Showing posts with label kaalamegam. Show all posts
Showing posts with label kaalamegam. Show all posts

Monday, August 13, 2012

இலக்கியத்தில் நகைச்சுவை - வால் எங்கே, வயிறு எங்கே ?


இலக்கியத்தில் நகைச்சுவை - வால் எங்கே, வயிறு எங்கே ?


கவி என்ற தமிழ் சொல்லுக்கு கவிஞர் என்றும், குரங்கு என்றும் இரண்டு அர்த்தம் உண்டு.

ராயர் சபையில் சில பேர் தங்களை "கவிகள்" என்று சொல்லிக் கொண்டு திரிந்தனர். அவர்களை பார்த்து காளமேகப் புலவர் கேட்கிறார் 

"நீங்கள் கவிகள் என்றால், உங்கள் வால் எங்கே, நீண்ட வயிறு எங்கே, முன்னால் இருக்கும் இரண்டு கால்கள் எங்கே, குழிந்த கண்கள் எங்கே..." என்று  கிண்டலாகக் கேட்கிறார்...



வால் எங்கே? நீண்ட வயிறு எங்கே? முன் இரண்டு
கால் எங்கே? உள்குழிந்த கண் எங்கே? சாலப்
புவிராயர் போற்றும் புலவீர்காள் நீவிர்
கவிராயர் என்று இருந்தக்கால்

Sunday, June 3, 2012

இலக்கியத்தில் நகைச்சுவை - நீரும் மோரும்


இலக்கியத்தில் நகைச்சுவை - நீரும் மோரும்


தமிழ் இல்லக்கியத்தில் நகைச்சுவைக்கு பஞ்சம் இல்லை. நகைச்சுவை, கிண்டல், நையாண்டி, நக்கல் என்று எல்லாம் நிறைந்து கிடக்கிறது.

நகைச்சுவையில் காளமேகம் முதல் இடம் வகிக்கிறார். சிலேடை, கிண்டல் எல்லாம் அவருக்கு கைவந்த கலை.

ஒரு முறை அவர் ஒரு ஆயர் பெண்ணிடம் மோர் கேட்டார். அந்த மோரில், மோரை விட தண்ணீர் அதிகம் இருந்தது. அந்தக் காலத்திலேயே கலப்படம் அவ்வளவு இருந்திருக்கிறது !

அந்த மோரை பார்த்து பாடுகிறார்...

"வானத்தில் இருக்கும் போது மேகம் என்று பெயர் பெற்றாய்,
மண்ணில் வந்த பின் நீர் என்று பேர் பெற்றாய்,
ஆய்ச்சியர் கையில் வந்த பின், மோர் என்று பெயர் பெற்றாய்
இப்படி மூன்று பெயர் உனக்கு"

என்று தண்ணியான அந்த மோரை பற்றிப் பாடுகிறார்.