = வேதம், ஆகமம் போன்ற நூல்களில் சொல்லப்பட்ட 

ஞான = ஞானங்களில் 

வினோத = அறியப்பட முடியாத 

மனோதீதா = மனதிற்கு அப்பாற்பட்டவனே 

 சுரலோக = தேவர் உலகின் 

 சிகாமணியே = (சிகை = தலை) தலையில் சூடும் மணி போன்ற உயர்ந்தவனே 

 [

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html

மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html

மெய்யியல் - பகுதி 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html

மெய்யியல் - பகுதி 4

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html

மெய்யியல் - பகுதி 5 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html

மெய்யியல் - பகுதி 6 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html

மெய்யியல் - பகுதி 7

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/7.html

நின்று தயங்குவதே 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_14.html

வள்ளி பதம் பணியும் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_20.html

விடுவாய் வினையா வையுமே 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_26.html

மெய்ப் பொருள் பேசியவா

https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post.html

 பரிசென் றொழிவேன் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_7.html

எதிரப் படுவாய்

https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_26.html

மெய்ப் பொருள் பேசியவா

https://interestingtamilpoems.blogspot.com/2022/12/blog-post_11.html

அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_8.html

முருகன் கழல் பெற்று உய்வாய்

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_14.html

என்று அருள்வாய் ? 

பேராசை எனும் பிணியில் பிணிபட்டு

யாமோதிய கல்வியும் பாகம் 1 

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_29.html

 யாமோதிய கல்வியும் பாகம் 2

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_29.html

உதியா மரியா

https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post.html

மிடியென் றொரு பாவி

https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_12.html

உபதேசம் உணர்தியவா 

]

Sunday, April 2, 2023

கந்தரனுபூதி - அலையத் தகுமோ

 கந்தரனுபூதி -     அலையத் தகுமோ

(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 

நாள் முழுவதும் ஏதாவது செய்து கொண்டே இருக்கிறோம். 

அவற்றில் சில நல்லதாக இருக்கலாம், சில நல்லது இல்லாததாக இருக்கலாம். 

நல்வினை, தீவினை என்று இரண்டாகப் பிரித்துக் கொள்ளலாம். 

நல்வினை செய்தால் புண்ணியம். 

தீவினை செய்தால் பாவம். 

இந்த வினைகள் எல்லாம் நம் கணக்கில் ஏறிக் கொண்டே இருக்கும். 

நம் வாங்கிக் கணக்கு மாதிரி பணம் போடுவதும் எடுப்பதும் ஒன்றுக்கு ஒன்று சரி செய்து முடிவில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று காண்பிப்பது போல அல்ல இந்த பாவ புண்ணிய கணக்கு. 

பாவம் தனிக் கணக்கு. 

புண்ணியம் தனிக் கணக்கு. 

நிறைய பேர் நினைக்கிறார்கள் எவ்வளவு பாவம் செய்தாலும், கொஞ்சம் தானம், தர்மம், பூஜை, புனஸ்காரம் செய்தால்   செய்த பாவம் எல்லாம் போய் விடும் என்று. 

போகாது என்பது நம் சித்தாந்தம். 

புண்ணியம் செய்தால் புண்ணியக் கணக்கில் சேரும். அவ்வளவுதான். பாவக் கணக்கு குறையாது. 

இப்படி சேர்த்த பாவமும் புண்ணியம் மறு பிறவிகளில் இன்ப, துன்பங்களாக வந்து சேரும். 

ஒரு பிறவியில் எல்லா பாவத்தையும் தீர்த்து விடலாமா என்றால் முடியாது. நம்மால் தாங்க முடியாது. எனவே, ஆண்டவன்   கொஞ்சம் பாவம், கொஞ்சம் புண்ணியம் என்று கலந்து இன்ப துன்பங்களை விரவி நம் வாழக்கையை  வகுக்கிறான். பகுக்கிறான்.  

நான் சாதித்து விட்டேன் என்று குதிப்பதும், ஐயோ எனக்கு இப்படி வந்து சேர்ந்து விட்டதே என்று வருந்துவதும் தேவை இல்லாத ஒன்று.   முன் செய்த வினை இன்று வந்து நிற்கிறது. 

இந்த வாழ்வில் செய்யும் வினைகள் பின்னால் வரும். 

இந்த வாழ்வு நிரந்தரமானது என்று எண்ணி மக்கள் பலவும் செய்கிறார்கள். கால காலத்துக்கு இருக்கப் போவது போல எண்ணிக் கொண்டு  காரியம் செய்கிறார்கள். 

