Saturday, April 28, 2012

கம்ப இராமாயணம் - இராமனுக்கு எத்தனை உயிர் ?

கம்ப இராமாயணம் - இராமனுக்கு எத்தனை உயிர் ?


சீதையை பிரிந்து இராமன் இருக்கிறான். உடலும், உள்ளமும் சோர்ந்து போய் இருக்கிறான். அப்படி சோர்ந்து போன சமயம்,

இராமனைப் பார்த்தால் ஏதோ உயிர் இல்லாதாவன் மாதிரி தோன்றுகிறது.

அத்தனை அயர்ச்சி. சுக்ரீவன் இராமனை தேற்றுகிறான்.

கொஞ்சம் தேறுதல் அடைகிறான். உயிர் வந்த மாதிரி இருக்கிறது. சற்று நேரம் கழித்து மீண்டும் சோர்வு...ஏதோ இராமன் ஒவ்வொருமுறையும் உயிர் இழந்து மீண்டும் பெற்றது மாதிரி தோன்றுகிறது...

எத்தனை முறை தான் அவனுக்கு உயிர் போய் வருமோ ?

Friday, April 27, 2012

திருக்குறள் -ரொம்ப போரடிக்குதா ?

திருக்குறள் -ரொம்ப போரடிக்குதா ?


சில சமயம் நமக்கு வாழ்க்கை ரொம்ப போரடிக்கிற மாதிரி இருக்கும். என்னடா இது, யாருமே இல்லையா நமக்குன்னு ரொம்ப தனிமையா, வெறுப்பா கூட இருக்கும். 

இப்படி போரடிக்காம இருக்க வள்ளுவர் ஒரு வழி சொல்றார்....

Thursday, April 26, 2012

திரு வாசகம் - உண்மையையை தவிர வேறு இல்லை


திரு வாசகம் - உண்மையையை தவிர வேறு இல்லை

உண்மை என்பது ஒன்றானதா ? அல்லது பலவானதா ? இன்று நாம் உண்மை என்று நினைப்பது நாளை மாறலாம் இல்லையா ? என்றுமே மாறாத உண்மை என்று ஒன்று இருக்கிறதா ?

இருக்கிறது என்கிறார் மணி வாசகர் இந்தப் பாடலில்

குறுந்தொகை - அவர் எப்படி இருக்காரோ ?

குறுந்தொகை - அவர் எப்படி இருக்காரோ ?

கணவன் வெளியூர் போனால், மனைவி அவனைப் பற்றி கவலைப் படுவாள். சரியான நேரத்துக்கு சாபிட்டாரோ இல்லையோ, புது இடத்துல தூக்கம் வருமோ இல்லையோ, மாத்திரை எல்லாம் சரியான நேரத்துக்கு மறக்காம சாப்பிடணுமே, என்று ஆயிரம் கவலை இருக்கும்.

ஆனா ஊர் என்ன சொல்லும் ? "புருசன பிரிஞ்சு ஒரு நிமிஷம் கூட இருக்க முடியலையோ ? அதுக்குள்ள  தேடிருச்சோ ?" என்று நையாண்டி செய்யும்.

பெண்ணின் மனதை யார் தான் புரிந்து கொள்ள முடியும் ?

இங்கே ஒரு கணவனை பிரிந்த குறுந்தொகை பெண் சொல்கிறாள்:

Tuesday, April 24, 2012

கம்ப இராமாயணம் - சீதை தீக் குளித்த பின்


கம்ப இராமாயணம் - சீதை தீக் குளித்த பின்

சீதை தீயில் இறங்கிய உடன், அவள் கற்பின் சூடு தாங்காமல் அக்னி தேவன் அவளை கொணர்ந்து இராமனிடம் தந்து, இவள் கற்பில் சிறந்தவள் என்று சொல்கிறான்.

அப்போது இராமன் சீதையிடம் ஒரு மன்னிப்பு கூட கேட்கவில்லை. "தெரியாமல் உன் கற்பை சந்தேகப் பட்டேன்" என்றோ "உலகுக்கு உன் கற்பை நிரூபிக்க தான் அப்படி செய்தேன்" என்றோ ஒன்னும் சொல்லவில்லை.

அவள் அருகில் வருகிறான். அக்னி தேவனைப் பார்த்து சொல்கிறான்....

கம்ப இராமயாணம் - கும்ப கர்ணா, கெட் அவுட்

கம்ப இராமயாணம் - கும்ப கர்ணா, கெட் அவுட் 

கும்ப கர்ணன் எவ்வளவோ எடுத்து சொல்கிறான் சீதையை விட்டு விடும்படி. இராவண கேட்பதாய்  இல்லை. கடைசியாக சொல்கிறான்....

