Showing posts with label கும்ப கர்ணன். Show all posts
Showing posts with label கும்ப கர்ணன். Show all posts

Wednesday, April 11, 2012

கம்ப இராமாயணம் - கும்ப கர்ணனின் சகோதரப் பாசம்




கும்ப கர்ணனின் பாத்திரம் சகோதர பாசத்தின் உச்சம். 

ஒருபுறம் இராவணனை காக்க எவ்வளவோ சொல்லி பார்க்கிறான். இராவணன் கேட்பதாய் இல்லை. அவனுக்காக யுத்தம் செய்து உயிர் தருகிறான். 

மறுபுறம் இன்னொரு சகோதரனான விபீஷணன் மேல் அளவு கடந்த காதல். 

சாகும் தருவாயிலும், விபீஷணன் நன்றாக இருக்கவேண்டும் என்று கவல்கிறான். 


இரண்டு கையும் இரண்டு காலையும் இழந்து, மூக்கும் காதும் அறுபட்டு கிடக்கிறான் கும்பகர்ணன். இராமனிடம் இரண்டு வரம் வேண்டுகிறான்.
 
முதல் வரம், விபீஷணனை காக்கவேண்டி
 
--------------------------------------------------------------
தம்பி என நினைந்துஇரங்கித் தவிரான் அத்தகவு இல்லான்,
நம்பி! இவன்தனைக் காணின் கொல்லும்இறை நல்கானால்;
உம்பியைத்தான்உன்னைத்தான் அனுமனைத்தான்ஒரு பொழுதும்
எம்பி பிரியானாக அருளுதியான் வேண்டினேன்.
-----------------------------------------------------------
 
தம்பி என நினைந்து = விபீஷணனை தம்பி என்று நினைத்து
 
இரங்கித் = இரக்கம் கொண்டு
 
தவிரான் அத்தகவு இல்லான் = உயிரோடு விடமாட்டான் அந்த நல்ல குணம் இல்லாதாவன் (இராவணன்)
 
நம்பி! இவன்தனைக் காணின் கொல்லும் = நல்லவனான இவனைப் பார்த்தால் கொன்றுவிடுவான்
 
இறை நல்கானால் = அவன் அப்படி இவன் மேல் இரக்கம் காட்டா விட்டால்
 
உம்பியைத்தான் = உன் தம்பியாகிய லக்ஷ்மணனைத்தான்
 
உன்னைத்தான் = உன்னைத்தான்
 
அனுமனைத்தான் = அனுமனைத்தான்
 
ஒரு பொழுதும் = எப்போதும்
 
எம்பி பிரியானாக = என் தம்பியாகிய விபீஷணன் பிரியாமல் இருக்க
 
அருளுதி = அருள் தருவாய் என
 
யான் வேண்டினேன் = நான் உன்னை வேண்டினேன்
 
இது கும்பகர்ணன் கேட்ட முதல் வரம். உயிர் போய் கொண்டு இருக்கிறது. கை, கால், மூக்கு, காது இழந்து ஒண்ணும் செய்ய இயலாமல் கிடக்கிறான். அப்ப அவன் கேட்ட வரம், விபீஷணனை பார்த்துக் கொள் என்று.

என்ன ஒரு சகோதரப் பாசம் 

Sunday, April 8, 2012

கம்ப இராமாயணம் - கை நடுங்கிய இராமன்


இராமயணத்தை படிக்கும் போது கம்பனுக்கு கும்பகர்ணன் மேல் ஒரு தனிப் பாசம் இருப்பதாகவே தோன்றுகிறது.

கும்பகர்ணனிடம் போரிட்டு அனுமன் விலகி சென்று விட்டான்.

இராமன் கும்பகர்ணனின் கை இரண்டையும் அறுத்தான், பின் கால் இரண்டையும் அறுத்தான்.

அப்போதும் கும்ப கர்ணன் மிக வீரமாக போரிடுகிறான். கையும் காலும் இல்லாமல் எப்படி போரிடுவது ?

வாயால்,பெரிய கற்களை கவ்வி, அதை நாக்கால் வேகமாக துப்பி வானர சேனைகளை வாட்டி வதைக்கிறான்.