தாங்கள் எல்லாம் முடிவு செய்து காரியங்களை நடத்துவதாக நினைத்துக் கொள்கிறார்கள். 

அருணகிரியார் சொல்கிறார் 

"இந்த வாழ்வை நிரந்தரம் என்று எண்ணி நான் இதன் பின்னே போய்க் கொண்டு இருக்கிறேன். இது நிரந்தரம் அல்ல. ஒரு நாள் சட்டென்று முடிந்துவிடும். இதற்கு நடுவில் அந்த இன்பம், இந்த அனுபவம் என்று அங்காடி நாய் போல் அலைந்து கொண்டு இருக்கிறேன். இது சரியா? என்னை நீ காக்கக் கூடாதா ?" என்று வேண்டுகிறார். 

பாடல் 

மெய்யே யென வெவ்வினை வாழ்வை யுகந்து 

ஐயோ அடியேன் அலையத் தகுமோ 

கையோ அயிலோ கழலோ முழுதுஞ் 

செய்யோய் மயிலேறிய சேவகனே 

பொருள் 

(pl click the above link to continue reading)

மெய்யே யென =மெய் என்று எண்ணி, நிரந்தரமானது என்று எண்ணி 

வெவ்வினை = கொடுமையான வினைகள் சூழ்ந்த 

வாழ்வை = இந்த வாழ்வை 

யுகந்து = விரும்பி 

ஐயோ = ஐயோ 

அடியேன் = அடிமையாகிய நான் 

அலையத் தகுமோ = ஒரு குறிக்கோள் இல்லமால் அங்கும் இங்கும் அலையத் தகுமோ? 
 
கையோ = கையோ ?

அயிலோ = இரும்பினாலான, கூர்மையான வேலோ?

கழலோ = திருவடிகளோ ?

முழுதுஞ் = அல்லது உடல் முழுவதுமா? 
 
செய்யோய் = சிவந்த வண்ணமாய் இருப்பது 

மயிலேறிய சேவகனே = மயில் மேல் ஏறி வரும் காவலனே 

இந்த வாழ்வும் அதில் உள்ள எதுவும் நிரந்தரமானது அல்ல. 

உறவும், நட்பும், செல்வமும், பொருளும், அனுபவங்களும், ஞாபகங்களும், இளமையும் எதுவும் நிரந்தரம் அல்ல. 

இவை எல்லாம் என்றும் இருக்கப் போவது போல எண்ணிக் கொண்டு வாழக் கூடாது. 

ஒரு நாள் தனித்து நிற்க வேண்டி வரும். 

அப்போது என்ன செய்ய நினைத்தாலும் முடியாது. உடலும், உள்ளமும் தளர்ந்து போய் இருக்கும். 

இப்பவே செய்துவிட வேண்டும். 

 [

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html

மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html

மெய்யியல் - பகுதி 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html

மெய்யியல் - பகுதி 4

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html

மெய்யியல் - பகுதி 5 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html

மெய்யியல் - பகுதி 6 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html

மெய்யியல் - பகுதி 7

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/7.html

நின்று தயங்குவதே 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_14.html

வள்ளி பதம் பணியும் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_20.html

விடுவாய் வினையா வையுமே 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_26.html

மெய்ப் பொருள் பேசியவா

https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post.html

 பரிசென் றொழிவேன் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_7.html

எதிரப் படுவாய்

https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_26.html

மெய்ப் பொருள் பேசியவா

https://interestingtamilpoems.blogspot.com/2022/12/blog-post_11.html

அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_8.html

முருகன் கழல் பெற்று உய்வாய்

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_14.html

என்று அருள்வாய் ? 

பேராசை எனும் பிணியில் பிணிபட்டு

யாமோதிய கல்வியும் பாகம் 1 

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_29.html

 யாமோதிய கல்வியும் பாகம் 2

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_29.html

உதியா மரியா

https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post.html

மிடியென் றொரு பாவி

https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_12.html

உபதேசம் உணர்தியவா 

]

Sunday, March 26, 2023

கந்தரனுபூதி - அருள் சேரவும் எண்ணுமதோ

 கந்தரனுபூதி -    அருள் சேரவும் எண்ணுமதோ 

(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 

உண்மையைத் தேடும் அந்த நீண்ட பயணத்தில் காமம் என்பது ஒரு தடைக் கல். 