மானுடர் இருவரை வணங்கி மற்றும் அக்
கூன் உடைக் குரங்கையும் கும்பிட்டு உய்தொழில்
ஊன் உடை உம்பிக்கும் உனக்குமே கடன்யான் அது முடிக்கிலேன் எழுக போகென்றான்




மானுடர் இருவரை வணங்கி  = இராம லட்சுமணர்களை வணங்கி

மற்றும் அக் கூன் உடைக் குரங்கையும் கும்பிட்டு = அனுமன் மற்றும் இதர கூனுடைய குரங்குகளை கும்பிட்டு

உய்தொழில் = உயிர் பிழைக்கும் தொழில்

உம்பிக்கும் உனக்குமே கடன் = உன் தம்பியான விபீஷனனுக்கும் உனக்குமே கடன்


யான் அது முடிக்கிலேன் = என்னால அது முடியாது




எழுக போகென்றான் = நீ எழுந்து போ என்றான்




ஒரு புறம் கும்ப கர்ணனின் தன் மான உணர்ச்சியை தூண்டி விடுகிறான் - மானிடர்களையும், குரங்குகளையும் உன்னால் வணங்க முடியுமா ? நீ செஞ்சாலும் செய்வ, நான் மாட்டேன் என்று அவனை சமாதானத்தில் இருந்து விலக்கி போருக்கு செல்ல தூண்டுகிறான்.

மறுபுறம், அவனின் சகோதர பாசத்தை தொடுகிறான். உன் தம்பி விபிஷணன் போய் விட்டான், நீயும் போய் விடு, நான் தனியாக இருப்பேன் என்று மறைமுகமாக சுட்டுகிறான்.


அதாவது கும்ப கர்ணன் சொன்ன வாதங்களை எல்லாம் விட்டு விட்டான்...அதற்க்கு அவனிடம் பதில் இல்லை. அவனை உசுப்பு ஏத்தி விட்டு, அவனை போருக்கு செல்ல வைக்க வேண்டி, இப்படி சொல்கிறான். கும்ப கர்ணன் provoke ஆனானா இல்லையா ? இதற்க்கு கும்ப கர்ணன் என்ன சொன்னான் ?




Monday, April 23, 2012

கம்ப இராமாயணம் - அக்னி பிரவேசம்


கம்ப இராமாயணம் - அக்னி பிரவேசம் 


இராமாயணத்தில், அக்னி பிரவேசம் ரொம்பவும் சங்கடமான இடம்...வாலி வதை போல.

சீதையை காணாமல் இராமன் தவிக்கிறான், அழுது புலம்புகிறான், தூக்கம் வராமல் கஷ்டப்படுகிறான். பின் சண்டையிட்டு வென்ற பின் சீதை வருகிறாள்.

நீண்ட நாள் பிரிந்த தவிப்பு இருக்கும் தானே?

அவளிடம் அன்பாக "நீ எப்படி இருக்க, ரொம்ப கஷ்டப் பட்டியா...ரொம்ப மெலிஞ்சு போய்டியே..." என்று எல்லாம் கேட்பதை விட்டு விட்டு, காதில் கேட்க முடியாத சொற்களை அவள் முன் வீசுகிறான்
 
'ஊண்திறம் உவந்தனை; ஒழுக்கம் பாழ்பட, மாண்டிலை;
முறைதிறம்பு அரக்கன் மாநகர் ஆண்டுறைந்து அடங்கினை;
அச்சம் தீர்த்து இவண் மீண்டது என்? நினைவு, :எனை 
விரும்பும்" என்பதோ?'

 
ஊண்திறம் உவந்தனை = நல்ல இரசிச்சு சாப்பிட்ட (இராவணன் அரண்மனையில்). (ஊண் = உணவு; உவத்தல் = சந்தோசப் படுதல் )
 
ஒழுக்கம் பாழ்பட, மாண்டிலை = உன் ஒழுக்கம் கெட்ட பின்னும், நீ இறக்கவில்லை
 
முறைதிறம்பு = முறை கெட்ட (திறம்புதல் = பிறழ்தல் )
 
அரக்கன் மாநகர் = அரக்கனின் பெரிய நகரமான (இலங்கையில் )
 
ஆண்டுறைந்து அடங்கினை = நீண்ட நாள் தங்கி settle ஆகிட்ட

(ஆண்டு = ரொம்ப நாள்; ஆண்ட்டாண்டு காலம் அழுது புரண்டாலும் மாண்டார் மீண்டு வருவதில்லை )

அச்சம் தீர்த்து = (இப்ப ) ஒரு பயமும் இல்லாமல்
 
இவண் மீண்டது என்? = நீ எப்படி இங்கு வந்தாய் ?
 
நினைவு, எனை விரும்பும்" என்பதோ?' = நீ மனசுல நான் உன்னை இன்னமும் விரும்புவேன் என்று நினைத்துக் கொண்டாயா ?


பாவம் இல்ல சீதை ? பெண்ணுக்கு அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை சோதனைதான்.