அந்த வீரத்தை கண்டு இராமனின் கையும் நடுங்கியதாம். இதை விட கும்ப கர்ணனின் வீரத்திற்கு சிறப்பு சேர்க்க முடியுமா ?

இதோ அந்தப் பாடல்.....

Saturday, April 7, 2012

கம்ப இராமாயணம் - கும்ப கர்ணன் இராமனை சந்திக்கும் தருணம்

கும்ப கர்ணன் ஒரு இனிமையான பாத்திரம். அவனுக்கு நண்பர்கள் இருந்து இருப்பார்களா ? அவனுக்கு மனைவி உண்டா ? பிள்ளைகள் உண்டா ? தெரியவில்லை. ஆனால், ரொம்ப நல்லவன் மாதிரிதான் தோன்றுகிறது.

இராவணனாவது மாற்றான் மனைவியை கவர்ந்தான். கும்பகர்ணன் அப்படி எந்த தவறும் செய்யவில்லை. இராவணனுக்கு நல்லது எடுத்துச் சொன்னான். இடித்து கூட சொன்னான் (பேசுவது மானம், இடை பேணுவது காமம், கூசுவது மானிடரை). இராவணன் கேட்கவில்லை. அதற்காக விபீஷணன் மாதிரி இராவணனை விட்டுவிட்டு செல்லவில்லை.

கடைசி வரை போராடி உயிர் கொடுக்கிறான். "நான் இறந்த பிறகாவது சீதையையை விட்டு விடு " என்று கெஞ்சுகிறான், இராவணனிடம்.

ரொம்ப அன்பு உள்ளவனாக அவனை காண்பிக்கிறான் கம்பன். தவறே செய்தால் கூட, அண்ணனுக்காக உயிர் கொடுக்கிறான். அவனை திருத்த நினைக்கிறான். விபீஷணன் மேல் அளவு கந்த காதல் வைத்து இருக்குகிறான்.
விபீஷணனை இராவணனிடம் இருந்து காப்பாற்றும்படி இராமனிடம் வேண்டுகிறான். விபீஷணன், கும்ப கர்ணனை பார்க்க வந்த போது "ஏன் தனியா வந்த, சீக்கிரம் போய் விடு, இராவணனால் உனக்கு ஏதாவது ஆபத்து வந்து விடும் என்று ஆதங்கப் படுகிறான்".



யுத்த களம். முதன் முதலாக கும்ப கர்ணன் இராமனை பார்க்கிறான்.
என்ன சொல்லி இருப்பான் ?
மூன்று விஷயங்கள் சொல்கிறான் இராமனிடம்.....
அடுத்து வரும் blog - ல் பார்க்கலாம்

கம்ப இராமாயணம் - கும்ப கர்ணனின் வீரம்

கும்பகர்ணன் பெரிய வீரன். பெரிய தைரியசாலி. பெரிய பராகிரமம் படைத்தவன்.
அவன் வீரத்தை, தைரியத்தை எடுத்துச் சொல்ல வேண்டும் ? கம்பன் யோசிக்கிறான்.
இராமன் ஒரு வில், ஒரு சொல், ஒரு இல் (ஒக்க மாட, ஒக்க பான, ஒக்க பத்தினி). ஒரு வில்லுனா ? எல்லாரும் ஒரு வில்லு தான் வச்சு இருப்பாங்க ? அஞ்சாறு வில்லா தூக்கிட்டு போவாங்க. ஒரு வில்லுனா, ஒரு இலக்குக்கு ஒரு அம்பு தான். குறி தப்பவே தப்பாது. இராமன் அம்பு பட்டால், அம்பு பட்டவன் சாக வேண்டியது தான்.
தாடகைக்கு ஒரு அம்பு. வாலிக்கு ஒரு அம்பு. காரனுக்கு ஒரு அம்பு. பரசுராமனுக்கு ஒரு அம்பு. ஏழு மரா மரங்களை துழைத்தது ஒரு அம்பு. அவ்வளவு ஏன், இராவணனை கொன்றதும் ஒரே ஒரு அம்பு தான் (தடவியதோ ஒருவன் வாளி).
ஆனால் கும்பகர்ணனுக்கு மட்டும் ஒரு அம்பு பத்தவில்லை ? ஒண்ணு பத்தாட்டி ஒரு இரண்டு மூணு அம்பு விட்டு இருப்பாரா ....?