அது ஒரு வேற்றுப்  பாதை. அதில் பயணம் செய்ய ஆரம்பித்தால், அது நம்மை வேறு எங்கோ கொண்டு போய் விடும். 

எதற்காக பயணத்தை ஆரம்பித்தோம் என்று தெரியாது. வழி தப்பி வேறு எங்கோ போய் விடுவோம். 

பின், ஏன் அந்த இடத்துக்கு வந்தோம், எப்படி வந்தோம் என்று வருந்திப் பயன் இல்லை. 

அருணகிரிநாதர் சொல்கிறார், "காமம் வந்து விட்டால், இறை அருளைப் பெறும் எண்ணம் வராது" என்று. 

பாடல் 

கூர்வேல் விழிமங்கையர் கொங்கையிலே 

சேர்வேனருள் சேரவு மெண்ணுமதோ 

சூர் வேரொடு குன்று தொளைத்த நெடும் 

போர் வேல புரந்தர பூபதியே 

பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_26.html

(pl click the above link to continue reading)

கூர்வேல் = கூர்மையான வேலைப் போன்ற 

விழி = கண்களை உடைய 

மங்கையர் = பெண்களின் 

கொங்கையிலே = மார்பகங்களின் மேல் 

சேர்வேன் = சேர்பவனான நான் 

அருள் = உனது அருளை 

சேரவு = சேர்வதற்கு, அடைவதற்கு 

மெண்ணுமதோ = எண்ண முடியுமா ? (முடியாது) 

சூர் = சூர பத்மனை  

வேரொடு = அடியோடு 

குன்று = கிரௌஞ்ச மலையை 

தொளைத்த = துளைக்கும் படி விட்ட 

நெடும் = நீண்ட 

போர் வேல = போர் செய்யும் வேலைக் கொண்ட 

புரந்தர பூபதியே  = தேவர் உலகின் காவலனே 

அப்படி என்றால் காமமே கூடாதா? கூடாது என்றால் பின் ஏன் இறைவன் அதைப் படைக்க வேண்டும்?

ஆண் பெண் என்ற வேறுபாடு இல்லாமலே படைத்து இருக்கலாமே ?

உயிர் வாழ உணவு தேவைதான். அதற்காக அதை அளவுக்கு அதிகமாக உண்டு கொண்டே இருந்தால் என்ன ஆகும்?

இங்கே "மங்கையர்" என்று பன்மையில் குறிப்பிடுகிறார். மங்கை என்று ஒருமையில் அல்ல. 

அதாவது, பல பெண்களிடம் சென்று காமம் அனுபவிக்கும் ஆசையில் இருந்தால் எங்கே இறை அருள் பற்றி சிந்தனை வரும்  என்ற நோக்கில் கூறி இருக்கிறார் என்று உரை ஆசிரியர்கள் கூறுவாரகள்.

 [

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html

மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html

மெய்யியல் - பகுதி 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html

மெய்யியல் - பகுதி 4

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html

மெய்யியல் - பகுதி 5 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html

மெய்யியல் - பகுதி 6 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html

மெய்யியல் - பகுதி 7

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/7.html

நின்று தயங்குவதே 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_14.html

வள்ளி பதம் பணியும் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_20.html

விடுவாய் வினையா வையுமே 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_26.html

மெய்ப் பொருள் பேசியவா

https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post.html

 பரிசென் றொழிவேன் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_7.html

எதிரப் படுவாய்

https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_26.html

மெய்ப் பொருள் பேசியவா

https://interestingtamilpoems.blogspot.com/2022/12/blog-post_11.html

அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_8.html

முருகன் கழல் பெற்று உய்வாய்

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_14.html

என்று அருள்வாய் ? 

பேராசை எனும் பிணியில் பிணிபட்டு

யாமோதிய கல்வியும் பாகம் 1 

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_29.html

 யாமோதிய கல்வியும் பாகம் 2

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_29.html

உதியா மரியா

https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post.html

மிடியென் றொரு பாவி

https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_12.html

உபதேசம் உணர்தியவா 

]

Tuesday, March 21, 2023

கந்தரனுபூதி - அடியைக் குறியா

 கந்தரனுபூதி -   அடியைக் குறியா 

(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 

கந்தரநுபூதி ஆரம்பிக்கும் போது மெய்யியல் பற்றி சில பதிவுகளில் வாசித்தோம். இந்த பதிவின் இறுதியில் அந்தப் பதிவுகளின் வலை தள முகவரி இருக்கிறது. 

சைவ சித்தாந்தத்தின் அடிப்படை பதி, பசு, பாசம் என்ற மூன்று. 

பதி = இறைவன் 

பசு = உயிர்கள் 

பாசம் = இந்த உயிர்களை காட்டும் கயிறு. கயிறு என்றாலும் பாசம் என்றாலும் ஒன்றுதான். பாசக்கயிறு என்று நாம் சேர்த்துச் சொல்கிறோம். நடு சென்டர் என்பதுமாதி. 

இந்த மூன்றும் ஆதியில் இருந்தே இருக்கிறது.

இதில் பதி முழு ஞானம் உள்ளது. 

பசு முழுமையற்ற ஞானம் உடையது. 

பாசம் ஒரு ஆசையாய் பொருள். 

ஆதியில் இருந்த பசு, ஞானம் உள்ள இறைவனைப் பற்றாமல் ஞானமே இல்லாத அறியாமையில், அகங்காரத்தைப் பற்றி விடுகிறது. 

பின் அந்த அஞ்ஞான இருளில் இருந்து வெளிவர முயல்கிறது. அதுவே மூல கன்மம் என்று அழைக்கப் படுகிறது. 

நியாப்பப்படி பார்த்தால் ஆத்மா இறைவனைத்தான் பற்ற வேண்டும். 

பற்றுகிறதா? இல்லையே. 

அதை விடுத்து உலகியல் அனுபவங்களில் மூழ்கி விடுகிறது. 

சரி, ஆத்மாதான் அறிவு இல்லாமல் இப்படி போகிறது என்றால், இறைவன் அதை சரி செய்யக் கூடாதா? 

முடியும், ஆனால் மாட்டான். 

ஏன்?

இறைவனுக்கு ஒரு பற்றும் இல்லை. அவன் விருப்பு வெறுப்பு இல்லாதவன். ஆத்துமாக்களை காப்பாற்ற நினைத்தால் அவற்றின் மேல் இறைவனுக்கு விருப்பு வந்து விட்டது என்று ஆகி விடும். 

அருணகிரிநாதர் புலம்புகிறார் 

"என்னால் இந்த அறியாமை இருளை விட்டு வர முடியவில்லை. நீயும் உதவி செய்ய மாட்டேன் என்கிறாய். இது முறையோ முறையோ " என்று கேட்கிறார். 

தான் விடாதது ஒரு முறையோ .

இறைவன் வது ஏற்றுக் கொள்ளாதது இரண்டாவது முறையோ . 

பாடல் 

அடியைக் குறியா தறியாமையினான் 

முடியக் கெடவோ முறையோ முறையோ 

வடிவிக்ரம வேன் மகிபா குறமின் 

கொடியைப் புணரும்குண பூதரனே 

பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_21.html

(pl click the above link to continue reading)

அடியைக் = திருவடிகளை 

குறியா = குறித்து அறியாது 

தறியாமையினான்  = எனது அறியாமையினால் 

முடியக் = இறுதிவரை 

கெடவோ = நான் அழியவோ 

முறையோ முறையோ = அது முறைதானா, முறைதானா 

வடி = வடிவான 

விக்ரம வேன் = கூரான வேலை உடையவனே 

மகிபா = மகி + பா = மகி என்றால் உலகம். பா என்றால் பரிபாலனம் செய்வது 

குறமின் = மின்னல் போன்ற வடிவுடைய குற வள்ளியின் 

கொடியைப் = கொடி போன்றவளே 

புணரும் = சேரும் 

குண பூதரனே = குணங்களின் இருப்பிடம் ஆனவனே, குணங்களை காப்பவனே, குணங்களின் தலைவனே 

கொஞ்சம் இலக்கணம் படிப்போமா?

முறையோ முறையோ என்று இரண்டு முறை வருகிறது. 

பள்ளியில் படிக்கும் பொழுது இரட்டை கிளவி, அடுக்குத் தொடர் என்று படித்து இருக்கிறோம். 

பிரித்தால் பொருள் தந்தால் அடுக்குத் தொடர் இல்லை என்றால் இரட்டைக் கிளவி (சொல்). 

நீர் சல சல என்று ஓடியது, அவன் வள வள என்று பேசினான். இதில் உள்ள சல, வள என்பவை பிரித்தால் பொருள் தராது. 

முறையோ முறையோ என்பதில் பிரித்தால் பொருள் தரும். 

சொல்ல வந்தது அது அல்ல. 

இப்படி ஒரு சொல்லை பல முறை அடுக்க ஒரு இலக்கணம் இருக்கிறது. 

இலக்கணம் தெரியாமலேயே நாம் அவற்றை பயன் படுத்திக் கொண்டு இருக்கிறோம். 

உதாரணமாக, வீட்டில் பாம்பு வந்து விட்டது என்று வைத்துக் கொள்வோம். 

பாம்பு பாம்பு என்று சத்தம் போடுவோமா அல்லது பாம்பு என்று சொல் சொல்லுவோமா? 

இரண்டு முறை சொன்னாலும், அதே பொருள் தானே ? ஏன் இரண்டு முறை சொல்ல வேண்டும். 

அது ஆபத்தைக் குறிக்கிறது. 

யாராவது தவறு செய்து விட்டால் "ஐயோ ஐயோ...இப்படியா செய்வது" என்று சொல்கிறோம். 

வாழ்க வாழ்க வாழ்க என்று வாழ்த்துகிறோம். 

இப்படித் சொல்லை அடுக்க மூன்று விதிகள் இருக்கிறது. 

அசை நிலை, பொருள் நிலை, இசை நிறை என்று. 

அசை என்றால் அர்த்தம் இல்லாமல் வருவது. 

ஆ ஆ, ஏ ஏ - அசை நிலை 

பொருள் நிலையில் விரைவு, அச்சம், உவகை, அவலம் என்று நான்கு பகுதிகள் உண்டு. 

வா வா...வண்டி போகப் போகுது - விரைவு 

அருமை அருமை - உவகை 

ஐயோ ஐயோ, அல்லது அச்சோ அச்சோ - அவலம் 

தீ, தீ ; பாம்பு பாம்பு - அச்சம் 

இந்தப் பாடலில் உள்ள முறையோ முறையோ அவலம். அவலம் என்றால் துன்பம். 

எல்லாம் என் தலை எழுத்து தலை எழுத்து என்று சொல்வது போல. 

அசைநிலை பொருள்நிலை இசைநிறைக்கு ஒருசொல்

இரண்டு மூன்று நான்கு எல்லைமுறை அடுக்கும்

(நன்னூல் : 395)

குண பூதரனே என்று முடிகிறது. 

தரன் என்றால் காப்பவன்.  

கங்கையை தலையில் வைத்து காப்பவன் கங்காதரன் 

தரணீதரன் என்று ஒரு எழுத்தாளர் இருந்தார். 

 [

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html

மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html

மெய்யியல் - பகுதி 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html

மெய்யியல் - பகுதி 4

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html

மெய்யியல் - பகுதி 5 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html

மெய்யியல் - பகுதி 6 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html

மெய்யியல் - பகுதி 7

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/7.html

நின்று தயங்குவதே 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_14.html

வள்ளி பதம் பணியும் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_20.html

விடுவாய் வினையா வையுமே 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_26.html

மெய்ப் பொருள் பேசியவா

https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post.html

 பரிசென் றொழிவேன் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_7.html

எதிரப் படுவாய்

https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_26.html

மெய்ப் பொருள் பேசியவா

https://interestingtamilpoems.blogspot.com/2022/12/blog-post_11.html

அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_8.html

முருகன் கழல் பெற்று உய்வாய்

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_14.html

என்று அருள்வாய் ? 

பேராசை எனும் பிணியில் பிணிபட்டு

யாமோதிய கல்வியும் பாகம் 1 

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_29.html

 யாமோதிய கல்வியும் பாகம் 2

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_29.html

உதியா மரியா

https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post.html

மிடியென் றொரு பாவி

https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_12.html

உபதேசம் உணர்தியவா 

]

Saturday, March 4, 2023

கந்தரனுபூதி - வள்ளிபதம் பணியும்

 கந்தரனுபூதி -  வள்ளிபதம் பணியும் 

(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 

பிள்ளைகளை படிக்க வைத்து, திருமணம் செய்து வைத்து விடுகிறோம். அல்லது அவர்களே திருமணம் செய்து கொண்டு வாழ்வைத் தொடங்கி விடுகிறார்கள். 

இனி, நம் கடமை விட்டது, நமக்கும் அவர்களுக்கும் ஒரு பந்தமும் இல்லை. அவர்கள் குடும்பம், அவர்கள் வாழ்க்கை என்று ஒதுங்கி இருக்க முடியுமா?  

ஒவ்வொரு நாளும் அவர்கள் எப்படி இருக்கிறார்கள், அவர்கள் துணை நன்றாக இருக்கிறார்களா, பேரப் பிள்ளைகள் எப்படி இருக்கிறார்கள் என்று நாம் அவர்கள் மேல் அக்கறையோடு இருப்போம் அல்லவா?  அவர்களுக்கு ஒரு துன்பம் என்றால் ஓடோடிப் போவோம். முடியாவிட்டால், தினமும் தொலை பேசியில் தொடர்பு கொண்டு பேசுவோம், நமக்குத் தெரிந்த கடவுள்களுக்கு எல்லாம் மனுப் போடுவோம், விரதம் இருப்போம் அல்லவா?

சாதாரண மனிதர்களான நாமே இப்படி என்றால், இறைவன் நம் மீது (அவனுடைய பிள்ளைகள்)  எவ்வளவு அக்கறையோடு இருப்பான்?  நம்மால் முடிந்ததை நாம் நம் பிள்ளைகளுக்குச் செய்கிறோம்.  அதே போல் ஆண்டவனும் அவனால் முடிந்ததை அவன் பிள்ளைகளுக்குச் செய்வான்தானே?  

அவனால் முடியாதது என்ன? 

பக்தர்களுக்கு உதவ அவன் எப்போதும் காத்துக் கிடக்கிறான் என்ற இந்த செய்தி நம் பக்தி இலக்கியங்களில் எங்கும் பரவிக் கிடக்கிறது. 

ஆதி மூலமே என்று கூவிய யானையில் இருந்து பெரிய பெரிய ஞானிகள் வரை எல்லோருக்கும் ஓடி வந்து உதவி இருக்கிறான் என்கிறது நம் இலக்கியம். 

அருணகிரிநாதர் சொல்கிறார் 

வள்ளி ஒரு வேடுவர் குலப் பெண்.  அவளுக்கு அருள் செய்ய ஓடி வந்து, அவளைத் திருமணம் செய்து கொண்டு, "எனக்காக நீ எவ்வளவு தவம் செய்தாய்? இந்த காடு மேடெல்லாம் அலைந்து திருந்தாய். பாவம் நீ. இந்த பாதம் எவ்வளவு துன்பப் பட்டிருக்கும்" என்று அவள் பாதத்தை பிடித்து அவளுக்கு பணிவிடை செய்வானாம். அப்படிப்பட்ட முருகனை நான் அடைய தவம் செய்தது ஆச்சரியம் என்கிறார். 

பாடல் 

காளைக்குமரேசன் எனக் கருதித் 

தாளைப்பணியத் தவம் எய்தியவா 

பாளைக்குழல் வள்ளிபதம் பணியும் 

வேளைச்சுர பூபதி மேருவையே 

பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_4.html

(pl click the above link to continue reading)

காளைக் = காளை போல உறுதியும், பலமும் கொண்ட 

குமரேசன் = குமரேசன் 

எனக் கருதித் = என்று நினைத்து 

தாளைப் = திருவடிகளை 

பணியத்  = தொழ 

தவம் எய்தியவா  = தவம் செய்யும் பேறு பெற்றது எங்கனம் ?

பாளைக் = பனை மட்டை போல் அடர்ந்த 

குழல் = குழலை உடைய 

வள்ளி = வள்ளியின் 

பதம் பணியும்  = திருவடிகளைப் பணியும், அல்லது பணிவிடை செய்யும் 

வேளை = வேளைக்காரன் என்றால் படைத் தளபதி 

சுரபூபதி  = தேவர்களின் தலைவன் 

மேருவையே  = மேரு மலை போல உயர்ந்தவன் 

வள்ளியை முருகன் வந்து ஆட்கொண்டான். அது போல நம்மையும் ஆட்கொள்வான் என்பது கருத்து. அவள் தவம் செய்தாள். ஆண்டவனை அடைந்தாள்.

அது ஒரு செய்தி.

இன்னொரு செய்தி, 

எத்தனை பேர் மனைவிக்கு பணிவிடை செய்வார்கள்?  அவளும் ஒரு உயிர் தானே? அவளுக்கும் உடல் வலி, மன வலி எல்லாம் இருக்கும் தானே? மனைவியின் க் காலை பிடித்துவிட்டு பணிவிடை செய்பவர் எத்தனை பேர்?

மனைவியின் மேல் அன்பு வராவிட்டால், வேறு யார் மேல் அன்பு வரும்? ஆண்டவன் மேல் அன்பு எப்படி வரும்? 

கணவனை நம்பி, வீடு, வாசல், உடன் பிறப்பு, பெற்றோர், குல தெய்வம், தன் பெயரைக் கூட மாற்றிக் கொள்ளும் ஒரு பெண் மேல் அன்பு வராவிட்டால் வேறு எங்கு அன்பு வந்துவிடும். 

அன்பில்லாத இடத்தில் ஆண்டவன் எங்கு வருவான்?   

நான் ஆண், ஒரு பெண்ணுக்கு நான் பணிவிடை செய்வதா என்பது அகங்காரம். மனம் நெகிழ வேண்டும். அன்பில் கரைய வேண்டும். அன்பு என்று வந்து விட்டால், உயர்வு தாழ்வு, ஆண்/பெண் பேதம் எல்லாம் இல்லை. 

முருகனே வள்ளியின் பதம் பணிகிறான் என்றால் மற்றவர் எம்மாத்திரம்? 

சிந்தனைக்கு உரியது. 

 [

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html

மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html

மெய்யியல் - பகுதி 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html

மெய்யியல் - பகுதி 4

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html

மெய்யியல் - பகுதி 5 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html

மெய்யியல் - பகுதி 6 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html

மெய்யியல் - பகுதி 7

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/7.html

நின்று தயங்குவதே 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_14.html

வள்ளி பதம் பணியும் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_20.html

விடுவாய் வினையா வையுமே 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_26.html

மெய்ப் பொருள் பேசியவா

https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post.html

 பரிசென் றொழிவேன் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_7.html

எதிரப் படுவாய்

https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_26.html

மெய்ப் பொருள் பேசியவா

https://interestingtamilpoems.blogspot.com/2022/12/blog-post_11.html

அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_8.html

முருகன் கழல் பெற்று உய்வாய்

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_14.html

என்று அருள்வாய் ? 

பேராசை எனும் பிணியில் பிணிபட்டு

யாமோதிய கல்வியும் பாகம் 1 

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_29.html

 யாமோதிய கல்வியும் பாகம் 2

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_29.html

உதியா மரியா

https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post.html

மிடியென் றொரு பாவி

https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_12.html

உபதேசம் உணர்தியவா 

]

Saturday, February 18, 2023

கந்தரனுபூதி - உபதேசம் உணர்தியவா

 கந்தரனுபூதி - உபதேசம் உணர்தியவா 

(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 

சமயப் பெரியவர்கள் இறைவன் பற்றியும், வாழ்க்கை, வினை என்பன பற்றியும் பல கருத்துகளை கூறுகிறார்கள். அதெல்லாம் சரியா? அவற்றை எப்படி ஏற்றுக் கொள்வது? அதற்கு என்ன அடிப்படை? சும்மா நம்பிக்கை என்று சொல்லிவிட்டால் போதுமா?  

அதுமட்டும் அல்ல, அந்த உண்மைகள் எல்லாம் என்றோ சொல்லப்பட்டவை. அவை இன்றைய நடைமுறை வாழ்க்கைக்குப் பொருந்துமா? அவற்றை கடைபிடிக்க முடியுமா என்றெல்லாம் கேள்விகள் எழும். 

உண்மையை அறிந்து கொள்ள முக்கியமான மூன்று வழிகளை சொல்கிறார்கள்.

அவற்றிக்கு பிரமாணங்கள் என்று பெயர்.

அவை,  காட்சிப் பிரமாணம், அனுமானப் பிரமாணம், ஆகமப் பிரமாணம் என்பன. 

காட்சிப் பிரமாணம் என்றால் காண்பது மட்டும் அல்ல, கேட்பது, உணர்வர்து, முகர்வது, எல்லாம் அடங்கும். அதாவது புலன்கள் வழியே அனுபவ பூர்வமாக அறிவது. 

நேற்று நான் ஒரு வெள்ளை யானை பறந்து போவதைப் பார்த்தேன் என்று சொன்னால் யாராவது நம்புவார்களா?  ஏன் நம்ப மாட்டார்கள்?  ஒரு நம்பிக்கைதான் என்று சொல்லி நம்பவேண்டியது தானே? 

இல்லை. எனக்குக் காட்டு. நான் பார்த்தால் நம்புகிறேன் என்று சொல்லுவார்கள். 

இது ஒருவிதத்தில் உண்மையை அறிய உதவும் ஒரு கருவி. எதையும் பார்த்து, அறிந்து கொள்வது. 

அடுத்தது, அனுமானம். சிந்தித்து அறிவது. காலையில் எழுந்து வெளியே பார்த்தால் சாலை எல்லாம் ஈரமாக இருக்கிறது. இரவு மழை பெய்திருக்கிறது என்று அனுமானிக்கிறோம். நாம் பார்க்கவில்லை. இருந்தும், இதுதான் நடந்திருக்கும் என்று அனுமானிக்கிறோம் அல்லவா. 

அது, உண்மையை அறியும் இரண்டாவது வழி. 

மூன்றாவவது, சற்று சிக்கலான வழி. ஆகமப் பிரமாணம். அதாவது, பெரியவர்கள் சொல்வதை கேட்டு, அவர்கள் பிழையாக சொல்ல மாட்டார்கள் என்று அதை ஏற்றுக் கொள்வது. 

அது எப்படி முடியும் என்று கேட்டால், உடம்பு சரியில்லை என்று மருதுவரிட்ம் செல்கிறோம். அவர் ஒரு மருந்து எழுதித் தருகிறார். அதை வாங்கி உண்கிறோம். அதெல்லாம் முடியாது, இந்த மருந்து என்னை குணப்படுத்தும் என்று நிரூபி என்று யாரும் மருத்துவரிடம் வாதம் செய்வது இல்லை. மருத்துவம் படித்து இருக்கிறார். அவர் சொல்வது சரியாகத் தான் இருக்கும் என்று நம்புகிறோம். 

அது ஆகமப் பிரமாணம். 

இதில், ஒரு மருத்துவர் ஒன்று சொல்கிறார், மற்றொரு மருத்துவர் வேறொன்றைச் சொல்கிறார். எதை நம்புவது என்ற குழப்பம் வரலாம். 

உள்ளதுக்குள் மிகவும் அறிவும், அனுபவமும் உள்ள ஒரு மருத்துவர் சொல்வதை கேட்பதுதானே சரியான ஒன்றாக இருக்க முடியும்?

நம் பெரியவர்கள், இறைவனிடம் இருந்து அவர்கள் பெற்றதை நமக்குச் சொல்கிறார்கள். அதைவிட பெரிய ஆள் யார் இருக்கிறார். எனவே, அவர்கள் சொல்வது, இறைவன் சொல்வது மாதிரித்தான்.

அருணகிரிநாதர் சொல்கிறார், 

"யாராலும் எளிதாக அறிய முடியாத உண்மைப் பொருளை எனக்கு நீ உபதேசம் செய்தாய்" என்று. 

அருணகிரிநாதர் முருகனிடம் இருந்து நேரடியாக உபதேசம் பெற்றார். பின் பெற்ற உபதேசத்தை நமக்குச் சொல்கிறார். அதில் தவறு இருக்குமா?

பாடல்  

அரிதாகிய மெய்ப்பொருளுக்கு அடியேன் 

உரிதா வுபதேச முணர்த்தியவா 

விரிதாரண விக்ரம வேளியையோர் 

புரிதாரக நாக புரந்தரனே 

பொருள்

https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_18.html

(pl click the above link to continue reading)

அரிதாகிய = யாராலும் எளிதில் அறிய முடியாத 

மெய்ப்பொருளுக்கு = உண்மையான பொருளை, ஞானத்தை 

அடியேன் = அடியவனான எனக்கு 

உரிதா = உரிதானது, பெற்றுக் கொள்ள தகுதியானவன் என்று 

வுபதேச = உபதேசம் செய்து 

முணர்த்தியவா  = என்னை உணரச் செய்தவனே 

விரிதாரண = தாரணை என்றால் விடாமல் மேலிருந்து கீழே வருவது. எண்ணை தாரை என்பார்கள். விரிந்த உன் அருளை சமமாக் எல்லோருக்கும் விடாமல் அருள்பவனே 

விக்ரம = பலம் பொருந்தியவனே 

வேள்   = வேள் என்றால் மன்மதன். மன்மதனைப் போல் அழகானவனே 

இமையோர் = கண் இமைக்காமல் இருக்கும் தேவர்களின் 

புரிதாரக நாக = அதாரமானவனே 

புரந்தரனே = காப்பவனே 

எனக்கு முருகன் நேரடியாகச் சொன்னார் என்கிறார். 